(3). | (1)அறனின்றி யயறூற்று மம்பலை நாணியும் வறனீந்திநீசெல்லு நீளிடை நினைப்பவு மிறைநில்லாவளையோட விதழ்சோர்பு பனிமல்கப் பொறைநில்லாநோயோடு புல்லென்ற நுதலிவள் விறனல னிழப்பவும்வினைவேட்டாய் கேஎளினி; | 6 | உடையிவளுயிர்வாழா ணீநீப்பி னெனப்பல விடைகொண்டியாமிரப்பவு மெமகொள்ளா யாயினை கடைஇயவாற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை யடையொடு வாடியவணிமலர் தகைப்பன; | 10 | வல்லைநீதுறப்பாயேல் வகைவாடு மிவளென வொல்லாங்கியாமிரப்பவு முணர்ந்தீயா யாயினை செல்லுநீளாற்றிடைச் சேர்ந்தெழுந்த மரம்வாடப் புல்லுவிட்டிறைஞ்சிய பூங்கொடி தகைப்பன; | 14 | பிணிபுநீவிடல்சூழிற் பிறழ்தரு மிவளெனப் பணிபுவந்திரப்பவும் பலசூழ்வா யாயினை துணிபுநீ செலக்கண்டவாற்றிடை யம்மரத் தணிசெல வாடிய வந்தளிர்தகைப்பன; |
எனவாங்கு; 19 | யாநிற் கூறவு மெமகொள்ளா யாயினை யானாதிவள்போ லருள்வந் தவைகாட்டி மேனின்றுமெய்கூறுங் கேளிர்போ னீசெல்லுங் கானந்தகைப்ப செலவு. |
இது தலைமகனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி, தலைமகட்கு அஃது உரைத்து, அவளது ஆற்றாமையின்வகை தலைமகற்கு உணர்த்தவும், பின்னும் பிரிவின்மேற்சென்ற உள்ளத்தனாயினானை, நீர்செல்லுங்கானமே நும்மை இடிக்குங் கேளிர்போல விலக்குமென, அவன் செலவழுங்கும் வகை அவள் கூறியது.
1. (அ) ‘‘பிரியுங்காலை யெதிர்நின்று சாற்றிய மரபுடை யெதிரும்’’ என்புழி, கற்பினுள் தலைமகன் சேயிடைப் பிரியுங்காலத்துத் தோழிகூற்று அவன்மாட்டும் தலைமகள் மாட்டும் ஆமென்று கூறித் தலைமகன் மாட்டு ஆனதற்கும், தொல். கற். சூ. 9. (ஆ) சுரிதகம் வெண்பாவியலான் இற்றதற்கும் தொல். செய். சூ. 72. இச்செய்யுளை மேற்கோள் காட்டினர்; இளம்.
|