காட்டைக் கடந்துபோய்த் தேடுதலைக் கருதின பொருள் நன்கு மதிக்கும்.
னருகிலுள்ள எழுமுனிவர் குழுவிடையே கொழுநனெடு கெழுயி ஒருசிறுவிண்மீன் வடிவமாகத் தோற்றுபவள்; (ஈ) கலங்காத தெய்வக் கற்புடையவள்; (உ) வாழ்நாளற்றவர்க்குத் தோன்றாதொளிப்பவள்; (ஊ) வதுவைக்காலத்துக் கணவரால் மகளிர்க்குக் காட்டப்படுபவள்; (எ) அம்மகளிரால் அக்காலத்துத் தம் வாழ்நாளை அறிதற்கு நோக்கப்படுபவள்; (ஏ) கற்புடைமகளிரால் அந்திக் காலத்துத் தொழப்படுபவள்; (ஐ) தன்னைத் தரிசித்தோர்க்கு மாசு நீக்குபவள்; (ஒ) புகழ்மிக்கவள்; (ஓ) 1: வடமீனவள், 2: வடமீன், 3: வடக்குமீன், 4: உத்தரமீன், 5: தெய்வம், 6: அணங்கு, 7: கடவுள், 8: கடவுண்மீன், 9: சிறுமீன், 10: அந்திமீன், 11: செம்மீன், 12: சாலினி, 13: சாலி, முதலிய பெயருடையவள்; (ஒள) கற்பிற் சிறந்தார்க்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுபவள்; (ஃ) 1: ‘‘பெருநல் வானத்து வடவயின் விளங்குஞ், சிறுமீன் புரையுங் கற்பி னறுநுதல் வளைக்கை மகடூஉ’’ பெரும்பாணாறு 302-4. 2: ‘‘அருந்ததி யனைய கற்பிற்......புதல்வன்றாயே’’ ஐங். 442. 3: ‘‘வடமீன் புரையுங் கற்பின் மடமொழி யரிவை’’ புறம். 122. 4: ‘‘அருந்ததிக் கற்பினார் தோளும்’’ கடுகம். 1. 5: ‘‘பொருந்திய வுலகினுட் புகழ்கண் கூடிய, வருந்ததி யகற்றிய வாசில் கற்பினாய்’’ 6: ‘‘அருந்ததிக் கற்பி னாளை யடிபணிந் தவனுங் கண்டான்’’ 7: ‘‘தொழுதகு தெய்வ மன்னாள்’’ சீவக. 327; 1729; 1912. 8: ‘‘தீதிலா வடமீனின் றிறமிவ டிறமென்றும்’’ ‘‘வடமீன் கற்பின் மனையுறைமகளிர்’’ சில. (1) 27; (5) 229. 9: ‘‘கடவுண்மீன் கற்புமாதர்’’ 10. ‘‘வடபுலத்து வயங்கு மருந்ததிக், கடவுட் கற்பினர்’’ காசி. ‘‘தேவர்கள் பிரமலோகம், 28; கற்பிலக்கணம் 34. 11: ‘‘வடபுலத்தினி னோக்குநர் மாசற விளங்குங், கடவுண் மீனினுந் தொழுதகு கற்பினர்க் கரசாங், கொடிமருங்குலை’’ நைடதம். தேவியைக்கண்ணுற்ற 25. 12: ‘‘தொழத்தகு வடமீனென்ன, நடையறி புலவரேத்தி நவிறம யந்தியென்பாள்’’ பிரமோ. சோமவார விரத 40. 13: ‘‘கற்பா லந்திவா யருந்ததி’’ 14: ‘‘கற்பினா லந்திமீ னனையவள்’’ 15: ‘‘வடமீனிகர் கற்பினாளை’’ 16: “விண்ணிலங் கருகித் தோன்று மேதகு வடமீனன்றி, மண்ணிலங் குவமை சொல்ல மடந்தையர் யாருமில்லாப், பண்ணலங் கடந்த மென்சொற் பாவையை‘‘ வில்லி சம்பவ. 25. வாரணாவத. 28. திரௌபதி. 96, சூது. 202. 17: ‘‘மறுவி லாவட மீன்புரை கற்பினாள்” திருவிளை. மாணிக். 4. என்பவை ஈண்டு அறிதற்பாலன. பிறவும் விரிப்பிற் பெருகும்.
|