8

1‘‘கொட்டி யாடற் றோற்ற மொட்டிய, வுமையவ ளொருபாலாக 2வொருபா, லிமையா நாட்டத் திறைவ னாகி, யமையா வுட்கும் வியப்பும் விழைவும், பொலிவும்.....பொருந்த நோக்கிய, தொக்க 3வவுண ரின்னுயிரிழப்ப, வக்களம் பொலிய வாடின னென்ப, மற்றதன், 4விருத்தங் காத்தற் பொருளொடு கூடிப், பொருத்த வரூஉம் 5பொருந்திய பாட, றிருத்தகுமரபிற் றெய்வந் துதிப்பே.’’ இதனான் உணர்க.

8. (1) மண்டமர்பலகடந்து மதுகையா னீறணிந்து
(2) பண்டரங்க மாடுங்காற்பணையெழி 6லணைமென்றோள்
வண்டரற்றுங்கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ

என்பது: மிக்குச்செல்கின்ற போர்களிற் (3) பலவாகிய 7முப்புரங்களைவென்று அந்த வலியாலே அவர்கள் வெந்தவிந்தநீற்றை அணிகையினாலே பாண்டரங்கமென்னும் பெயர்பெற்ற கூத்தை நீ ஆடுகின்ற காலத்து (4) மூங்கிலினது 8அழகையுடைய அணைபோன் மெல்லியவாகிய தோள்களையுடைய (5) வண்டுகள் ஒலிக்குங் கூந்தலையுடையாளோ 9தாளத்தினிடை நிகழுங்காலத்தினையுடைய தூக்கைத் தருவாள்? ஆண்டுப் பிறரில்லையே; என்றவாறு.


1. (அ) ‘‘மண்டமர் கடந்தநின்’’ முருகு. 272. (ஆ) ‘‘மண்டமர் கடந்தவேன் மன்னர் மன்னனை’’ (இ) ‘‘மண்டமர் கடந்தவே னளன்’’, (ஈ) ‘‘மண்டமர் கடந்த வொள்வேன் மன்னவற்கு’’ நைடதம். நளன்றூது. 10, 68; போர்புரி. 5.

2. (அ) ‘‘பாண்டரங்கம தியற்றுவான்’’ கந்த. இரண்டாநாட் சூர. 293. (ஆ) ‘‘பண்டரங்க மாடுங்காற் பணையெழி லணைமென்றோள்’’ என்னும் பகுதி கட்டளையடிக்கு மேற்கோள். தொல். செய். சூ. 29. பே. நச்.

3. புரம் மூன்றாதலிற் பலவாகிய முப்புரங்கள் என்றார்; ‘‘மற்றுமெம்பிரான்பல் வேறு வகையினாற் புரங்கள் செற்றல்,
சற்றல வெழுபானாலு தரமெனச் சாற்றுநூல்கள்’’ (திருப்பாசூர். மாயாபுரி 7) என்றும் புராணமுண்டாகலின், முப்புரங்களே பலவிருந்தன வென்றலுமாம்.

4. ‘‘அளவே வடிவொப்ப தன்றியே மற்றை, யிளவேய் நிறத்தானு மேய்க்குந்-துளவேய், கலைக்குமரியேறுகைப்பாள் காரவுணர் வீரந், தொலைக்குமரி யேறுகைப்பாடோள்’ என்பது ஈண்டுக் கருதத்தக்கது.

5. மகளிர் கூந்தலில் வண்டொலிப்பதாகக் கூறல் கவிமரபு; ஞான பூங்கோதை முதலிய பெயரான் உமையாள் கூந்தற்கு இயற்கை மணங்கூறி இயைப்பாரு முளர்; முன் பின் மரபுநோக்கின் அது பொருந்தாமை விளங்கும்.

(பிரதிபேதம்) 1. கொட்டியாடிய தோற்றம், கொட்டியாடற் கேற்றம்,
2. ஒருபாலிற் கிமையாநாட்டத்து,
3. அவுணரினல்லுயிர்,
4. விருத்திகாத்தல்,
5. பொருந்தியவாடல்,
6. இணை மென்றோள்,
7. முப்புரங்களைவென்ற அந்நகைவலியாலே அவர்கள் வெந்திட வீழ்ந்தகீற்றை,
8. அழகையுடைத்தாகிய அனைபோன்ற மெல்லிய.
9. அதனிடை.