{2:92}__1+
{$} பட்டம் பால் நிறம் மதியம்
Civaṉ wears a plate of gold and a crescent as white as milk;
[[PP: பட்ட நெற்றியர் (campantar pallavaṉiccaram, 2);
பிறை நுதல் வண்ணம் ஆகின்று (puṟam, 1-9)]]
படர் சடைச் சுடர்விடு பாணி
bore sparkling water on his spreading caṭai.
நள்ளிருள் நட்டம் ஆடும் நாதனார் நவின்று உறை கோயில்
the temple in which the chief who dances at midnight dwells with desire.
புள்தன் பேடையொடு ஆடும் பூம் புகலூர்
which is in pukalūr where birds play with their females.
தொண்டர் போற்றி வட்டம் சூழ்ந்து அடிபரவும் வர்த்தமானீச் சரத்தாரே
is in varttamāṉiccaram where devotees praise and surround him on a circle and pay obeisance to his feet.

{2:92}__2+
{$} முயல் வளாவிய திங்கள் வாள் முகத்தது அரிவையில் தெரிவை இயல் வளாவியதுடைய இன்னமுது எந்தை எம் பெருமான்
our Lord and our father who has a lady who is as sweet as the sweet nectar and who has the nature of arivai and terivai whose face is like the full moon in which the black spot is compared to the hare;
[[it is a literary convention to describe the black spot in the moon as a hare;
ஒண் கதிர் வாள் மதியம் சேர்தலால் ஓங்கிய, அங்கண் விசும் முயலும் தொழப்படூஉம் (nālaṭiyār 176);
பிறையது வளரத் தானும் வளர்ந்து உடன் பெருகிப் பின்னாள், குறைபடுமதியம் தேயக் குறுமுயல் தேய்வதேபோல்- (Civaka cintāmaṇi 254);
அரிவை, தெரிவை
are names of ladies denoting their ages.]]
கயல் வளாவிய கழனிக் கருநிறக்குவளை கண் மலரும் வயல் வளாவிய புகலூர் வர்த்த மானீச்சுரத்தார்
is in varttamāṉiccaram in pukalūr surrounded by fields in which the blue-nelumbo flowers blossom like the eyes and the paddy-fields full of carp fish.

{2:92}__3+
{$} தொண்டர் தண் கயம் மூழ்கி
the devotees bathing in the cool tanks plunging into them.
துணையலும் சாந்தமும் புகையும் கொண்டு அடிகொண்டு பரவி
carrying garlands, sandal-paste, incense for burning, and praising the feet of god fixing them in their minds.
குறிப்பு அறிமுருகன் செய் கோலம் கண்டு கண்டு கண்குளிர
the eyes being satisfied with seeing the decoration by Murukaṉ (a nāyaṉār, comtemporary of Campantar) who knows everything by his penetrative intellect.
களிபரந்து ஒளி மல்கு கள் ஆர் வண்டு பண் செய்யும் புகலூர் வர்த்த மானீச்சுரத்தார்
is in varttamāṉiccaram in pukalūr where the bees having drunk the honey are lustrous, get intoxicated, and hum like melody-types.

{2:92}__4+
{$} பண்ண வண்ணத்தர் ஆகி
being the forms of melody types.
பாடலொடு ஆடல் அறாத விண்ணத்தர் ஆயவிரி புகலூரர்
Civaṉ in extensive pukalūr where songs and dances never stop and who has the form of the sky.
ஓர் பாகம் பெண்ண வண்ணத்தர் ஆகும் பெற்றியொடு
with the nature of having, as one half, a lady.
ஆண் இணை பிணைந்த வண்ணவண்ணத்து எம் பெருமான்
our Lord who has unadorned natural beauty and arifical body who is united with a lady, being himself a male.
வர்த்தமானீச்சரத்தார்
is in varttamāniccaram.

{2:92}__5+
{$} ஈசன்
Civaṉ
ஏறு அமர் கடவுள்
the god who is seated on a bull
இன்னமுது
one who is as sweet as the nectar.
எந்தை
our father
எம்பெருமான்
our Lord
பூசும் மாசு இல் வெண்ணீற்றர்
god who smears himself with spotless white holy ash.
பொலிவுடைப் பூம்புகலூரில்
in beautiful pukalūr of gret splendour.
மூசுவண்டு அறை கொன்றை முருகன் 1. முப்போதும் செய் முடி மேல் வாசமா மலர் உடையார்
Civaṉ has on his head koṉṟai on which swarming bees who loudly, and other fragrant flowers which muruka nāyaṉar adorns in the morning, noon, and evening. (muruka nāyaṉār was a contemporary of campantar, a native of pukalūr; he supplied flowers and garland to Civaṉ thrice in a day; therefore he is eulogized by campantar.)
வர்த்தமானீச்சரத்தார்
is in varttamāṉiccaram
[[Variant reading: 1. முப்பொழுது]]

{2:92}__6+
{$} தளிர் இலங்கொடி வளர
as the tender creeper grows with tender leaves.
தண் கயம் இரியவண்டு ஏறி
the bees climbing upon those creeper to bend low in the cool tanks.
கிளர் இளம்(ம்) உழை நுழையக் 1. கிழிதரு பொழிற் புகலூரில்
in pukalūr where in the gardens the mast-wood trees blossom flowers like gold tied in a piece of cloth when the spirited young deer creeps through a narrow passage
[[the flowers of mastwood trees are compared to gold tied in a piece of cloth;
பாண் நிகர் வண்டினம் பாடப் பைம் பொன் தரு வெண்கிழிதம், சேணிகர் காவின் வழங்கும் புன்னைத்துறைச் சேர்ப்பர்- (Kōvaiyār, 183)]]
உளர் இளஞ் 2. சுனை மலரும் ஒளி தரு 3. சடைமுடி அதன் மேல் வளர் இளம் பிறை உடையார் வர்த்தமானீச்சரத்தார்
Civaṉ who has on his brilliant caṭai coiled into a crown a growing crescent and flowers just blossomed in the tanks which are moved by the wind.
[[Variant reading: 1. தருபூம் புகலூரில் 2. இளஞ்சினை மலரும் 3. சடைமுடி தன்மேல்]]

{2:92}__7+
{$} தென் சொல் விஞ்சு அமர் வடசொல் திசை மொழி எழில் நரம்பு எடுத்து
singing in any one of the languages such as tamiḻ, excellent vaṭacol and words borrowed from the twelve countries bordering the country where chaste tamiḻ is spoken, playing songs on the strings of yāḻ and viṇai.
துஞ்சு நெஞ்சு இருள் நீங்கத் தொழுது எழு தொல் புகலூரில்
in ancient pukalūr where devotees wake up from sleep worshipping with joined hands in order to dispel the ignorance in the mind which has been staying there for a long time.
அஞ்சனம் பிதிர்ந்தனைய அல்கடல் கடைய அன்று எழுந்த வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சரத்தார்
Civaṉ who adorned his neck with the cruel poison which arose in the moving ocean which is like the collyrium scattered everywhere when it was churned, is in varttamāṉiccaram.

{2:92}__8+
{$} சாம வேதம் ஓர் கீதம் ஓதி அத்தசமுகன் பரவும் நாமதேயம் (அது) உடையார் நன்கு உணர்ந்து அடிகள் என்று ஏத்த
that ten-faced īravaṇaṉ realising well that Civaṉ was the god and praised him by chanting the cāmavētam which is musical, and has a name which is praised by him.
காமதேவனை வேவக் கனல் எரி கொளுவிய கண்ணார்
has a frontal eye by which he set scorching fire to burn Kāmatēvaṉ (cupid).
வாம தேவர்
has the appellation of vāmatēvar.
தண்புகலூர் வர்த்தமானீச்சரத்தார்
is in varttamāṉiccaram in cool pukalūr.

{2:92}__9+
{$} சீர் அணங்கு உறநின்ற செருவுறு திசை முகனோடு நாரணன் கருத்து அழிய நகை செய்த சடை முடி நம்பர்
Civaṉ who has a caṭai coiled into a crown and smiled to destroy the self-esteem of nāraṇaṉ along with Piramaṉ who has four faces each one for each quarter and who had divinity in him and quarrelled with nāraṇaṉ that he was superior to him;
ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சுவித்து அருளுதல் பொருட்டால்
with the purpose of granting his grace and causing fright to Umai who had rare beauty.
வாரணத்து உரி போர்த்தார் வர்த்தமானீச் சரத்தார்
Civaṉ who coverd himself with the skin of an elephant is (pukalūr) in varttamāṉiccaram.

{2:92}__10+
{$} கையில் உண்டு உழல்வாரும்
camaṇar who wander eating their food using their hands as plates.
கமழ் துவர் ஆடையினால் தம் மெய்யைப் போர்த்து உழல் வாரும்
and buddhists who wander covering their bodies with a robe soaked in myrthe die whose odour spreads everywhere.
உரைப்பன மெய் என விரும்பேல்
(People of this world!) Do not wish to listen to what they talk as truth.
செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்
in pukalūr where in the fields scabbard fish and red carp fish jump together.
மை கொள் கண்டத்து எம் பெருமான் வர்த்தமானீச்சரத்தார்
our Lord who has a black neck is in varttāmāṉiccaram.

{2:92}__11+
{$} பொங்கு தண் புனல் சூழ்ந்து போது அணி பொழில் புகலூரில்
in pukalur which has gardens made beautiful by flowers and surrounded by foaming and raging cool water.
மங்குல் மாமதி தவழும் வர்த்தமானீச்சரத்தாரை
on Civaṉ in varttamāṉīccaram on which the big moon which dispels darkness seems to crawl.
[[மங்குல் darkness;
மங்குல் ஞாயிற்று (paripāṭal, 13-1); மங்குல் may also mean cloud]]
தங்கு சீர் திகழ் ஞானசம்பந்தன் தண்தமிழ் பத்தும் எங்கும் ஏத்த வல்லார்கள்
those who are capable of praising Civaṉ everywhere with the ten pleasant verses composed by ñāṉacampantaṉ of great frame which stays with hum.
எய்துவர் இமையவர் உலகு
will reach the heaven of the immortals who do not wink.