14

எனவிவள்;

24.புன்கண்கொண் டினையவும் பொருள்வயி னகற
லன்பன்றென்றியான் கூற வன்புற்றுக்
காழ்வரை நில்லாக்கடுங்களிற் றொருத்தல்
யாழ்வரைத் தங்கி யாங்குத் தாழ்புநின்
றொல்கவின்றொலைத லஞ்சியென்
சொல்வரைத் தங்கினர் காத லோரே.

இஃது ‘‘ஒன்றாத் தமரினும்’’ என்னுஞ் சூத்திரத்து ‘‘நாளது சின்மையு மிளமைய தருமையுந், தாளாண் பக்கழந் தகுதிய தமைதியு, மின்மைய திழிவு முடைமைய துயர,்ச்சியு மன்பின தகலழ மகற்சிய தருமையு, மொன்றாப் பொருள்வயி னூக்கிய பாலினும்’’ (1) 1என்பதனான், இன்மையது இழிவு கூறி இல்வாழ்க்கைநெறி ஆற்றுதற்குப் பொருள்வயிற் பிரிவேனென்ற தலைமகற்குத், தலைமகளது இயல்பு கூறி, இப்பெற்றியாளைப் பிரியாமையே பொருளாவதெனச் சொல்லிச் செலவழுங்குவித்தமை தோழி தலைமகட்கு வந்து சொல்லியது.

இதன் பொருள்.

(2)

தொடங்கற்கட் டோன்றிய முதியவன்முதலாக

(3) 

வடங்காதார் மிடல்சாய (4)வமரர்வந் திரத்தலின்

மடங்கல்போற் சினைஇ மாயஞ்செ யவுணரைக்
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலு


1. தொல். அகத். சூ. 41.

2. ‘‘முந்தி வந்துல கீன்ற முதற்பெய, ரந்தணன் படைவாங்கி’’ கம்ப. இராவணவதை 192. ‘‘தொடங்கற்கட்....மற்றைஇய’’ இது மைவரையுலகத்துப் பாலை வந்தது; தொல். அகத், சூ. 13. நச்.

3. ‘‘அடங்காதார் மிடல்சாய வமரர்வந் திரத்தலின்’’ என்பது இணையெதுகைக்கு மேற்கோள். தொல். செய். சூ. 93. நச்.

4. சிவபிரான்தேவர்வேண்டத் திரிபுரம் எரித்தமை: (அ) ‘‘ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண்கொளீஇ, யொருகணை கொண்டு மூவெயி லுடற்றிப், பெருவிற லமரர்க்கு வென்றி தந்த, கறைமிடற் றண்ணல்’’ புறம். 55. (ஆ) ‘‘திரிபுர மெரியத் தேவர் வேண்ட, வெரிமுகப் பேரம் பேவல் கேட்ப, வுமையவ ளொருதிற னாக வோங்கிய, விமையவ னாடிய கொடுகொட்டி யாடலும்’’ சில. 6: 40-43. என்பவற்றாலுமறியலாகும்.

(பிரதிபேதம்) 1. என்பதனுச்.