30

பொழுதிடைப் படநீப்பின் வாழ்வாளோ
வொழிகினிப் பெருமநின் பொருட்பிணிச் செலவே.

இது பொருள்வயிற் பிரிவேனென்ற தலைமகற்கு, தோழி, தலைவி செலவுக் குறிப்பு அறிந்தவாறும், அவளது ஆற்றாமையும் உணர்த்திச், செலவு ஒழிவாயாகவெனக் கூறியது.

இதன் பொருள்.

(1) வலிமுன்பின் (2) வல்லென்ற யாக்கைப் (3) புலிநோக்கிற்
(4) சுற்றமை வில்லர் சுரிவளர் பித்தைய
(5) ரற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்தாங்
(6) கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர்


1, ‘‘வலிமுன்பின்.....ளென்றோழி’’ என்பது தாழ்ந்த ஓசைத்தன்றி ஒத்தாழிசைக் கலியுள் தரவு வந்ததற்கு மேற்கோள். தொல். செய். சூ. 130. பே.

2. (அ) ‘‘வல்லென்ற தென்னெஞ்சம்’’ (ஆ) ‘‘கல்லினும் வல்லெனு நெஞ்சு’’

3. ‘‘துணைவிளக் கெரியு நிலைவிழிப் பேழ்வாய்த், தோகைமண் புடைக்குங் காய்புலி’’

4. (அ) சுற்றமை வில்லன் நற். 376. (ஆ) ‘‘சுற்றமை வில்லர் சுரிவளர் பித்தைய, ஏற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்’’ இவை வினையெச்சப் படர்க்கை வினைக்குறிப்பு முற்றென்பர். நச். தொல். எச்ச. சூ. 61.
(இ) ‘‘சுற்றமைவில்லர் - சுரிவளர் பித்தையர்’’ என்பது கலிப்பாவில் அளவடி சீர்வகையடியாய்ப் பன்னீரெழுத்தான் வந்ததற்குமேற்கோள். தொல். செய். சூ. 59. நச்.

5. அற்றம்பார்த்தல்குதல். மறவர் மரபென்பதை, ‘‘பார்வ லிருக்கைக் கவிகண் ணோக்கிற், செந்தொடை பிழையா வன்க ணாடவர்’’ (புறம். 3.) என்பதனாலும் ‘வம்பலரை நலியச் சேய்மைக்கண்ணே பார்த்திருக்கும் இருப்பினையும் கையாற் கவிக்கப்பட்ட கண்ணாற் குறித்துப் பார்க்கும் பார்வையினையும் செவ்விய தொடை பிழையாத தறுகண்மையையு முடைய மறவர்’ என்னும் அதனுரையாலும், ‘‘கடிகை வெள்ளிலுங் கள்ளி வற்றலும் வாடிய வுவலொடு நீடதர் பரப்பி, யுழைவயிற் றிரியாது முழைவயினொடுங்கிய, வாறலை யிளையரை யாண்மை யெள்ளி’’ பெருங். (1) 55: 83-9. ‘‘மற்றிங்கிவள் செயல்யாவையும் வரலாற்றொடு காணாத், தெற்றென்றவண் மீள்கின்றுழிச் செவ்வேயெதிர் போந்து, குற்றந்தனக் கிசையுந்திற முடிப்பேனெனக் கொலைசெய,் விற்றங்கிய புயவேடரில் வேறோரிடை நின்றான்.’’ கந்த. அசமுகிப். 15. என்பவைகளாலும் அறிக.

6. ‘‘வழங்குநர் மடிந்த வத்த மிறந்தோர், கைப்பொரு ளில்லை யாயினு மெய்க்கொண், டின்னுயிர் செகாஅர் விட்டதன் றப்பற்கு’’ ‘‘அம்புதொடை யமைதி காண்மார் வம்பலர், கலனில ராயினுங் கொன்றுபுள் ளூட்டுங், கல்லா விளையர் கலித்த கவலை’’ அகம். 109. 375. ‘‘கொள்ளும், பொருளில ராயினும் பொங்கெனப் போந் தெய்யு, மருளின் மறவ ரதர்’’ திணைமாலை. 84.