12

ஆயின், ‘‘கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய், முற்படக் கிளந்த வெழுதிணை யென்ப’’ (1) என்றலிற் கைக்கிளையும் பெருந்திணையுங் கோத்தல்வேண்டுமெனின், அஃது ‘‘உரிப்பொருளல்லன மயங்கவும் பெறுமே’’ (2) என்பதனால், அவை உரிப்பொருளன்மையின் நால்வகை நிலத்தினும் மயங்கிவரப் பெறுமென்றார். ஆகலின் இத்தொகைக் கண்ணும் அவை மயங்கிவரக் 1கோத்தாரென்று கூறி விடுக்க. அவை விரவிய பாட்டுகள் வந்துழி அவற்றைக் காட்டுதும்.

இனி, ‘‘சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’’ (3) என்றவழிச் சொல்லாத முறையாற் சொல்லவும்படுமென்று 2பொருள்கொண்டு அதுபற்றிப் பாலை குறிஞ்சி மருதம் முல்லை நெய்தலெனவுங் கோத்தார். (4) 3ஐங்குறுநூற்றினும் பிறவற்றினும் வேறுபடக் கோத்தவாறுங் காண்க


1, 2, 3. தொல். அகத். சூ. 1, 13, 5.

4. ஐங்குறுநூறுமருநெய்குறிஞ்பாமுல்

ஐந்திணையைம்பது

முல்குறிஞ்மருபாநெய்

ஐந்திணை யெழுபது

குறிஞ்முல்பாமருநெய்

திணைமாலைநூற்றைம்பது

குறிஞ்நெய்பாமுல்மரு

திணைமொழி யைம்பது

குறிஞ்பாமுல்மருநெய்

கைந்நிலை

குறிஞ்பாமுல்மருநெய்

மதுரைக்காஞ்சி

மருமுல்குறிஞ்பாநெய்

பதிற்றுப்பத்து 30

நெய்பாமருகுறிஞ்முல்

பெருங்கதை

மருமுல்குறிஞ்பா....

தொல்காப்பியம்

முல்குறிஞ்மருநெய்....

இறையனாரகப்பொருள்

குறிஞ்நெய்பாமுலமரு

நாற்கவிராயநம்பியகப்பொருள்

குறிஞ்பாமுல்மருநெய்

வீரசோழியம்

முல்குறிஞ்மருபாநெய்

மாறனகப்பொருள்

குறிஞ்பாமுல்மருநெய்

இலக்கணவிளக்கம்

குறிஞ்பாமுல்மருநெய்

கம்பர் முதலியோர் குறிஞ்சியை முதலாகக் கொள்வர்.

(பிரதிபேதம்) 1. கோத்தார் அவை வரவரப் பாட்டுக்கள் வந்துழி அவற்றுட்காட்டுதும்.
2. பொருள்கொண்டமைபற்றி.
3. ஐங்குறுநூற்றின் வேறுபடக் கோத்தவாறு காண்க.