(10). | (1). | கல்லெனக்கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபிற் புல்லென்றகளம்போலப் புலம்புகொண் டமைவாளோ |
எ - து: கல்லென்னும் ஓசை உண்டாக அழகுபெற்ற திருநாளை வழிபடுத்திவிட்ட பிற்றைநாட் பொலிவழிந்த இடம் போலத் தனிமை கொண்டு ஆற்றியிருப்பாளொருத்தியோ? (12). | (2). | ஆள்பவர்கலக்குற வலைபெற்ற நாடுபோற் பாழ்பட்ட முகத்தோடுபைதல்கொண் டமைவாளோ |
1. (அ) "அறா அ யாண ரகன்றலைப் பேரூர்ச், சாறுகழி வழிநாட் சோறுநசை யுறாது, வேறு புல முன்னிய விரகறி பொருந" பொருந. 1-3. (ஆ) "காதல ருழைய ராகப் பெரி துவந்து, சாறுகொ ளூரிற் புகல்வேன,் மன்ற......புல்லென், றலப்பேன் றோழியவ ரகன்ற ஞான்றே" (இ) "விழவுமேம் பட்டவென் னலனே.............தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே" குறுந். 41, 125. (ஈ) "முழவொலி முந்நீர் முழுதுடனாண்டார், விழவூரிற் கூத்தேபோல் வீந்தவிதல் கண்டும்" பழமொழி. 343. (உ) 'ஒத்துமூன் றாகு மொத்தா ழிசையே' என்னும் தேவபாணி விதிச்சூத்திரத்தின் விசேட வுரையின் கண் இவை பொருள் ஒக்குமெனவே முன்னை அகநிலையொத்தாழிசைக்கண்வரும் இடைநிலைப் பாட்டிற் பொருளொவ்வாது வருதலும் சிறுபான்மை யுண்டென்று கூறி, "கல்லெனக் கவின்பெற்ற..........புலம்புகொண் டமைவாளோ" என இடத்தியல் பொருளொழிய இடப்பொருளோடுவமங் கூறினான், "ஓரிராவைகலுட்...........................நீப்பின் வாழவாளோ" என இடப் பொருளொழிய இடத்தியல் பொருளோடு உவமங் கூறினமையின் வேறுபட்டன" என்பர் பே. தொல். செய். சூ. 142. (ஊ) கல்லென்பது ஓசைப்பொருண்மேல் வருமென்பதற்கு, (நன். இடை.சூ. 2.) மயிலைநாதரும். (எ) எனவென்கிளவி இசைப்பொருண்மை குறித்து வருமென்பதற்கு, (தொல். இடை. சூ. 10.) தெய்வச்சிலை யாரும் 'கல்லெனக்...படுத்தபின்' என்பதை மேற்கோள்காட்டினர். 2. (அ) "அலவுற்றுக் குடிகூவவாறின்றிப் பொருள்வெஃகிக், கொலையஞ்சா வினைவராற் கோல்கோடி யவனிழ, லுலகுபோ லுலறிய வுயர்மர வெஞ்சுரம்" கலி. 10. 5 - 7. (ஆ) "கொள்பொருள் வெஃகிக்குடியலைக்கும் வேந்தனும்................மழையருக்குங் கோள்" திரிகடுகம். 50. (இ) "முறையி லரசனாடு நல்கூர்ந் தன்று" முது. 81. (ஈ) "கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி, வேத்திய லிழந்த வியனிலம் போல,..............தன்மையிற் குன்றி" சில. 11: 60 - 63 (உ) 'ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டு' மணி. 23 : 104. (ஊ) "பழிபடா மன்னவன் படைத்த நாட்டினூஉங,் கழிவதென் காரண மறிஞ கூறென்றான்" கம்ப. தாட, 20 என்பவை ஒப்பு நோக்கற் பாலன.
|