இதன்பொருள் | அறனின்றி 1யயறூற்று மம்பலைநாணியும் | (1) | வறனீந்தி நீசெல்லு நீளிடை நினைப்பவு மிறைநில்லா வளையோட விதழ்சோர்பு பனிமல்கப் | (2) | பொறைநில்லா நோயோடு புல்லென்றநுதலிவள் | (3) | விறனல 2னிழப்பவும்வினைவேட்டாய் 3கேஎளினி |
எ - து: யான் நின்பிரிவை உணர்த்துகையினாலே முன்கையிற் கிடவாவாய் வளைகழலக், கண்ணீர் இமையினின்று முன்னர்ப் 4பெருகி வீழ்ந்து, பின்னர் இமை நிறையும்படி நிற்க, பொறுக்கும் அளவில் நில்லாக் காமநோயாலே பொலிவழிந்த நுதலினையுடைய இவள் பின்பு அயலிலுள்ளார் தந் (4) நெஞ்சில் அறமின்றாய் (5) வெளியாகக்கூறும் (6) அம்பலைக் கூசுதலானும், நீ அரிதாகக் கடந்துசெல்லும் நீண்டவழியில் வற்கடமான காலத்தை நினைக்கையினாலும், தனது வெற்றியையுடைய நலத்தை இழவாநிற்கவும், வினைமேற்சேறலை விரும்பினவனே, இப்பொழுது யான் கூறுகின்றதனைக் கேள்; எ - று. இது தரவு. 6. உடையிவ ளுயிர்வாழா ணீநீப்பி னெனப்பல (7) விடைகொண்டியாமிரப்பவு மெமகொள்ளா யாயினை
1. (அ) செய்தெனெச்சம் நிகழகாலத்திற்கு முரித்தாய் வருதற்கு ‘‘வறனீந்தி நீ செல்லு நீளிடை நினைப்பவும்’’ என்பதை மேற்கோள் காட்டினர்; நச். தொல். வினை. சூ. 42. (ஆ) இதனை, துணைவினை ஒருகாலத்தெய்தியதற்கு மேற்கோள் காட்டினர்; பிரயோக விவேக நூலார். திங். 5. (இ) இருள் பருகி யென்பதற்கு இருளை விழுங்கா நின்றென்று பொருளும் செய்தெனெச்சம் நிகழ்காலம் உணர்த்திற்றென்று இலக்கணமும் எழுதி யிருத்தல் பெரும்பா. 1. இங்கே அறிதற்பாலது. 2. பொறைநில்லா நோய்கூரப் புல்லென்ற நுதலிவள், என்பது (நன். உரிச். சூ. 15.) மயிலைநாதருரையிற் காணப்படுகின்றது. 3. விறனல னிழத்தல் கலி. 124. 15. ‘‘விறன்மேனி’’ குறிஞ்சி. 2-3. 4. ‘‘அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும,் புன்மையாற் காணப்படும்’’ குறள். 185. 5. தூற்றல் - வெளிப்படையாகச் சொல்லுதல்; ‘‘பிறர்பிறர் சீரெல்லாந் தூற்றி’’ நீதிநெறி. 20. 6. ‘அம்பலு மலருங்களவு’ இறை. சூ. 22. என்பதனுரை ஈண்டு நோக்கற் பாலது. 7. ‘‘உடையோர்போல விடையின்று குறுகி’’ புறம். 54, ‘‘நம்பன் சிறிதே யிடைதந்திது கேட்க’’ சீவக. 1975 என்பவற்றைநோக்கின், இங்கு இடையென்பதற்குச் சமயமென்று பொருள்கொள்ளலுமாம். (பிரதிபேதம்) 1 அயற்றூற்று மம்பலர், 2 விளர்ப்பவும், 3 கேளினி, 4 பெருக வீழ்ந்து.
|