45

(7). (1)வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு
வானீங்கு வைப்பின் வழங்காத்தேர் நீர்க்கவாஅங்
கானங் கடத்தி ரெனக்கேட்பின் யானொன்
றுசாவுகோ வைய சிறிது;
5நீயே, செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழநின்
கைபுனை வல்வின் ஞாணுளர் தீயே
இவட்கே, செய்வுறு மண்டில மையாப் பதுபோன்
மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே;
9 நீயே, வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப்
புனைமாண் மரீஇய வம்பு தெரிதியே
இவட்கே, சுனைமா ணீலங் காரெதிர் பவைபோ
லினைநோக் குண்கண் ணீர்நில் லாவே;
13நீயே, புலம்பி லுள்ளமொடு பொருள்வயிற் செலீஇய
வலம்படு திகிரி வாய்நீ வுதியே
இவட்கே, அலங்கிதழ்க் கோடல் வீயுகு பவைபோ
லிலங்கே ரெல்வளை யிறையூ ரும்மே;
17எனநின்;
சென்னவை யரவத்து மினையவ ணீநீப்பிற்
றன்னலங் கடைகொளப் படுதலின் மற்றிவ
னின்னுயிர் தருதலு மாற்றுமோ
முன்னிய தேஎத்து முயன்றுசெய் பொருளே.

இது, பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகற்கு நீர் பிரிகின்றீரென்று யான் கூறத் தலைவி கேட்பின் அவட்கு அக்காலத்து நிகழ்வனவற்றை நும்மோடு ஆராய்வதுடையேன் ; நீர் செய்யும்பொருள் இவளுயிரையுந் தருகிற்குமோ எனச் செலவழுங்கிக் கூறியது.

இஃது "உடன்சேறல் செய்கையொ டன்னவை பிறவு - மடம் பட வந்த தோழி கண்ணும்" (2) என்பதனுட் செய்கை கூறுகின்றது.


1. தேர்நிலை யுரைத்த லென்பதற்கு ஆராய்ச்சி நிலையாற் கூறுதலென்று பொருள் கூறி, அதற்கு (தொல். கற். சூ. 32. ‘காமநிலை’) இச்செய்யுளை மேற்கோள் காட்டுவர், இளம்பூரணர். பேராசிரியர். தொல். செய். 155-ம் சூத்திரவுரையில் "வேனிலுழந்த வறிதுயங் கோய்களி றென்னும்பாட்டு, தரவும்போக்கும் பாட்டிடை மிடைந்து ஐஞ்சீரடுக்கி வந்தது, இதனுள் தரவடி நான்கும் வெண்பாவாயினும் அச்செய்யுண் முழுவதும் வெண்பா வன்மையிற் கொச்சகமாயிற்று". என்பர்.

2. தொல். கற். சூ. 5. நச். இதனுரையில் ‘செய்கைகளாவன : தலைவன் கைபுனை வல்வில் நாணுளர்ந்த வழி இவள் மையில் வாண்முகம் பசப்