6

வேதமுமாம். (1) இனி வேதவியாதர் 1வரையறைப்படுத்திய காலத்து ஓதுகின்ற நான்கு வேதமுமாம்.

இனியென்றது, ‘‘இனிநினைந் திரக்க மாகின்று’’ (2)என்றாற்போல இப்பொழுது என்னும் பொருள் தந்தது.

இது தரவு.

5 படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ
கொடுகொட்டி யாடுங்காற் கோடுய ரகலல்குற்
கொடிபுரை நுசுப்பினாள்கொண்டசீர் தருவாளோ

என்பது: நின்கையில் ஒலிக்கின்ற (3) பறை பலவாச்சியங்களையும் ஒலியா நிற்கக் 2கட்புலனாய்ப் (4) பல வடிவுகளையும் மீண்டு நின்னிடத்தே ஒடுக்கிக்


1. தொல். பாயிரத்து நான்மறை யென்பதற்குப் பொருள் கூறுமிடத்து ‘‘நான்கு கூறுமாய் மறைந்த பொருளு முடைமையால் ‘நான்மறை’என்றார்; அவை : தைத்திரியமும் பௌடியமும் தலவகாரமும் சாமவேதமுமாம்.இனி, இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமுமென்பாருமுளர்; அது பொருந்தாது; இவர் இந்நூல் செய்த பின்னர் வேதவியாதர் 1 சில்வாழ்நாட் சிற்றறிவினோ ருணர்தற்கு நான்கு கூறாகச் செய்தாராகலின்’’ என இவ்வுரைகாரரே எழுதி யிருத்தலால்இங்கு மறையைக் குறித்தெழுதப் பெற்றிருக்கும் பின் வாக்கியம் பிறரால் இடைச் செருகப் பெற்றதோவென ஐயுறும்படி இருக்கிறது.

(பிரதிபேதம்) 1 சின்னாட்பல்பிணிச் சிற்றறிவினோர்

2. புறம். 243.

3. இங்கே பறையென்றது தமருகத்தை. கொடுகொட்டியைக் கூறுமிடத்து, ‘பரிதரு செங்கையிற் படுபறையார்ப்பவும்’ என சீல. 28: 68 இலும் பறை கூறப்பெற்றிருத்தலை ஒப்பு நோக்குக.

4. (அ) ‘பல வடிவங்களையும் மீண்டு நின்னிடத்தேயொடுக்கிக்கொண்டு’என்றது, உலகம் இறைவன்பாலிருந்து தோன்றி அவன்பாலே யொடுங்குமென்னும் வழக்குப்பற்றி. (ஆ) ‘‘நீலமேனி வாலிழைபாகத், தொருவ னிருதாணிழற்கீழ், மூவகை யுலகு முகிழ்த்தன முறையே’’ ஐங். கடவுள். (இ) ‘‘மணிமிடற் றந்தணன் றாவி றாணிழ றவிர்ந்தன்றாலுலகே’’ அகம். கடவுள். (ஈ) ‘‘போற்றியெல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்........ போற்றியெல் லாவுயிர்க்கு மீறா மிணையடிகள்" திருவாசகம். திருவெம். 20. (உ) ‘நாதனுருத்திர னாதியினித்திக ஞாலம்விதித்ததுவும்’. பிரமோத்தா. சிவயோகிமகிமை. 2. (ஊ) ‘‘அருள் சிவத்தினின் றெழவெழுந்தகிலமு மதுபின், மருவி யொன்றுறக் கரத்தலு மடியுமாபோல’’ திருவானைக்காப். கவுதமப். 22 (எ) ‘அயனாகி நின்று படைத்தமுதல்வன்’ கலி. 129 : 1-2. உரை.என்பன காண்க.

(பிரதிபேதம்) 1 வரையறைப்படுத்தி இக்காலத்து,
2 கட்புலனாகிய பலவடிவு.