33

13 (1) முள்ளுறழ் (2) முளை (3) யெயிற் றமிழ்தூறுந் தீநீரைக்
(4) கள்ளினு மகிழ்செயு மெனவுரைத்து மமையாரென்
னொள்ளிழை திருத்துவர் காதலர் மற்றவ
ருள்ளுவ தெவன்கொ லறியே னென்னும்

எ - து: காதலர், முள்ளைமாறுபடுகின்ற முனையினையுடைய (5) நாணன் முளைபோலும் எயிற்றிடத்து விடாமல் ஊறும் அமிழ்துபோலும் இனிய நீரைக் கள்ளினுங்காட்டில் மகிழ்ச்சியைத் தருமென்று கூறியும் வேட்கை தணியாராகி என்னுடைய ஒள்ளிய பூண்கள் புணர்ச்சியால் நிலைகுலைந்தவற்றைப் பழைய நிலைகளிலே கிடக்கும்படி திருத்துவர்; பின்னை, அவர் நினைக்கின்ற காரியம் எத்தன்மையதுகொல்? அதனை யான் அறியேனென்று கூறாநிற்கும்; எ - று.

அக்கள்ளென்று பாடமாயின், 1அங்ஙனம் மிகக்களிப்பிக்குங் கள்ளென்க. திருநீரையும் பாடம்.


தலையளிசெய்து தெருட்டிப்பிரிய,அவை பற்றுக்கோடாக ஆற்றுதலின் அவன் குணங்கள் வற்புறுத்துவனஆயின’’ என இவ்வடியிலுள்ள சொற்பொருள்களை இடையிட்டு உரை நடையாக அமைத்தனர், நச். தொல். கற். சூ. 43.

1. (அ) ‘‘முத்துக்கூர்த் தன்ன முள்ளெயிற் றமுத, மருந்தே மாந்த வாருயிர் தளிர்ப்ப’’ மணி. 18: 71-2.
(ஆ) “முள்வா யெயிற்றூறமுதம் முனி யாது மாந்தி’’ சீவக. 491. (இ) ‘‘தித்தியாநின்ற ..... முள்ளெயிற்றூறுதேன் ..... .பெருக்கலால்.’’ கம்ப. கிட்கிந்தைப். 21. (ஈ) ‘‘முருந்தேய்க்குமுட்போ லெயிற்றினாய்’’ ஏலாதி 8. (உ) ‘‘முள்ளெயிறு’’ சீவக. 1099, 2732. (ஊ) ‘‘பிரிவஞ்சும் புன்கணுடைத்தாற் புணர்வு’’ என்பதன் பொருளை விளக்குதற்கு, விசேட வுரையில் ‘‘அவ் வச்சத்தினை யுடைத்தாதலாவது, ‘முள்ளுறழ் முளையெயிற்.....னொள்ளிழைதிருத்தும்’ பண்டையிற் சிறப்பால் அவன் பிரிதற் குறிப்புக்காட்டி அச்சஞ் செய்தலுடைமை’’ என இவ்வடிகளை உரையிடை யிடுவர், பரி. குறள். 1152.

2. ‘‘முளைநிரை முறுவலார்’’ ‘‘முளைநேர் முறுவலார்’’ கலி. 15, 98. ‘முளையெயிறு’ சீவக. 2042.

3. (அ) ‘‘ஊறுநீ ரமிழ்தேய்க்கு மெயிற்றாய்’’ கலி. 20-11. (ஆ) ‘‘கூரெயிற்றமிழ்த மூறுஞ் செவ்வாய்’’ அகம். 335: 24-5.

4. ‘‘உண்டது, கள்ளு மன்று களிப்பட் டனனே’’ புறத். தானைமறம்.

5. ‘‘கிளையரி னாணற் கிழங்கு மணற் கீன்ற, முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்’’ அகம். 212.

(பிரதிபேதம்) 1 இங்ஙனம்.