7

கொண்டு, கொடிதாகிய கொட்டியெனனுங் (1) கூத்தை நீ ஆடுகின்ற காலத்து, பக்கம் உயர்ந்த அகன்ற அல்குலினையுடைய கொடியையொத்த இடையினையுடையாளோ தாளமுடிந்துவிடுங் காலத்தினைத் தன்னிடத்தே கொண்ட சீரைத் தருவாள்? ஆண்டுப் பிறரில்லையே; என்றவாறு.

1கொடுங்கொட்டி, கொடுகொட்டி என விகாரமாயிற்று. கொடுங்கொட்டி யென்றார் (2) எல்லாவற்றையும் அழித்துநின்று ஆடுதலின்.


1. வீரர் தம் வெற்றிக்காலத்துக் களித்து ஆடுதல் மரபாதலான் வெற்றிக்கு ஆடல் ஆடு எனப்பெயரும் வழங்கும். இவ்வாறு ஆடுதல் மரபென்பதனை. (அ) ‘‘கோடியர் முழவின் முன்ன ராடல், வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி, .......... மடம்ம்பெருமையி னுடன்றுமேல்வந்த, வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி, வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே’’ பதிற். 56. (ஆ) ‘‘ஆளுகு களத்து வாள்பல வீசி, யொன்னா மன்னரு மாடினர்’’ பாரதம். (இ) ‘‘வென்றாடு துணங்கை’’ பதிற். 77. (ஈ) ‘‘நீர்த்திரையரங்கத்து நிகர்த்து முன்னின்ற, சூர்த்திறங் கடந்தோனாடிய துடியும்’’ சில. 6: 50-51. (உ) ‘‘ஆடலமர்ந்தா னமர்வெய்யோன்’’ பு-வெ. தும்பை. 15. (ஊ) ‘‘அடையா, ராளமர் வென்றி யடுகளத்துத், தோள்பெயராக், காய்ந்தடு துப்பிற் கழன்மறவ ராடினார், வேந்தோடு’’ பு-வெ. தும்பை. 21. (எ) ‘‘ஆளுங் குரிசி லுவகைக் களவென்னாங், கேளன்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி யாடினார்’’ தொல். புறத். சூ. 17. நச். மேற். (ஏ) ‘‘சூடிய பொன்முடியும் பூணு மொளிதுளங்க, வாடிய கூத்தரின்வேந் தாடினான் - வீடிக், குறையாடல் கண்டுவந்து கொற்றப்போர் வாய்த்த, விறையாட வாடாதார் யார்’’ தொல். புறத். சூ. 21. நச். மேற். (ஐ) ‘‘வயிரவன் மனத்தான்றன்னைப் பொருதுவண் சூலத்தேந்தி வயிரவன் களிப்புமிக்கு வாகையினடனஞ் செய்தான்.’’ காஞ்சி. அந்த கேச. 29. என்பவைகளும் விளக்கும். இம்மரபாற் சிவபெருமான் ஆடிய மூன்றாடல்கள் இங்கே கூறப் பெற்றுள்ளன.
(ஒ) ‘‘கொடுகொட்டி பாண்டரங்கங் காபாலமெனு மிறைவன் கூத்து மூன்றும்’’ என்பதும் ஈண்டறிதற் பாலது. இவற்றுள் (ஓ) கொடுகொட்டியும் பாண்டரங்கமும் பதினோராடலினுட்பட்டவையென்று சிலப்பதிகாரத்தால் (3: 14 உரை 6: 39-66) தெரிகின்றது. அதில் கொடுகொட்டி யாவையுமொழித்தகாலைத் திருக்கூத்தெனப்படாது மூவெயி லழித்தகாலைத் திருக்கூத்தெனப்பட்டிருத்தல் சமய நூன்மலைவுபோலும். (ஒள) இவ்விரண்டும் ‘வடவனத்தொருநாள்’ என்னுங் கல்லாடத்துங் கூறப்பட்டிருக்கின்றன.

2. பலவென்பதற்கு எல்லாமென்று பொருள்கூறுதலை ‘‘பலர் புகழ்ஞாயிறு’’ (முருகு. 2.) ‘‘பலர் புகழ்புலவர்’’ (பு-வெ. கொளு 269) என்பவற்றுக் கெழுதியிருக்கும் உரையும் வற்புறுத்தும்.

(பிரதிபேதம்) 1 ‘கொடுகு கொட்டி’ (என ஒருபிரதியில் ஊகிக்கும்படி மேலே ஒட்டி எழுதப்பட்டுள்ளது; இது சிறந்ததென்ப மரூஉ மரபறிவார்.).