கேள்பெருந் தகையோ டெவன்பல மொழிகுவ நாளுங் கோண்மீன் றகைத்தலுந் தகைமே எ - து: தத்தம் பகுதிகளையும் அழகிய செவிகளையும் பெருமையை யுடைத்தாகிய தாள்களையும் மதத்தாலுள்ள மயக்கத்தினையுமுடைய யானைத் திரள்களோடே ஒழிந்த விலங்கின் திரள்களும் மறவரும் மயங்குகையினாலே தூறுகளெல்லாம் வழிப்பட்டுப் பழையவழிகள் மயங்கின அரியகாட்டைக் கடந்து நீர் (1) தேடும்பொருளினுங்காட்டில் யாங்கள் உமக்குச் சிறந்ே்த மாதலை நீரே அறிந்தீராயின். இனி யாங்கள் நீண்ட பெரிதாகிய கடலிலே காற்று 1மரக்கலத்தைச் சிதறஅடித்துவிடுகையினாலே தாம் எடுத்துக்கொண்ட முயற்சி நிமித்தமாக நெஞ்சழிந்தோரைப்போலே நெஞ்சழிந்திருக்குமதல்லது நின்னோடு எங்ஙனம் பலவார்த்தைகளைக் கூறுவோம்? யாம் அங்ஙனம் இருக்கவும் நின்னை நாண்மீனும் மனத்தாற் குறித்துக்கொள்ளப்படும் புள்ளுந் தகைத்தலையுஞ் செய்யும். நெடுந்தகாய்! இன்னும் யாங் கூறுகின்றதனைக்கேள்; எ - று. மயங்கியென்னுஞ் செய்தெனெச்சம் "அம்முக்கிளவி" (2) என்னுஞ் 2சூத்திரத்திற் பிறவினை கொள்ளுமெனக் கூறினாம். அதனான் உணர்க. தகைம் என்றது (3) ஈற்றுமிசையுகரம் மெய்யொடுங் கெட்டு நின்றது. குறித்துக் கொள்ளப்படுதலிற் கோளென்றது ஆகுபெயர். இதனுட் குறிஞ்சிக்குரிய இறைச்சியாற் காட்டின்கொடுமை கூறி்ச்செல வழுங்குவித்தலின், அது திணைப்பொருட்கு உபகாரப்பட்டு நின்றவாறு உணர்க. இனி "நாளுங் கொண்மின் றகைத்தலுந் தகையேம்" என்றபாடத்திற்கு நாளையும் இன்னநாளென்று குறியும,் அப்பொழுதும் தகைத்தலையுஞ் செய்யேமென்க. போறலல்லதையெனவே, தோழிக்கு இடுக்கண் பிறந்தது. இது தரவு,
கலங்குமென் றுயர்கண்டும்"............ (ஐ) "தேவர்...............இரங்கினர் கவற்சி யெய்திப், புணைவிழச் சலதி யாழ்ந்து புலம்புகொண் மாக்க ளேபோல்" (ஒ) "மதலை யிற்றுழி நாய்கர்போற் றுயர்க் கடன் மறிகின்றார்" (ஓ) "உம்பர்க டாமு முடன்றளர் வுற்றார் தம்பம தான தடம்புணை தாழ, வம்புதி தன்னி லழுந்திடு வார்போல்" (ஒள) "அவுணர்க ளுலைந்து சிந்தினார், கலர்ம்பகிவுற்றிடக் கடலுற்றார்கள் போல்." கந்த. மேருப். 19. மோனநீங்கு 2; இந்திரன் கயிலை 7. யுத்தகாண்டம், நகர்புகு. 33. 1. பொருள் தேடுதலைப் பொருள் செய்தலென்பது மரபு: 2. (அ) "பொருள் செய்வார்க்கு" கலி: 14: 14. (ஆ) "செய்க பொருளை" குறள். 759. (இ) "செய்க பொருள்யாரும்" சீவக. 497. 2. தொல். வினை. சூ. 34. 3. தொல். வினை. சூ. 41. உரை பார்க்க. (பிரதிபேதம்) 1 கலத்தை, 2 சூத்திரத்தால்.
|