இத்தாழிசைகளில், தலைவிக்கு ஆராய்ச்சி பிறந்ததனைத் தோழி கூறினாள். ‘‘பொழுதுதலைவைத்த’’ என்னுஞ் (1) சூத்திரத்து நிகழுமென்பதனால், பெருந்திணைக்கேயன்றி ஏனைத்திணைக்கண்ணும் வனப்புமிகுதி கூறப்பெறு மென்றலின், தாழிசைகளில் தலைவி வனப்புமிகுதி கூறினாள். எனவாங்கு எ - து: என்று அவள் கூறும்படியாக; எ - று. ஆங்கு, அசை. இது தனிச்சொல். (22). | கழிபெரு நல்கலொன் றுடைத்தென வென்றோழி யழிவொடு கலங்கிய வெவ்வத்த ளொருநாணீர் பொழுதிடைப் படநீப்பின் வாழ்வாளோ (2) வொழிகினிப் பெருமநின் பொருட்பிணிச் செலவே |
எ - து: புணர்ச்சிப்பின்னர் நிகழ்த்தின மிக்கபெரிய தலையளி ஒரு பிரிவை 1யுடைத்தென்று உட்கொண்டு என் தோழி நெஞ்சழிவாலே கலங்கிய வருத்தத்தையுடையள்; இத்தன்மையாள் ஒருநாள் ஒருபொழுது கூட்டம் இடையீடுபட நீர் பிரிவீராயின் உயிர் கொண்டு இருப்பாளோ? இராள். ஆதலால், பெருமா! நின்னுடைய, பொருளிடத்து நெஞ்சு பிணித்தலாற் செல்லுஞ் செலவைத் தவிர்வாயாக; 2எ - று. இதனால், தலைவற்கு இழிவு பிறந்தது. இது நிகழ்ந்ததுநினைத்தற் கேதுவுமாகும்’ (3) என்றதனால், தலைவன்கண் நிகழ்ந்த 3வஞ்சந் தலைவிநினைந்து பிரிவனென்று கருதுதற்கு 4நிமித்தமாயிற்று. ‘‘செய்பொருளச்சமும் வினைவயிற்பிரிவு, மெய்யுற 5வுணர்த்துங்கிழவி பாராட்டே’’ (4) என்பதனால், தலைவன் தலைவியைப் பாராட்டியது, அவட்குச் செய்பொருள் அச்சமும் வினைவயிற்பிரிவும் உணர்த்தி நின்றவாறு காண்க. இது சுரிதகம். (5) இஃது எட்டடித்தரவும் நான்கடித்தாழிசையுந் 6தனிச்சொல்லுந்தரவின் பாகமாகிய சுரிதகமும் நேரீற்றியற்சீரும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (3)
1. தொல். பொருளியல். சூ.42. 2. (அ) ‘ஒழிகினிச்செலவே’ ஐங். 330; (ஆ) ‘‘ஒழிகினி’’ திணைமொழி. 38. 3. தொல். அகத். சூ. 43. உரைபார்க்க. 4. தொல். பொருளி. சூ. 38. 5. தொல். செய். 137-ஆம், சூத்திரவுரையில் இதனை ‘இது மிகவுந் துள்ளிவந்த எட்டடித்தரவும் தாழம்பட்ட வோசை பெற்றுத் தரவகப்பட்ட மரபினதாகிய நான்கடித்தாழிசை மூன்றும் ஆங்கென்னும் அசைநிலைத் தனிச்சொல்லும் தரவின் பாகம் பெற்று நான்கடியா யிறுதிநிலை யுரைத்த சுரிதகமும் பெற்று, தரவினும் தாழிசையினும் நேரீற்றியற் சீரும் பெற்றுவந்த ஒத்தாழிசைக்கலி.’ என இவ்வுரைகாரரே விரித்தெழுதி யுள்ளார். (பிரதிபேதம்) 1 உடைத்தென்றுகொண்டு, 2 என்றாளென்க, 3 வஞ்சனம், 4 நிமித்தமும், 5 உணர்தலுங்கிளவி, 6 பொருள் பெறாததனிச்சொல்லும்.
|