எ - து: (1) நெடுந்தகாய்! பொய்யே இவளுக்கு அருளுதலை 1விரும்பிப் பாதுகாத்தலைக் கைவிட்டு நீ நயந்த அச்சுரத்திலே செல்வது 2எந்நாளிலோ அந்நாள் இவளுடைய பெறுதற்கரிய உயிரைக் கொண்டுபோம்; எ - று புறப்படல் கைவிட்டு என்ற பாடத்திற்குக் கைவிட்டுப் புறப்பட லென்க. இதனால், தலைவற்கு இழிவு பிறந்தது. (2) தாழிசையிற் கூறிய ஏனையுவமங்கள் திணைப்பொருட்கு உவமையாய் நின்றன. "பிரியுங் காலை யெதிர்நின்று சாற்றிய, மரபுடை யெதிரு முளப்படப் பிறவும்" (3) என்றதனால் புரிந்தனையென இறப்பும் இறக்குமென எதிரும் மரபிற் பிறழாமல் வந்தவாறுணர்க. இது சுரிதகம். இஃது ஒன்பதடித்தரவும் சிறுமைக்கு எல்லை கூறிய ஈரடித்தாழிசையும் பொருள்பெற்ற தனிச்சொல்லும் ஆசிரியத்திற்கு உரித்தென்ற மூவடிச் சிறுமையான் வந்த சுரிதகமும் பெற்று வந்த ஒத்தாழிசைக்கலி. (4)
(ஆ) "நின்னின், றிமைப்புவரைவாழாண் மடவோள்" கலி. 21: 12 - 3. என்பவையும் (இ) "செல்லாமை யுண்டே லெனக்குரை மற்று நின், வல்வரவு வாழ்வார்க்குரை" என்னும் குறளும் ‘தலைமகளை யொழித்து எனக்கென்றாள், தானவளென்னும் வேற்றுமையின்மையின். அக்கால மெல்லா மாற்றியிருந்து அவ்வரவு காண வல்லளல்லள், பிரிந்த பொழுதே இறந்து படுமென்பதாம்’ என்னும் அதன்விசேட வுரையும் இங்கே கருதற் பாலன. குறள். 1151. பரி. 1. நெடுந்தகை யென்பதற்கு, பெரிய மேம்பாட்டாளனென்றும் பெரிய நிலையையுடையவனென்றும் அளத்தற்கரிய தன்மையையுடையவனென்றும் புறப்பொருள் வெண்பாமலை யுரையாசிரியர் பொருள் கூறுவர். 2. "உள்ளுறை யுவம மேனை யுவமமெனத், தள்ளா தாகுந் திணையுணர் வகையே" என்னுஞ் சூத்திரத் துரைக்கண், "இனி, தள்ளாதென்ற தனானே ‘பாஅ லஞ்செவி’ என்னும் பாலைக்கலியுள் தாழிசை மூன்றும் ஏனை யுவமமாய் நின்று கருப்பொருளோடு கூடிச் சிறப்பியாது தானே திணைப்பொருள் தோற்றுவித்து நிற்பனபோல் வனவும் ................. அமைக்க" என்பர், நச். தொல். அகத். சூ. 46. நச். 3. தொல். கற். சூ. 9. நச்சினார்க்கினியருரையில், "பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட், டெந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வ, தந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே" என்னும் மேற்கோளோடு இக்குறிப்பும் உள்ளது. (பிரதிபேதம்) 1 விரும்பினையாய்ப், 2 எந்நாளிலே.
|