27

எ - து: நீ கடுகத் துறப்பையாயின் இவள் (1) வகுப்பையுடைய உறுப்புக்கள் கெடுமென்று நினக்குப்பொருந்தும் வழியாலே யாங்கள் இரந்துகொள்ளவும், இவள் வருத்தத்தை அறியா யாயினாய். இனி நின்னைப் போகாமற்றடுப்பன, நீ போம் நீண்டவழியிடத்து, நமக்குப் பற்றுக் கோடென்று சேர்ந்து படரப்பட்ட மரம் வாட, அதனைச் சேருதலைக் கைவிட்டு வீழ்ந்து கிடந்த பூங்கொடிகள்; எ - று.

மரந் தலைவியும், கொடி சுற்றமுமாகக் கூறினாள். மரத்தினது நிழலில் நிற்றலின், கொடி மரம் வாடுமளவும் நின்றது.

14.பிணிபுநீ விடல்சூழிற் 1பிறழ்தரு மிவளெனப்
பணிபுவந் திரப்பவும் பலசூழ்வா யாயினை
துணிபுநீ செலக்கண்ட வாற்றிடை யம்மரத்
தணிசெல வாடிய வந்தளிர் தகைப்பன

எ - து: நீ சில நாட் பிணித்துக்கொண்டு பின்னைக் கைவிடுதலைக் கருதுவா யாயின் இவள் இறந்துபடுவளென்று தாழ்ந்து வந்து இரந்து கொள்ளவும், 2வினைவயிற் செல்லுமாறு பலவற்றையுஞ் சூழ்வாயாயினாய். இனி நின்னைத்தடுப்பன, நீ போதற்கு நெஞ்சாற் றுணிந்து கண்டு வைத்த வழியிடத்தில், முற்கூறிய மரத்தின் அழகு போக, வாடிக்கிடந்த அழகிய 3தளிர்கள்; எ - று.

முற்படக் கூறிய நீரும்மலரும் மரமுங்கொடியும் போலப் பற்றுக் கோடாதலன்றி இவளுஞ்சுற்றமும் முதலுஞ்சினையுமாயிருப்பர் 4என்றாள்.

இவை மூன்றும், தாழிசை.

இத்தாழிசைகளிற் கூறிய இறைச்சிப் பொருள்கள் திணைப்பொருட்கு உபகாரப்பட்டு நின்றவாறு காண்க.

எனவாங்கு

எ - து: என்று; எ - று.
ஆங்கு, அசை.
இது தனிச்சொல்.

19.யாநிற் கூறவு மெமகொள்ளா யாயினை
யானா திவள்போ லருள்வந் தவைகாட்டி

1. ‘‘ஸமவிபக்தாங்க:’’ என்பதற்கும், ‘வகைமாலை’ என்பதற்கும் எழுதப் பெற்றுள்ள பொருள்கள் இங்கே அறிதற்பாலன.

(பிரதிபேதம்) 1 பிறழாகும், 2 விணையிற் செல்லுமாறு, 3 தளிர், 4 என்றதாயிற்று.