(5). | 1 பாஅ லஞ்செவிப் பணைத்தாண் மாநிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கித் தூறதர் பட்ட வாறுமயங் கருஞ்சுர மிறந்துநீர்செய்யும் பொருளினும் யாநுமக்குச் | 5 | சிறந்தனமாத லறிந்தனி ராயி னீளிரு முந்நீர் வளிகலன் வௌவலி னாள்வினைக் கழிந்தோர் போற லல்லதை கேள்பெருந் தகையோ டெவன்பல மொழிகுவ நாளுங் கோண்மீன் றகைத்தலுந் தகைமே ; | 10 | கல்லெனக்கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபிற் புல்லென்றகளம்போலப் புலம்புகொண் டமைவாளோ ; | 12 | ஆள்பவர்கலக்குற வலைபெற்ற நாடுபோற் பாழ்பட்ட முகத்தோடுபைதல்கொண் டமைவாளோ ; | 14 | ஓரிரா வைகலுட் டாமரைப் பொய்கையு ணீர்நீத்த மலர்போல நீ நீப்பின் வாழ்வாளோ ; எனவாங்கு ; | 17 | பொய்ந்நல்கல்புரிந்தனை புறந்தரல் கைவிட் டெந்நாளோ நெடுந்தகாய்நீ செல்வ தந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே. |
இது தலைமகன் பொருள்வயிற் பிரிவலெனக் கேட்டதோழி தான் ஆற்றாளாய் நீர் செய்யும் பொருளினும் யாம் உமக்குச் சிறந்தேமென்பது நும் உள்ளத்து உளதெனின் நும்மை நாளும் புள்ளும் விலக்குமெனவும், இவள் பிரிந்திருப்பார் இருக்குமாறு இருப்பாளல்லள், பிரிந்த அன்றே இறந்து படுவளெனவுஞ் சொல்லிச் செலவழுங்குவித்தது. இதன்பொருள் (2) பாஅ லஞ்செவிப் பணைத்தாண் மாநிரை (3) மாஅல் யானையொடு மறவர் மயங்கித்
1. தலைவரும் விழும நிலை யெடுத்துரைத்தற்கு, இச்செய்யுள் மேற்கோள். தொல். அகத். சூ. 42. ‘தலைவரும்’ இளம். 2. உயிரளபெடைத் தொடைக்கு (அ) ‘‘பாஅலஞ்செவி.......மாஅல்யானை.......மயங்கி’’ என்பது மேற்கோள்; தொல். செய். சூ. 97. பே. (ஆ) கலிப்பாவிற் கட்டளையடிக்கண் நேரீற்றியற் சீரிரண்டும் வாராவென விலக்கியதனால் அல்லனவற்றுக்கண் வருமென்பதற்கு ‘பாஅ லஞ்செவிப் பணைத்தாண் மாநிரை’ என்பது மேற்கோள். தொல். செய். சூ. 25. பே. 3. (அ) ‘‘மாஅல்யானை.........மயங்கருஞ்சுரம்’’ என்பது செய்தென்னும் வினையெச்சம் காரணகாரியப்பொருட்டாய்த் தனக்குரியவினைமுதலா னன்றிப் பிறவினைமுதலான் முடிந்ததற்கு மேற்கோள். தொல். வினை. சூ. 34. நச். இ - வி. நூலார், இதனை
|