(1) | வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு வானீங்குவைப்பின் (2)வழங்காத்தேர் நீர்க்கவாஅங் கானங்கடத்தி ரெனக்கேட்பின் (3)யானொன் றுசாவுகோவைய சிறிது; |
எ - து : முதுவேனிற் காலத்தாலே வருந்தின உடல் சிறிதாக வருந்தும் ஓய்ந்த களிறுகள் (4) மழைநீங்குதற்குக்காரணமான கொடுமையையுடைய ஊர்களிலே தண்ணீருண்டற்கு (5) ஊரப்படாத பேய்த்தேரைத் தண்ணீரென்று அவாவுங் காட்டை நீர் போவீரென்று யான் கூறுதலைக் கேட்பின் நீர் செல்லுங்காலத்து அவட்கு நிகழ்வதொன்றை யான் சிறிது நும்மொடு உசாவுவேனோ? எ - று. இதனால், தலைவற்குச் சூழ்ச்சிபிறந்தது. இதுதரவு. (5). | (6) நீயே, செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழநின் கைபுனை வல்வின் 1ஞாணுளர் தீயே |
பூர்தலும் அவன் புனைமாண் மரீஇய அம்பு தெரிந்தவழி இவள் இனைநோக்குண்கண் நீர்நில்லாமையும் பிறவுமாம்’ என இவ்வடிகள் உரை நடையாக அமைக்கப் பெற்றுள்ளன. 1. (அ) "யாளை, நீர்மருங்கறியாது தேர்மருங்கோடி, யறுநீரம்பியி னெறிமுத லுணங்கு, முள்ளுநர்ப் பனிக்கு மூக்கருங் கடத்திடை" அகம். 29. (ஆ) 'வேனிலுழந்த வறிதுயங்கோய்களிறு’ என்பது ஓய்தல் நுணுக்கமாகிய குறிப்புணர்த்து மென்பதற்கு (தொல். உரி. சூ. 34. சே; 26. தெய்; 32. நச். இ - வி. சூ. 281. நன். உரி. சூ. 18. இரா.) மேற். 2. "வெண்ட ரங்கமென வீசுபேயிரத மிஞ்சு கானநெறி" வில்லி. 3. உசாவென்பது சூழ்ச்சி யென்னும் பொருளில் வருதற்கு "யானொன் றுசாவுகோ வைய சிறிது" என்பது மேற்கோள். தொல். உரி. சூ. 56. ‘உயாவே’ தெய். 4. மழை நீங்குதற்குக் காரணமான கொடுமையென்றது (அ) மறவர் செய்யும் தகாக்கொலை முதலியவற்றை. (ஆ) பாண்டியன் கோவலனைக் கொன்றதனால் அவனாடு பன்னீராண்டு வற்கட முற்றதென்னும் செய்தியும் (இ) ‘விண்பொயதனால் மழை விழாதொழியினும்’ தே.என்பதும், ஈண்டுக் கருதத் தக்கன. 5. "உருவில் பேஎ யூராத் தேரொடு" அகம். 67. 6. யாழவென்பது முன்னிலை யசைச்சொல்லாய் வருதற்கு ‘நீயே, செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழநின்.......................ணுளர்தீயே’ என்பது மேற்கோள். நன். இடை. சூ. 21. மயிலை. வி. இரா. இ - வி. சூ. 276. (பிரதிபேதம்) 1 ஞாணூர்தீயே.
|