11

மாகாது; எண்ணுஞ்சின்னமுமிழத்தலின். ஆகலின், 1இஃது எண்ணிடையிட்டுச் சின்னங்குன்றிய (1) கொச்சகவொருபோகாயிற்று.

சீர்வகைக் கலிக்கு, ‘‘விராய தளையு மொரூஉநிலை யின்றே.’’ (2) என்பதனால் தளைவிரவிவரப்பெறும் என்றலின், செல்லுமென நேரீற்றியற்சீர் வந்தது; ‘‘கலித்தளை யடிவயி னேரீற் றியற்சீர், நிலைக்குரித் தன்றே தெரியுமோர்க்கே’’ (3) என்ற விதி 2கட்டளைக்கலிக்காம். 3(1)

கடவுள் வாழ்த்து முற்றிற்று.

முதலாவது பாலை.

‘‘நடுவ ணைந்திணை நடுவண தொழியப், படுதிரை வையம் பாத்திய பண்பே.’’ (4) என்றும், ‘‘மாயோன் மேய காடுறை யுலகமுஞ், 4சேயோன் மேய மைவரை யுலகமும், வேந்தன் மேய தீம்புன லுலகமும், வருணன் மேய பெருமண லுலகமு, முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச், சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.’’ (5) என்றும், நிலம் நான்கேயாகக் கூறலிற் பாலைக்கு நிலமின்றெனின், அற்றன்று; ‘‘புணர்தல் பிரித லிருத்தலிரங்க, லூட லிவற்றி னிமித்த மென்றிவை, தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.’’ (6) என நால்வகை 5நிலத்திற்குங் கொண்ட உரிப்பொருட் கிடையே பிரிதலும் உரிப்பொருளாக ஆசிரியர் கொண்டார்; அப்பிரிவு நான்கு நிலத்திடையும் பொதுவாய் மயங்கிவருமென்று கருதி. ஆதலான் ஈண்டுப் பாலைத்திணையையும் திணையாக ஆசிரியர் 6நல்லந்துவனார் கோத்தாரென்று கூறுக.


1. கடவுள் வாழ்த்து முத்தமிழ்க்கும் பொதுவென்றும், இயற்றமிழில் வருங்காற் கொச்சக வொருபோகாய் வருமென்றும் கூறுவர், அடியார்க்கு நல்லார். சிலப். 6 : 35.

2. 3. தொல். செய். சூ. 61, 275.

4. 5, 6. தொல். அகத். சூ. 2, 5, 94.

(பிரதிபேதம்) 1. இது எண்ணிடை, 2. கட்டளைக்கலிக்காதலின், 3. மதுரையாசிரியர் நல்லந்துவனா ரியற்றிய கடவுள் வாழ்த்து முற்றும், 4. செய்யோன், 5. நிலத்துங்கொண்ட, 6. நவ்வந்துவனார் கோத்தார்.