23

தங்கினாற் போலவென்னும் தொழிலுவமத்திற்கு [அன்பன்றென்றதும் தொல்கவின் றொலைதலென்றதும்?] ........பொருளாயினவாறு காண்க.

யாழ் தோழியும் அவள் கூறியது யாழிசையுமாகக் கொள்க.
எனவிவள். தனிச்சொல். எஞ்சியது சுரிதகம்.

இச்சுரிதகத்தார் றலைவற்கு உண்டாகிய அருளென்னும் மெய்ப்பாட்டால், தலைவிக்குப் புணர்வென்னும் உவகை பிறந்தது.

செலவழுங்கலின் முல்லையாமெனின், ஆகாது; ‘‘செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே, வன்புறை குறித்த றவிர்ச்சி யாகும்.’’ (1) என்றாராகலின். இவ்விதி மேற் செலவழுங்குவனவற்றிற் கெல்லாங் கொள்க.

‘‘ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே, கொச்சக முறழொடு கலி 1நால்வகைத்தே.’’ (2) ‘‘அவற்றுள், ஒத்தா ழிசைக்கலி யிருவகைத் தாகும்.’’ (3) ‘‘இடைநிலைப் பாட்டுத் தரவுபோத் தடையென, 2நடைநவின் றொழுகு மொன்றென மொழிப.’’ (4) ‘‘தரவே தானு நாலடி யிழிபா,, யாறிரண் டுயர் பென்றறையவம் படுமே.’’ (5) ‘‘இடைநிலைப் பாட்டே, தரவகப் பட்ட மரபினவென்ப.’’ (6) ‘‘அடைநிலைக்கிளவி தாழிசைப் பின்னர், நடைநவின் றொழுகுமாங்கென் கிளவி’’ (7) ‘‘போக்கியல் வகையே வைப்பெனப் படுமே.’’ (8) ‘‘தரவியலொத்து மதனகப் படுமே, புரைதீ ரிறுதி நிலையுரைத் தன்றே,’’ (9) என்று அகநிலையாகியகட்டளை 3யொத்தாழிசைக்குக்கூறிய இலக்கணம் சீர்வகை 4யொத்தாழிசைக்கும் ஒத்தலில் இவ்விலக்கணங்கொண்டு இத்தொகையில் ஒத்தாழிசை செய்தாரென் றுணர்க.

அவற்றுள், இது மிகத்துள்ளிவந்த பத்தடித்தரவும், ‘‘ஒத்தாழிசையு மண்டில யாப்புங், குட்டமு நேரடிக் கொட்டின வென்ப.’’ (10) என்பதனால் ஒத்ததாழ்த்த ஓசைபெற்றுத், தரவகப்பட்ட 5மரபினவாய் ‘‘ஒத்து மூன்றாகுமொத்தா ழிசையே’’ (11) என்பதனான் ஒத்துமூன்றாய்வந்த தாழிசையும், நடைநவின்றொழுகு மென்றதனால் ‘‘எனவிவள்’’ என்று பொருள் பெற்றுவந்த அடைநிலைக் கிளவியும், இடைநிலைப்பாட்டின் பொருண்முடிவு காட்டித் தரவிற் சுருங்கிவந்த சுரிதகமும் பெற்றுத், தரவினுந் தாழிசையினும் நேரீற்றியற்சீரும் பெற்றுத், தரவின்கண் ஏறுபெற்றுதிரென நேர்புநேர்நிரையாகிய வஞ்சியுரிச்சீரும் பெற்றுவந்த முதனிலையொத்தாழிசைக் கலிப்பா.

*‘‘எழுசீ ரிறுதி யாசிரியங் கலியே.’’ (12) என்பதனால் ஈற்றடி நாற்சீரும் அயலடி முச்சீருமாக எழுசீரான் இற்றது சுரிதகம். இவ்விதி மேல்வருவனவற்றிற்குங் கொள்க. (1)


1. தொல். கற். சூ. 44. 2-9. தொல். செய். சூ. 130-137. 10, 11, 12. தொல். செய். சூ. 115, 142, 76.

(பிரதிபேதம்) 1 ‘‘நால்வகைத்தே’’ 2 ‘‘நடைபயின்றொழுகு’’ 3 ‘‘ஒத்தாழிசைகட்கு’’ 4 ஒத்தாழிசைகட்கு,
5 மரபினானவாய்.