தொல்லியல் 1 வழாஅமைத் துணையெனப் புணர்ந்தவள் புல்லாகம் பிரியாமை பொருளாயி னல்லதை எ - து: எக்காலமும், எமக்குப் பொருளில்லையென்று கூறி வந்து இரந்தவர்களுக்குச் சிறிதுங் கொடாதிருத்தல் இழிவாமென்று கூறி, மலையைக் கடந்துபோய்த் தேடுதலைக் கருதின பொருள் நன்கு மதிக்கும் பொருளாயினும், நமக்குப் (1) பழைய உழுவலன்பு வழுவாமை வருமென்ற கூற்றை உட்கொண்டதனாலே நீ பிரியாயென்றே கூடினவளுடைய, தான் புல்லுதலையே விரும்பின இளமைச் செவ்வியையுடைய மார்பைப் பிரியாதிருத்தல் நின் மனத்திற்குப் பொருளாயிருக்குமாயின், அதுவே பொருளாவதல்லது பிரிகின்றது. பொருளாகுமோ? எ - று. 19. | (2) இடனின்றி யிரந்தோர்க்கொன் றீயாமை யிழிவெனக் கடனிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ (3) வடமீன்போற் றொழுதேத்த வயங்கிய கற்பினா டடமென்றோள் பிரியாமை பொருளாயி னல்லதை |
எ - து: தம்முடைய இல்வாழ்க்கைக்கு வேண்டும் பொருளில்லையென்று கூறி வந்து இரந்தவர்க்குச் சிறிதுங் கொடாதிருத்தல் இழிவாமென்று கூறி,
1. (அ) ‘‘நினக்கிவன் மகனாத் தோன்றிய தூஉ, மனக்கினி யாற்குநீ மகளாயதூஉம், பண்டும் பண்டும் பல்பிறப் புளவாற், கண்ட பிறவியே யல்லகாரிகை’’ மணி. 21: 29-32. (ஆ) ‘‘கிழவன் கிழத்தியெனவே பல பிறப்பினும் ஒருவர்க்கு ஒருவர் உரிமையெய்திற்று’’ தொல். களவியல். சூ. 2. நச். (இ) ‘‘இருவரும் எதிர்ப்பட்ட ஞான்று தொடங்கி உழுவலன்பால் உரிமை செய் தொழுகலிற் கிழவனுங் கிழத்தியுமென்றார்’’ தொல். கற். சூ. 1. நச். என்பன காண்க. 2. இடனென்பது செல்வமென்னும் பொருளில்வருதற்கு ‘‘இடனின்றி யிரந்தோர்க்கு’’ என்பது மேற்கோள்; குறள். 910. பரி. (அ) ‘‘பிரிவாற்றாமை யென்பது, களவிற் பிரிவாற்றுதல் வேண்டுமாறு போலக் கற்பினுட் பிரிவாற்றுதல் வேண்டப்படாது; என்னை? புறத்தார்க்குப் புலனாகாமை மறைத்தல் கற்பிற்கு வேண்டுவதன்றாகலின்’’ என்று கூறி, ‘‘இடனின்றி.....மென்றோள் பிரியாமை பொருளாயினல்லதை’’ என்பதனை மேற்கோள்காட்டி, ‘‘இனைய கற்பினாளைப் பிரியாமை பொருளாயினன்றி நும்மால் தரப்படும் பொருள் பொருளாகுமோ என்றதன் கருத்தாவது, பிரிவாற்றாமையின் இவள் இறந்துபடுவள். பின்னை அப்பொருள்கொண்டு ஆற்றும் இல்லறம் யாண்டையதெனத் தலைமகள் பிரிவாற்றாமை கூறியவாறாயிற்று’ என்பர் பேர். தொல். மெய்ப். சூ. 24. (ஆ) இதனையே பின்பற்றிச் சுருக்கி எழுதுவர் இ-வி. உரைகாரர் இ-வி. சூ. 580. 3. அருந்ததி, (அ) அனசூயையின்றிருமகள்; (ஆ) வசிட்டமுனிவரின் பத்தினி; (இ) வானிடத்தே வடதிசைக்கண் துருவநட்சத்திரத்தி னருகிலுள்ள எழுமுனிவர் குழுவிடையே கொழுநனொடு கெழுமி ஒரு சிறுவிண்மீன் வடிவமாகத் தோற்றுபவள்; (பிரதிபேதம்) 1. வழாமை.
|