எ - து: நாட்டை ஆளுகின்ற அரசர் தாம் பின்பு கலக்கமுறும்படி, அவரால் அலைத்தலைப்பெற்றநாடு பாழ்பட்டாற்போல அழகு கெட்ட முகத்தோடே வருத்தத்தைக்கொண்டு ஆற்றியிருப்பாளொருத்தியோ? எ - று. (14). | (1) ஓரிரா வைகலுட் டாமரைப் பொய்கையு ணீர்நீத்த மலர்போல நீ நீப்பின் வாழ்வாளோ |
எ - து: ஓர் இராப்பொழுதிடத்துத் தாமரையையுடைய பொய்கையுள் நீரால் நீக்கப்பட்டமலர் அவ்விராக்கால முழுவதும் வாடாமற்கிடந்தாற் போல நீ பிரிவை யாயின் ஓர் இராப் பொழுதும் உயிர் கொண்டு வாழ்வா ளொருத்தியோ? எ - று. ஓகாரம் மூன்றும், எதிர்மறை. களமும் நாடும் பூவும், பின்னும் விழவாலும் அரசனாலும் நீராலும் பழைய பொலிவு பெறும். அவைபோலன்றி இவள் நீ நீத்தபொழுதே இறந்துபடுவ 1ளென்றதனால், தலைவிக்குக் கையாறு நிகழுமென்றாள். இவை மூன்றும், தாழிசை. எனவாங்கு. எ - து: என்று யாம் நினக்குச் சொல்லாநிற்க; எ - று. ஆங்கு அசை; *அச் சுரத்தை யெனினுமாம். இது தனிச்சொல். (17). | பொய்ந்நல்கல் (2) 2புரிந்தனை புறந்தாரல் கைவிட் டெந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வ தந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே |
(எ) ‘பிழைத்தது பிழையாதாகல் வேண்டியும்’ அரசர் பிரிவரென்னு மிடத்து, ‘பிழைத்தது’ என்பதற்கு முன்னர் ஆள்பவர் கலக்குறுத்த அலை பெற்று நெறிமுறைமை தப்பிய அந்நாடு என இவ்வடிப் பொருளை உட்கொண்டு உரையிட்டிருத்தல் ஈண்டறியற் பாலது. தொல். அகத். சூ. 28. நச். 1. உடன்சேறல் செய்கையொ டன்னவை பிறவு மடம்பட வந்த தோழிக்கண்ணும் தலைவன் கூற்று நிகழுமென்று கூறி, "பாஅலஞ் செவியென்னும் பாலைக் கலியுள் ‘ஓரிராவைகலு........................நீநீப்பின் வாழ்வாளோ’ எனவும், ‘அந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே’ எனவும் உடன் கொண்டு சென்மினெனத் தோழி கூறியது கேட்ட தலைவன் இவளை உடன் கொண்டு போதல் எல்லாவாற்றானும் முறைமையன் றென்று தோழிக்குக் கூறுவனவும் நெஞ்சிற்குக் கூறுவனவும் பிறவுங் கொள்க" என்பர். நச். தொல். கற். சூ. 5. 2. (அ) ‘வினை வெஃகி நீ செலின் விடு மிவளுயிர்’ கலி. 10: 21. (பிரதிபேதம்) 1 என்றலின், இதனால், 2புரிந்திவளை.
|