9

(1) பாண்டரங்கம், பண்டரங்கமென விகாரமாயிற்று.

‘‘ஏறமர் கடவுண் மூவெயி லெய்வுழிக், கூறுகூறாகக் கொடியொடும் படையொடும், வேறுவே றுருவின் விண்மிசைப் 1பரந்தன, ரவ்வழி யொளியொடு முருவொடுந் தோன,்றித் தேர்மு னின்று திசைதலை பனிப்பச், சுவையுங் குறிப்பு மொழிவில தோன்றி, யவையவை யவ்வழி யாடின னாட, மைந்தரு மகளிருந் 2தந்தநிலை யழிய, மெய்ப்படு சுவையொடு கைப்படை மறப்பக், கடிய காலக் காற்றென வேற்றவன், படிநிலை திரியாப் பாண்டரங் கம்மே’’ இதனான் உணர்க.

11.(2)கொலையுழுவைத்தோலசை இக்கொன்றைத்தார்சுவற்புரளத்
தலையங்கைகொண்டு நீ காபால மாடுங்கான்
முலையணிந்த (3) முறுவலாண் முற்பாணி தருவாளோ

என்பது: கொலைத்தொழிலை யுடைய புலியைக் கொன்று அதன்றோலை உடுத்துக் கொன்றைப்பூவாற் செய்த மாலை தோளிலே அசைய (4) அயன்றலையை அகங்கையிலே ஏந்துகையினாலே காபாலமென்று பெயர்பெற்ற கூத்தை நீ ஆடுங்காலத்து, முல்லையையொத்த எயிற்றினையுடையாளோ ஒரு தாளத்தின் முதலெடுக்குங் காலத்தினையுடைய பாணியைத் தருவாள்? ஆண்டுப் 3பிறரில்லையே; என்றவாறு.

முல்லை, முலையெனவிகாரமாயிற்று. அணி, உவமவுருபு, ஓகார மூன்றும் எதிர்மறை.

ஒருதாளத்திற்குப் பாணி தூக்குச் சீரென்னும் மூன்றும் உளவேனும் 4ஒவ்வொன்று ஒவ்வோராடற்கு மிகுதிவகையாற் சிறந்தமைபற்றி ஒரோவொன்றையே கூறினார். தாழிசைகளிற் சீர் தூக்குப் பாணியென நின்றனவேனும், அவை நிகழும் அடைவுபற்றிச் சுரிதகத்துப் பாணியுந்தூக்குஞ்சீருமென அடைவு கூறினார்.

இவை மூன்றும், தாழிசை.
எனவாங்கு,
என்பது: என்று சொல்லும்படியாக; என்றவாறு.
ஆங்கு, அசை; அவர் கூத்தாடுகின்ற காலங்களை யெனினுமாம்.
இது தனிச்சொல்.


1. “பண்டங்கன் வந்து பலிதா வென்றான்’’ பொன்வண்ணத். 33. என்பதனால், இச்சொல் பண்டங்கமெனச் சிதைந்தும் வரும்போலும்.

2. ‘‘புலித்தோலை யரைக்கசைத்து, மின்னார் செஞ்சடைமேன் மிளிர் கொன்றை யணிந்தவனே’’ தே.

3. முறுவல் - சிரிப்பு; பல்லுக்கு ஆகுபெயர். குறள். 1113.

4. ‘‘அயன்றலைக்கொண்டு செண்டாடல்பாடி’’ என்பது ஈண்டு ஆராயத்தக்கது.

(பிரதிபேதம்) 1. பாத்தனரவ்வழி, பரந்தனவவ்வழி, 2. தந்நிலையொழிய. 3. (தாழிசைமூன்றனிறுதியுரையிலும்) பிறரில்லையே யென்க. 4. ஒருவோராடன் மிகுதி.