தூறதர் பட்ட வாறுமயங் (1) கருஞ்சுர மிறந்துநீர் செய்யும் பொருளினும் (2) 1யாநுமக்குச் சிறந்தன மாத லறிந்தனி ராயி (3) னீளிரு முந்நீர் வளிகலன் வௌவலி னாள்வினைக் கழிந்தோர் போற லல்லதை
(ஆ) செய்தென்னும் வினையெச்ச விகுதியாகிய உகரம் கடதறக்களையூர்ந்து இயல்பாய் நிற்றலே யன்றி வேறு சிலவற்றை யூர்ந்து இகரமாய்த் திரிந்தும் நிற்குமென்றுகூறிச் செயவென்னும் அகரவீறு செய்தென்னும் உகரவீறாய்த் திரிந்து நிற்றற்கும், (இ) காரண காரியப்பொருட்டாய் இறந்தகால முணர்த்துஞ்செயவெனெச்சம் செய்தெனெச்சமாய்த் திரிந்து நின்று பிறவினை கொள்ளுதற்கும் (இ - வி. சூ. 246, 248.) மேற்கோள் காட்டினர். (ஈ) ‘‘மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி’’ நாற். சூ. 191 மேற். (உ) ‘‘சேந்தெரி பரந்த பாலையிற் புகுந்து சென்னெறி சிறிதுந்தோன்றாமற், காந்தெரி கதிரோனெழுதிசை தெற்கு வடக்குமேற்கெல்லைகா ணாமன,் மாந்தரு மாவுந் திசைதடுமாறி’’ என்பவை ஒப்புநோக்கற்பாலன. 1. ‘‘அத்த, மிறந்துசெய் பொருளு மின்பந் தருமெனி, னிளமையிற் சிறந்த வளமையுமில்லை, யிளமை கழிந்த பின்றை வளமை, காமந்தருதலு மின்றே’’ நற். 126 : 6-10. 2. (அ) சிறப் பென்பதற்கு இன்றியமையாமை யென்று பொருள் கூறி அதற்கு ‘‘யாநுமக்குச் சிறந்தன மாதலறிந்தனி ராயின்’’ என்பதை (தொல். வேற். சூ. 14. ‘அதற்கு வினை’) மேற்கோள் காட்டினர். தெய். (ஆ) கலி. 42: 4-6. அடிகளும் அவற்றின் உரையும் இங்கே கருதற்பாலன. 3. (அ) ‘‘நளியிரு முந்நீர் வளிகலன் வௌவ’’ மணி. 16. 13. (ஆ) ‘‘வந்ததே ஆழ்கலத்தன்ன கலி’’ நாலடி. 12. (இ) ‘‘கலங்கவிழ்த் தல்லலுற்றாள்’’ (ஈ) ‘‘மல்லன்மாக் கடலிடைக், கல்லெனக் கலங்கவிழ்த், தல்லலுற் றழுங்கிய, செல்வன்’’ (உ) ‘‘ஆழ்கல மாந்தர் போல வணிநக ரழுங்கிற்றன்றே’’ (ஊ) ‘‘பண்ணார் களிறேபோற் பாயோங் குயர்நாவாய், கண்ணார் கடன்மண்டிக் காற்றிற் கவிழுங்கான், மண்ணார் மணிப்பூணோய் மக்க ளுறுந்துன்ப, நண்ணா நரகத்தினான்கா மடியன்றே.’’ சீவக. 332; 572; 1163; 2793. (எ) ‘‘நாவாய் கவிழ்த்த நாய்கன் போல, வோவா வவலமொடு’’ பெருங். (2) 9 : 47 - 8. (ஏ) ‘‘கலங்கவிழ்த்த நாய்கன்போற் (பிரதிபேதம்) 1 யாமுமக்கு.
|