கரிய (1) மழுவையுடையோன் சினக்கையினாலே அந்த முப்புரம் அழித்தலைப் பெற்று உதிர்வனபோல, போவார்க்கு வழியில்லையாக வீழ்ந்து குறுக்கிட்டுக் கிடந்த வெம்மை விளங்குந் தொலையாத வழியிடையே, நின்னை மறத்தலரிதாகிய வேட்கையையுடைய இவள் இவ்விடத்தே இறந்துபடும்படியாக, ஐயனே! பொருள்வயிற் பிரியத் துணிந்தீர்; அங்ஙனந் துணிந்த நீர் யான் கூறுகின்றதனைக் கேட்பீராக; எ - று. கண், காலத்தின்கண்வந்தது, கணிச்சியோன், சுட்டுப்பெயராய் நின்றது. அமரர் இரக்கையினாலே முக்கணன் மூவெயிலையும் உடல் (2) அவன்முகந்தெறுமாறுபோல, கதிர்தெறுகையினாலே வரைபிளந்து, அவன்சினக்கையினாலே அவ் வெயில் எறுபெற்று உதிர்வனபோல உதிர்ந்து, விலங்கிய ஆரிடையென்க. (3) கேண்மின் ஐய என்றது, ஒருமைப்பன்மை மயக்கம். (4) கதிர் தெறுதலின் மலைவெம்பிய சுரம் என்றதனான், (5) நடுவுநிலைத் திணைக்குரிய நண்பகலும் வேனிலும் குறிஞ்சியைச் சார்ந்து தோன்றினமை கூறினார். ‘‘சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே’’ (6) என்பதனால், வழியருமை கூறினார். இவ்விதிகள் மேல்வருவனவற்றிற்குங் கொள்க. இது தரவு.
கூற்றுவனே" கனுநூல்.கரு.(ஊ) ‘‘தென் புலத்தவன் போற்செய்த சீற்றமும்’’ திருக்கழுக்குன்ற. நாராயண. 12. (எ) ‘மடங்கல்போற் சினைஇ’ என்பதற்கு, ‘சிங்கம்போலச் சினந்து’ என்றலுமாம்; புறம். 71. உரை பார்க்க. 1. (அ) கணிச்சி, மழுவின்வேறான படைக்கலமுமாம்; ‘‘கையது கணிச்சியொடு மழுவே மூவாய், வேலுமுண்டத் தோலாதோற்கே’’ அகம். கடவுள் எனவருதல் காண்க. (ஆ) ‘‘எறிதரு கணிச்சிச் செங்கையீசன்’’ கந்த. காமதகன. 88. 2. சிவபெருமான் சினந்து (அ) திரிபுரத்தைத் தெய்வக்கணையால் எரித்தாரென்பது பயின்ற பெருவழக்கு; அன்றியும் (ஆ) சிரித்தெரித்தாரென்பதும் பெருவழக்கே; (இ) ‘விழித்தெரித்தா ரென்றுங் கூறுப. இவற்றால் முகத்திற்குத்தெறுதல் கூறினார். இம்மூன்றிற்கும் வடமொழிதென்மொழி இரண்டினும் ஆதாரமுண்டு. 3. (அ) ‘‘இறத்திரா லையமற் றிவணிலைமை கேட்டீமின்’’ கலி. 25. (ஆ) ‘‘வரையிடை வாரன்மினைய’’ திணைமொழியைம் 5. (இ) ‘‘ஐயா விளாம்பழமே யென்கின்றீர்’’ சீவக. 1553. 4. இதற்கேற்ற சொற்றொடர், எட்டாவது கலியில் உள்ளது. 5. தொல். அகத். சூ. 9. 6. தொல். பொருளியல். சூ. 22.
|