88

என வாங்கு

எ-து: என்று; எ-று.

ஆங்கு அசை.

இது தனிச்சொல்.

23 அனையவை காதலர் கூறலின் வினைவயிற்
பிரிகுவ ரெனப்பெரி தழியாதி திரிபுறீஇக்
கடுங்குரை யருமையகாடெனி னல்லது
(1)  1கொடுங்குழாய்துறக்குந ரல்லர்
(2) நடுங்குதல்காண்மார் நகைகுறித் தனரே

எ-து:நினது அழகு கெடும் அச்சமாகிய அத்தன்மையவற்றை நின்னைக்காதலித்தவர்கூறுகையினாலே யாம் பிரியின் இவள் இறப்பளென்று பிரியார்; ஆதலான் மனத்தைத் திரிவுறுத்தி வினையிடத்துப் பிரிகுவரென மிக நெஞ்சழியாதேகொள்; வளைந்த மகரக்குழையையுடையாய்! காடுகடிய அருமையவென்று 2சொல்லுவாராயின் அது நினது மெய்ந்நடுக்கத்தைக் காண்டற்கு ஒரு விளையாட்டைக் குறித்துக் கூறினாரென்பதல்லது துறப்பரென்று நான் சொல்லுமவரல்லர்; எ-று.
காட்டின் கடுமை தாமே கூறினார், நாம் போதற்கு உடம்படேமென்பது தாமே உணர்வாராகலின்.

இது சுரிதகம்.

தாழிசைகள் தலைவன் உடன்போக்கு மறுத்துக்கூறியன. (3) வினைவயிற் பிரிவரெனவே கற்பிற் கூறியதாயிற்று. 3காடு கடுங்குரையருமையவெனத் தரவிற் பொருளையும் சுரிதகத்து உடன் கொண்டு கூறினார், " தரவியலொத்து மதனகப் படுமே" என்னும் (1) சூத்திரத்து இயலென்றதனால்.


1. நடுக்கமென்பது யாதானு மொருபொருளை இழக்கின்றோ மெனவருமனநிகழ்ச்சி யென்றுகூறி அம்மெய்ப்பாட்டிற்கு, "கொடுங்குழாய்.......................நடுங்குதல். காண்மார் நகைகுறித்தனரே" என்பதை (தொல்,மெய்ப். சூ. 12.) மேற்கோள் காட்டினர், இளம்பூரணர்.

2. (அ) 'நடுங்குதல் காண்மார் நகை குறித்தனரே' என்பதனொடு "புல்லாதிராஅப் புலத்தை யவருறு, மல்லனோய் காண்கஞ் சிறிது" என நகையாடிச் சொல்லிய (1301) குறள். ஒருவாறு ஒப்புநோக்கற்பாலது. (ஆ) "நடுங்குதல் காண்மார் நகை குறித்தனரே" என்பது தன் இளமை பொருளாக நகை பிறந்ததற்கு (தொல்.மெய்ப்.சூ. 4. பே.) மேற்கோள்.

3. "அனையவை காதலர் கூறலின் வினைவயிற், பிரிகுவ ரெனப்பெரிதழியாதி யென வினைவயிற் பிரிவு கூறலின் இது, கற்பிற்குக் கூறியதாயிற்று," என்பது (தொல்.அகத் சூ. 45. நச்) காணப்படுகின்றது.

(பிரதிபேதம்) 1 கொடுங்குழாஅய், 2 சொல்லுவாராயின் நினது, 3 காடுங்கடுங்.