15. | (1) | பாணியுந்தூக்குஞ் சீரு மென்றிவை மாணிழை யரிவை காப்ப | | (2) | வாணமில் பொருளெமக்கமர்ந்தனை யாடி |
என்பது: அழித்தற்றொழிலை நிகழ்த்துகின்ற காலங்களிலே, பாணியுந் தூக்குஞ் சீருமென்று சொல்லப்பட்ட இவையிற்றை மாட்சிமைப்பட்ட அணியினையுடைய (3) உமாதேவி (4) காப்ப ஆடிக், காத்தற்றொழிலை நிகழ்த்துகின்ற இக்காலத்தே ஒரு வடிவைக்கொண்டு, நேயமில்லாத பொருளாகிய 1எமக்குப் பொருந்தினாய், இதற்குக் காரணங் கூறுவாயாக; என்றவாறு. இது சுரிதகம். இப்பாட்டுப் பலமெய்ப்பாடுகளுந் தோற்றுவித்து நின்றதேனும், அவை உரைப்பிற் பெருகு மாதலின், முடிந்த பொருளாற் பிறந்த மெய்ப்பாடே கூறுதும்; அது தன்கட் டோன்றிய ஆக்கம்பற்றிய மருட்கையாம். இது நான்கு உறுப்பான் வந்ததேனும், தேவபாணியான் வருதலின், முதனிலை யொத்தாழிசை 2யாகாது. ‘‘ஏனையொன்றே, தேவர்ப் 3பராஅ முன்னிலைக் கண்ணே’’ (5) என்பதனால், தேவர்ப் பராயிற்றேனும் வண்ணகமு
1. (அ) ‘‘சீருடை நன்மொழி நீரொடு சிதறி’’ (பொருந. 24.) என்பதன் விசேடவுரையில் ‘சீரெனவே பாணியுந்தூக்கு முளவாயின’ என நச்சினார்க்கினியரும் (ஆ) ‘‘உமையவ ளொருதிறனாக வோங்கிய, விமையவனாடிய கொடுகொட்டியாடலும்’’ (சிலப். 6: 42-3.) என்புழி; உமையவ ளொருதிறனாக வென்பதற்கு ‘உமையவ ளொருகூற்றினளாய் நின்று பாணி தூக்குச் சீரென்னுந் தாளங்களைச்செலுத்த’ என அடியார்க்கு நல்லாரும் இவ்வடியை உட்கொண்டு எழுதியிருப்பவை ஈண்டறிதற்பாலன. 2. ‘ஆணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி’ என்பது அகப்பாட்டு வண்ணத்திற்கு மேற்கோள். தொல். செய். சூ. 224. பேர். நச். 3. (அ) உமாதேவி சிவபெருமானாடலைக் காணுகிறாளென்பது பெருவழக்கு; அன்றியும் (ஆ) அதனருமைகளை அறிந்து மகிழ்ந்து பாடுகிறாளென்றுங்கூறுப. இவற்றொடு அவ்வாடலுக்கிசையத் (இ) தாள மொத்துகிறாளென்றும் கூறுவதை ‘‘கடையுகந்தன்னி லெல்லா வுலகமுங் கடவுட் டீயா, னடலைசெய் தமலை தாள மறைதர நடிக்கு மீசன்’’ என்பதனானும் அறிக. 4. ‘காப்ப’ என்றது ஒத்துதலாற் காப்ப என்றபடி ‘திதத் தத்தத் தித்தத் திதி தாதை’ (கந்தரந். 54.) என்பதற்கு, ‘திதத் தத்தத் தித்த’ என்னுந் தாளமானங்களைத் திருநடனத்தாற் காக்கின்ற (தகப்பன்) பரமசிவனுமென உரை எழுதியிருத்தலுங் காண்க. 5. தொல். செய். சூ. 138. (பிரதிபேதம்) 1. எம்மிடத்தேபொருந்தினாய், 2. ஆகாது, என்னை? ‘ஏனையொன்றே’, 3. பராஅய, பராவுதன் முன்னிலை.
|