(1) கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி மாறாப்போர் 1 மணிமிடற் (2) றெண்கையாய் கேளினி என்பது: ஆறங்கத்தையும் அறியும் அந்தணர்க்கு (3) அரியவாகிய வேதங்கள் பலவற்றையும் அருளிச்செய்து, (4) பகையென்று தெளிகின்ற (5) கங்கையின் வேகத்தைச் சடையில் ஒரு கூற்றிலே அடக்கி, முப்புரத்திலே தீயைச்செலுத்தி, வாக்காற் கூறப்படாமல் மனத்தாற் குறித்த அப்பொருட்கும் எட்டாமல் நிற்கும், கடிதாகிய கூளியினது முதுகிடாத போரினையும் நீலமணிபோலுந் திருமிடற்றினையும் எட்டுக்கையினையும் உடையாய், இங்ஙனங் கட்புலனாய் நின்று இப்பொழுது யான் கூறுகின்றதொன்றைக் கேள்; என்றவாறு. பகர்ந்து கரந்து மடுத்து என்னுஞ் செய்தெனெச்சங்கள் (6) செல்லுமென்னும் பெயரெச்சத்தோடு முடிந்து, 2அஃது எண்கையாய் என்னுங் (1) குறிப்புப் பெயரோடு முடிந்தது.
1. (அ) கூற்றெச்சம் குறிப்பெச்சமெனவும் (ஆ) ‘‘கூறியிட்டிடாமற் குறிப்பினாலுரைப்ப’’ எனவும் கூறுதலும் குறித்தலும் இணைந்து வருதல் காண்க. (இ) ‘‘கூறாமற் குறித்ததன் மேற்செல்லும்’’ என்னும்பகுதி மல்லீறுவினை யெச்சமாய் வந்ததற்கு மேற்கோள். இதனைச் சிலர் அல்லீறென்றும் கொள்வர். தொல். வினை. சூ. 32. சே; 35. பே; 31. நச்; நன். வினை. சூ. 24. மயிலை. விருத்தி. இரா. இ - வி. சூ. 246. 2. ‘‘எண்டோள் வீசிநின் றாடும் பிரான்றனை’’ தே. திருவங்கமாலை. 3. அருங்கேடன் (குறள் 210) என்புழிப்போல அருமை இன்மைப் பொருளில் வந்ததாகக் கொள்ளின் அருமறை யென்பதற்கு இந்நிலவுலகத்திலில்லாத வேதங்கள் என்று பொருள் கொள்ளுதலுமாம். எஞ்சிய பொருள்களை யேமுறநாடித், திங்கள்போலத் திசைவிளக்கும்மே’ என முருகற்குக் கூறியிருத்தலுங் காண்க. 4. கங்கை சினந்துவந்தமைபற்றித் தேறுநீரென்பதற்குப் பகையென்று தெளிகின்ற கங்கையென்று பொருள் கூறினர் போலும். 5. கங்கையைச் சடையில் ஒருகூற்றிலே அடக்கியதை ‘‘உந்தியம்புயத் துதித்தவ னுறைதரு முலகு, மிந்திராதிய ருலகமு நடுக்குறவிரைந்து, வந்துதோன்றினள் வருந்தி மலைமகள் கொழுநன், சிந்திடாதொரு சடையினிற் கரந்தனன்சேர’’ என்பதனால் உணர்க. கம்ப. அகலிகை. 55. 6. ‘‘காலைநெற்றியி னகிலமுஞ்சூடு கனலி குறைபட விரைவர்தம் மேலை நெற்றி விழிக்கவந்து பணிந்து என்னுந் தாழிசை (பிரதிபேதம்) 1 மணிமிடத்த வெண்கையாய் கேஎளினி.
|