42

(6). (1) மரையா மரல்கவர மாரி வறப்ப
வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் (2) செல்வோர்
சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்த
முண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
5தண்ணீர்பெறாஅத் தடுமாற் றருந்துயரங்
கண்ணீர்நனைக்குங் கடுமைய காடென்றா
(3) லென்னீ ரறியாதீர் போல விவை 1கூறி
னின்னீரவல்ல நெடுந்தகா யெம்மையு
மன்பறச் சூழாதேயாற்றிடை நும்மொடு

1. (அ) தலைவரும் விழுமமென்னுஞ் சூத்திரத்து, போக்கற்கண்ணு மென்றிருப்பதனைப் பேர்த்தற் கண்ணு மெனப்பாடங்கொண்டு பெயரென்பது கூறுதற் கண்ணுமெனப் பொருள் கூறி அதற்கும், (ஆ) ஒரு பொருணுதலிய வென்னுஞ் சூத்திரத்து, கலிவெண்பாட்டு அல்லது வெண் கலிப்பாட்டு வெண்டளையான் வந்து ஈற்றடி முச்சீரான் இறு மென்பதற்கும் (தொல்.அகத். சூ. 42; செய். சூ. 146.) இளம் பூரணரும், (இ) தலைவி கற்பினுட் பிரிவாற்றாது எம்மையும் உடன் கொண்டு சென்மினென்பதற்கு (தொல். அகத். சூ. 45.)நச்சினார்க்கினியரும், (ஈ) கலிவெண் பாட்டுப் பதினோரடியான் ஒரு பொருணுதவி வந்ததற்கு (தொல். செய். சூ. 153.) பே; நச் இருவரும் இச்செய்யுளை மேற்கோள் காட்டினர். (உ) சிலப். பதிக முகவுரையில் நீரின்மை நிலையே பாலை நிலத்திற்குச் சிறப்பு என்பதற்கும், (ஊ) சிலப். 11 : 77 ‘வரிமரற்றிரங்கிய கரிபுறக் கிடக்கையும்’ என்பதன் இரண்டா மரையில், திரங்கிய வென்பதற்கு விலங்கு சுவைத்தலால் திரங்கிய வென்றுமா மென்பதற்கும் ‘மரையா மரல்கவர’ என்ற பகுதியை மேற்கோள் காட்டினர். அடியார்க்கு நல்லார். (எ) மரை மரல் தின்னுதல் "வரிமரற்பாவை மரையேறு கறிக்கும்" (ஏ) மரை ஆவெனப்படுதல்: "அண்ணன் மரையா" பதிற். 23. (ஐ) "கன்றுடை மரையா" புறம். 297.

2. "பலரு மெய்த வாளிமெய் படப்படப் பனித்துநாப், புலர நொந்து கங்கை மைந்த னிதயமும் புழுங்கினான்" வில்லி. பத்தாம். 12.

3. "ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி, பன்மைக் காகு மிடனுமா ருண்டே" என்பது பன்மை சுட்டிய பெயர்ச்சொல் ஒருமைக்குப் பொருந்தி நிற்கு மிடமுமுண்டென்னும் பொருளை அருத்தா பத்தி யாற்றந்த தென்று கூறி,
(அ) "என்னீரறியாதீர் போல விவை கூறின்"

(பிரதிபேதம்) 1 கூறல்.