புன்கண்கொண் டினையவும் பொருள்வயி னகற லன்பன் றென்றியான் கூற வன்புற்றுக் (1) காழ்வரை நில்லாக் கடுங் (2) களிற் றொருத்தல்
1. யானையை அடக்கி நல்வழியில் நடத்துதற்கும் வேண்டுவன செய்து அதனைப் பாதுகாத்தற்கும் மேலே பாகரிருப்பதுபோலக் கீழே பரிக் கோற்காரரு முண்டென்பது, (அ) ‘‘கீழுமேலுங் காப்போர்நீத்த, வறுந்தலைப் பெருங்களிறு போலத், தமியன்வந்தோன்’’ நற். 182. (ஆ) ‘‘சினஞ்சிறந்து, கோலோர்க் கொன்று மேலோர் வீசி .....உழிதரும் கடாஅ யானையும்’’ மது. 380-83. இ) ‘‘எதிர் பரிக்காரரோட’’ (ஈ) ‘‘பரிக்காரர் தாமு, மீதங்கு கடாவுவாரும்’’ (உ) ‘‘தாடத்திற் பரிக்காரர்தலையிடறி’’ பெரிய. எறிபத்த 12; 41. திருநாவுக்கரசு. 110. (ஊ) ‘‘நெடுவேயும் பாகுஞ், சுளிந்துவரு கடகளிற்றுச் சுவேதவாகனன்’’ (எ) ‘‘பாகுபரிக்கோல் யாவுந்தூரத்தே, காணினு நின்று கொதிப்பது ..... அவ்வேழம்’’ (ஏ) ‘‘வேயொடுபாகடர் கம்பநிகளமதாசலம்’’ வில்லி. வசந்த 11. பதினாறாம். 10. பதினேழாம். 66. (ஐ) ‘‘காழோர் கடுங்களிறு கவளங்கைப்ப’’ மது. 658-9. (ஒ) ‘‘காழிற்குத்திக் கசிந்தவரலைப்பக், கையிடை வைத்தது மெய்யிடைத் திமிரு, முனியுடைக் கவளம்போல‘‘ நற். 360 (ஓ) ‘‘வெலற்கருங் குஞ்சரம் வேட்டம் பட்டெனத், தலைத்தலை யவர் கதந் தவிர்ப்ப’’ சீவக. 41. என்பவற்றால் விளங்கும். இப்பரிக்கோல்: குத்துக்கோல், தாறு, கவைமுட்கருவி, கழை, வேய் முதலிய பெயர்களால் வழங்கப்படும். ‘களிறுகௌவையிற் காழ்வரைநிற்கில கழிவ’ பாகவ (10) மதுரை 6. என்பது இங்கு ஒப்புநோக்கற்பாலது. 2. (அ) ‘‘வயக்களிற் றொருத்தல்’’ (ஆ) ‘‘பெருங்களிற் றொருத்தலின்’’ அகம். 78, 308. (இ) ‘‘இருங்களிற் றொருத்தல்’’ புறம். 190. (ஈ) ‘‘வன்களிற் றொருத்தல் யாவும்’’ கந்த. தாரக. 44. (உ) வேழக்குரித்தே விதந்துகளிறென்றல் என்புழி ‘விதந்தென்ற விதப்பினாற் களிறென்பது சாதிப்பெயர் போலவும் நிற்குமென்பது; அஃதாவது யானையென்னும் சாதிப்பெயரினைக் களிறென்னும் பெயர் வந்து [சிற] (குறி )ப்பித்தாற் ‘‘[கடுங்]களிற் றொருத்தல்’’ என்றும் ஆகுமென்பது; என்று (தொல். மர. சூ. 34) பேராசிரியரும் (ஊ) களிற்றொருத்தல் என்புழி, களிறென்பது எருமையினொருத்தல் முதலாயினவற்றை நீக்குதலாற் பொருள் வேறுபாடுடைமையின் ஒரு பொருட்பன்மொழியாகாது; பண்புத்தொகையு ளடங்குமென்று (நன். பொது. சூ. 47.) மயிலைநாதரும் கூறுவர்.
|