கணபதி துணை. திருச்சிற்றம்பலம். எட்டுத் தொகையுள் ஆறாவதாகிய கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியருரையும் கடவுள் வாழ்த்து. (1) | (1) | ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்துக் கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி மாறாப்போர் மணிமிடற் றெண்கையாய் கேளினி; | | 5 | படுபறைபலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ கொடுகொட்டி யாடுங்காற் கோடுயரகலல்குற் கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ; | | 8 | மண்டமர்பலகடந்து மதுகையா னீறணிந்து பண்டரங்க மாடுங்காற்பணையெழி லணைமென்றோள் வண்டரற்றுங் கூந்தலாள்வளர்தூக்குத் தருவாளோ; |
1. இச்செய்யுள், கலிப்பாவான் வாழ்த்துவந்தது; (தொல். செய். சூ. 109. நச்) மூன்றடியாற் சுரிதகம் வந்தது; (தொல். செய். சூ. 131 ‘போக்கியல்’ இளம்) தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகமென்னும் நான் குறுப்புடையதும் கொச்சகவொருபோகு; (தொல். செய். சூ. 149. பே. நச்) என்பவற்றிற்கு மேற்கோள்.
|