பொருளாயினும் (1) 1அருந்துதிபோலே (2) எல்லாருந்தொழுது வாழ்த்தும்படி விளங்கிய கற்பனையை முன்புடையவளுடைய, காமச் செவ்வியாற் பெருமையையுடையவாய, மெல்லியவாகிய தோள்களைப் பிரியாதிருத்தல் நின்மனத்திற்குப் பொருளாயிருக்குமாயின், அதுவே பொருளாவதல்லது பிரிகின்றது பொருளாகுமோ? எ - று. பிரியாமை யென்றது பின்பு பிரிகின்றதனைத் தோற்றுவித்து நின்றது. கற்பு, கற்பனையாதல் (3) கற்பியலான் உணர்க. (4) பழியொடு வருவன செய்யலாகாதெனத் தோழி விலக்கலின் அசை வென்னும் மெய்ப்பாடு தோன்றிற்று. இவை மூன்றும், தாழிசை. 23 எனவிவள்
1. அருந்ததியென்பது, அருந்துதியென்றும் தமிழில் வழங்குமென்பதை, செம்மீனென்பதற்கு அருந்துதியென்று (பதிற். 31.) உரை எழுதப் பெற்றிருத்தலாலும் ‘‘சூளையருந்துதி......யென்றெண்ணி’’ (கம்பரந். 34.) ‘‘கற்பினல, மருந்துதியானம் புவிக்களித்தார்’’ (திருமுல்லை. 85.) எனச் சிவஞானமுனிவரும், ‘‘அருந்துதிக்குக் கற்பணியா ரருந்துதிக்குக் கற்பணியார்’’ (திருவானைக்கா. கோச்செங்கணார் 6.) எனக் கச்சியப்பமுனிவரும் மாற்றவொண்ணாதபடி அமைத்திருத்தலாலும் அறிக. 2. கற்புடைமகளிரை எல்லாருந்தொழுதேத்தல்: (அ) ‘‘உரைசால் பத்தினிக்குயர்ந்தோ ரேத்தலும்’’ - புகழமைந்த கற்புடைமகளை மக்களேயன்றித் தேவரு முனிவரு முதலாயுள்ளோர் சென்றேத்துதல் இயல்பாகலும்’ சிலப். பதிகம். 56. அடியார். (ஆ) ‘‘தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத், தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்’’ சில. 23. இறுதிவெண்பா. (இ) ‘‘நாடு மூரு நனிபுகழ்ந் தேத்தலும், .....பாடு சான் மிகு பத்தினிக் காவதே’’ வளையாபதி. (ஈ) ‘‘படியேழுந் தலைமேற் கொண்ட கற்பினாள்’’ கம்ப. கடல்காண். 7. (உ) ‘‘தொழுதகு கற்பினாளை’’ நைடத. மணம்புரி 60. என்பவை முதலியவற்றால் அறியலாகும். (ஊ) ‘‘அருந்ததியும் வந்தனைசெ யஞ்சொலிள வஞ்சி’’ என்பதும் ஈண்டறிதற்பாலது. 3. கற்பியல் முதற் சூத்திரத்து, ‘கற்பியல் - கற்பினது இயலெனவிரிக்க. இயல், இலக்கணம்.......அது கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும் அவனை இன்னவாறே வழிபடுக வெனவும் இருமுதுகுரவர் கற்பித்தலானும் அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும் ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் தலை மகன் கற்பித்தலானுங் கற்பாயிற்று’ என எழுதிய பகுதி ஈண்டறிதற்பாலது. 4. (அ) ‘‘கழியாக் காதலராயினுஞ் சான்றோர், பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்’’ அகம். 112. (ஆ) ‘‘பாவமு மேனைப் பழியும் படவருவ, சாவினுஞ் சான்றவர் செய்தலார்’’ நாலடி. 295. (பிரதிபேதம்) 1. அருந்ததி.
|