‘‘தோழியுள் ளுறுத்த வாயில் புகுப்பினு, மாவயி னிகழு மென்மனார் புலவர்’’ (1) என்பதனால், தலைவி செலவழுங்குவித்தற்குப் போகவிட்டமையாற் றன்னுடன் ஏனைவாயில்களுங் கூறினமைதோன்ற, யாம் நிற்கூறவுமென்றும் எமகொள்ளாயாயினையென்றும், தாழிசைகளினும், யாமிரப்பவும் எமகொள்ளாயாயினையென்றும் (2) யாமுரைப்பவுமென்றும் கூறியவாறு காண்க. யானிற் கூறவு மென்றும் பாடம். இஃது ஐந்தடித்தரவும் நான்கடித்தாழிசையும் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்றுவந்த ஒத்தாழிசைக்கலி. (2)
(4). | வலிமுன்பின் வல்லென்ற யாக்கைப் புலிநோக்கிற் சுற்றமை வில்லர் சுரிவளர் பித்தைய ரற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்தாங் கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர் | (5). | துள்ளுநர்க்காண்மார் தொடர்ந்துயிர் வௌவலிற் புள்ளும்வழங்காப் புலம்புகொ ளாரிடை வெள்வேல்வலத்திர் பொருடரல் வேட்கையி னுள்ளினி ரென்பதறிந்தன ளென்றோழி; | (9). | காழ்விரிகவையார மீவரு மிளமுலை போழ்திடைப் படாஅமன்முயங்கியு மமையாரென் றாழ்கதுப் பணிகுவர்காதலர் மற்றவர் சூழ்வதை யெவன்கொ லறியேனென்னும்; | (13). | முள்ளுறழ்முளையெயிற் றமிழ்தூறுந் தீநீரைக் கள்ளினுமகிழ்செயு மெனவுரைத்து மமையாரென் னொள்ளிழைதிருத்துவர் காதலர் மற்றவ ருள்ளுவ தெவன்கொலறியே னென்னும்; | (17). | நுண்ணெழின்மாமைச் சுணங்கணி யாகந்தங் கண்ணொடு தொடுத்தெனநோக்கியு மமையாரென் னொண்ணுத னீவுவர் காதலர்மற்றவ ரெண்ணுவ தெவன்கொ லறியே னென்னும்; எனவாங்கு; | (22). | கழிபெருநல்கலொன் றுடைத்தென வென்றோழி யழிவொடுகலங்கிய வெவ்வத்த ளொருநாணீர் |
1. தொல். கற். சூ. 8. இதனுரையில் இச்செய்தி சிறிதுவேறாயுள்ளது. 2. இப்பாடம் இரண்டாந் தாழிசையிற் காணப்படுகின்றது. அதன் உரை இரப்பவுமென்பதற்கே பொருந்துகிறது.
|