(2.) | தொடங்கற்கட் டோன்றிய முதியவன்முதலாக வடங்காதார் மிடல்சாய வமரர்வந்திரத்தலின் மடங்கல்போற் சினைஇ மாயஞ்செ யவுணரைக் கடந்தடு முன்பொடுமுக்கண்ணான் மூவெயிலு |
5. | முடன்றக்கான் முகம்போல வொண்கதிர்தெறுதலிற் சீறருங் கணிச்சியோன் சினவலினவ்வெயி லேறுபெற்றுதிர் வனபோல் வரைபிளந்தியங்குந ராறுகெட விலங்கிய வழலவி ராரிடை மறப்பருங் காதலிவளீண் டொழிய விறப்பத் துணிந்தனிர் கேண்மின்மற்றைஇய; |
11. | தொலைவாகி யிரந்தோர்க்கொன்றீயாமை யிழிவென மலையிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ நிலைஇயகற்பினா ணீநீப்பின் வாழாதாண் முலையாகம் பிரியாமை பொருளாயினல்லதை; |
15. | இல்லென விரந்தோர்க்கொன்றீயாமை யிழிவெனக் கல்லிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ தொல்லியல்வழாஅமைத் துணையெனப் புணர்ந்தவள் புல்லாகம் பிரியாமை பொருளாயினல்லதை; |
19. | இடனின்றி யிரந்தோர்க்கொன் றீயாமையிழிவெனக் கடனிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ வடமீன்போற்றொழுதேத்த வயங்கிய கற்பினா டடமென்றோள் பிரியாமை பொருளாயினல்லதை; |