"பெற்றமுமெருமையு மரையுமாவே" (1) என்றதனான் மரையாவென்றார். இதன்கண்ணே, இவள் தன் (2) பெண்டன்மையாற் கூறத்தகாதது கூறக் கேட்ட யாம், உலக ஒழுக்கத்தை அறிந்து, இவளை உடன்கொண்டு செல்வேமாயின், இவள் தண்ணீர் பெறாத அருந்துயரம் நமக்கு மிக்க வருத்தத்தைத் தருமாகலின், இவடன்னை உடன்கொண்டு சேறல் எவ்வாற்றானுந் தகாதென்றும், யாம் அன்புபெருகுமாறு சூழ்ந்த காரியத்தினை இவள் அன்பு 1அருகும்படி சூழ்ந்தேமாகக் கருதி 2இதற்குமாறு கூறினாளென்றும் உட்கொண்டு, இனி இவளை ஆற்றுவித்துப் பிரிவேமெனச் செலவழுங்கினமை தோன்ற நிற்றலின் வேறுமொரு பொருள் தோன்றி நின்றது. இஃது "ஒருபொருணுதவிய வெள்ளடி யியலாற், றிரிவின்றி 3வருவது கலி வெண் பாட்டே" (3) என்பதனாற் பாட்டிற் பொருளோடே வேறும் ஒரு பொருள் தோன்றி நின்று பதினோரடியான் வந்த கட்டளைக்கலி வெண்பாட்டு. வேறும் ஒரு பொருள் 4தோன்ற நிற்றல் ஏனைப் பாக்கட்குஞ் சிறிதுளவேனும் பொருளாற் செய்யுள் வேறுபட்டுவரும் விதியின்மையின் ஆண்டு 5அவற்றாராய்ச்சியின்றாயிற்று. இது வெண்பாவாய் வருதலிற் குறித்த பொருளை மறையாது செப்பிக் கூறவேண்டும். இது குறித்த பொருளை மறைத்து வந்தமையானும் தனக்கு உரிய வெண்டளையான் வந்தமையானங் கலிவெண்பாட்டாயிற்று. "நெடுவெண் பாட்டே முந்நா லடித்தே, குறுவெண் 6பாட்டி னளவெழு சீரே"(4) எனவே, (5) நெடுவெண்பாப் பன்னீரடியின் இகவாவென்றலின் இதற்குப் பன்னீரடி பெருமையென்று கொண்டார். 7இக்கலித்தொகையின் இவ்விலக்கணம் பெற்றுவரும் பாட்டு எட்டுள. அவை வந்தவழிக்கூறுதும். பன்னீரடியின் இகந்துவருங் கலிவெண்பாட்டுக்களுக்கும் அவை வந்துழி அவற்றவற்றிலக்கணங் கூறுதும். தலைவி உடன் கொண்டுபோவெனக் கூறுதல் "மரபுநிலை திரியா மாட்சிய" என்னும் (6) அகத்திணையியற் சூத்திரத்து அமைத்தாம். இதனைத் தோழி கூற்றாக்கிக் கூறின், காடு கடுமையவென்று உடன் சேறலை மறுத்துக் கூறினாற் றலைவி இறந்துபடும், அவள் இறந்துபடுதலை அறியாதிருந்தீர்போல இவை கூறலென்னென்க. (5)
1. தொல். மர. சூ. 60. இச்சூத்திரவுரையில் மரையென்பது ஆவென்னும் பெயர் பெற்றுவருதற்கு ‘மரையா மரல்கவர மாரி வறப்ப’ என்பதை மேற்கோள் காட்டினர். பே; நச். 2. கலி. 18-ஆம் செய்யுளின் உரை யிறுதிபார்க்க. 3. தொல். செய். சூ. 154. பார்க்க. 4. தொல். செய். சூ. 158. 5. ‘முந்நான்கடியின் இ[ற](க)ந்துவருதலான், நெடுவெண்பாட்டாகாது கலிவெண்பாட் டாத லுணர்க’ என்பது சில. 9. உரையிறுதி. 6. தொல். அகத். சூ. 45. (பிரதிபேதம்) 1 அறும்படி, 2 இறக்குமாறு, 3 நடப்பது, 4 தோன்றி, 5 அவை ஆராய்ச்சி, 6 பாட்டிற்களவு, 7 இத்தொகையின்.
|