(9). | (1) நீயே, வினைமாண் (2) காழகம் வீங்கக் கட்டிப் புனைமாண் மரீஇய வம்பு தெரிதியே |
எ - து: நீ தொழின் மாட்சிமைப்பட்ட 1கைச்சரட்டை இறுகக்கட்டி நீ மருவிப்போர்ந்த புனைதன் மாட்சிமைப்பட்ட (3) அம்புகளைத் தெரியா நின்றாய்; எ - று. இவட்கே, சுனைமா (4) ணீலங் காரெதிர் பவைபோ லினைநோக் குண்கண் ணீர்நில் லாவே எ - து; இக்காலத்து இவளுக்குச் சுனையிடத்து மாட்சிமைப்பட்ட நீலம் மழையை எதிர்கொள்ளுமவை நீர் சொரியுமாறுபோல வருந்தும் பார்வையினையுடைய மையுண்கண் நீர்நில்லாவாய் வீழாநிற்கும்; எ - று. கண், நீர் விழுமென இடத்து நிகழ்பொருளின் றொழில் இடத்துமேல் நின்றது. இணைநோக்கும் பாடம்.
1. (அ) "நீயே, வினைமாண்............ணீர் நில்லாவே" என்னும் பகுதி கொச்சகக்கலியுள் இடைநிலைப் பாட்டுத் தாழிசை யின்றி வந்ததற்கும் (தொல். செய். சூ. 130. பே.) (ஆ) "நீயே, வினைமாண்.... தெரிதியே" என்னும் பகுதி சீர்முழுதுங் கூனாகிவருதல் அளவடிக்குரிய தென்புழிக் கலிப்பாவிற் கூன் வந்ததற்கும் (தொல். செய். சூ. 47.'சீர்கூனாதல்'இள.) (இ) கொச்சகத்தில் தாழிசை தாழம் பட்ட வோசையின்றி வந்ததற்கும். (தொல். செய்.சூ. 130.நச்.) மேற்கோள். 2. (அ) "வம்புகளை வறியாச் சுற்றமொ டம்புதெரிந்து" (ஆ) "விரற்றலைப் புட்டில் வீக்கி வெஞ்சிலை கணையோ டேந்தி" சீவக, 2202. (இ) "முன்கைக், கார்விற் செறிநா ணெறிகைச்செறி கட்டி கட்டி" பெரிய. கண்ணப்ப. 60 (ஈ) "கோதை தங்கு கரத்தில் வில்" (உ) "விரற்புனை கோதைவல் வில்லின் வல்லவர்" வில்லி. பதின் மூன்றாம். 23, 254, என்பவை ஈண்டறியற் பாலன. 3. அம்புகளை ஆராய்ந்து கைக்கொள்ளுதலை அம்புதெரித லென்றார்; இவ்வழக்கை, 'தெரிகணை நோக்கி' (கலி. 39: 22; ) என்பதன் குறிப்பிற் காண்க. 4. (அ) "கனை பெய னீலம்போற் கண்பனி கலுழ்பவால்" கலி. 48: 15 (ஆ) "தண் கயம் பயந்த வண்காற் குவளை, மாரி மாமலர் பெயற் கேற் றன்ன, நீரொடு நிறைந்த பேரமர் மழைக்கண், பனிவா ரெவ்வம்" அகம். 395. (பிரதிபேதம்) 1 கைச்சாட்டை (என்று படித்தலுமாம்).
|