TC eccaviyal (எச்சவியல்)

[last modification on 2021/06/03 at 11:32]

நால்வகைச் சொற்கள்

TC397c

(1)

TC398c

(இ-ள்.) அந்நான்கனுள், இயற்சொல்லென்று சொல்லப்பட்ட சொற் றாம், செந்தமிழ்நிலத்து வழக்காதற்குப் பொருந்திக் கொடுந்தமிழ் நிலத்துந் தம்பொருள் வழுவாம லுணர்த்துஞ் சொல்லாம் எ-று.

அவையாவன: நிலம், நீர், தீ, வளி, சோறு, கூழ், பால், தயிர், மக்கள், மா, தெங்கு, கமுகு என்னுந் தொடக்கத்தன.

செந்தமிழ் நிலமாவன, வையையாற்றின் வடக்கும் மருதயாற் றின்றெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாம்.

திரிபின்றி இயல்பாகிய சொல்லாகலின் இயற்சொல்லாயிற்று. கொடுந்தமிழ் நிலத்திற்கும் பொதுவாகலின் இயற்சொல்லாயிற்றெனினு மமையும். நீரென்பது ஆரியச்சிதைவாயினும் அப்பொருட்கு அதுவே சொல்லாய்ச் செந்தமிழ் நிலத்தும் கொடுந்தமிழ் நிலத்தும் வழங்கப்படுத லான் இயற்சொல்லாயிற்று. பிறவு மிவ்வாறு வருவன இயற்சொல்லாகக் கொள்க.

தாமென்பது கட்டுரைச் சுவைபட நின்றது.

(2)

TC399c

[auxiliary link: Tivākaram extracts]]

(இ-ள்.) ஒருபொருள் குறித்து வரும் பல சொல்லும் பலபொருள் குறித்து வரும் ஒருசொல்லுமென இருவகைப்படுந் திரிசொல் எ-று.

வெற்பு, விலங்கல், விண்டு என்பன ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க் கிளவி. எகின மென்பது அன்னமும் கவரிமாவும் புளிமரமும் நாயு முணர்த்தலானும், உந்தி யென்பது யாழ்ப்பத்தலுறுப்பும் கொப்பூழும் தேர்த்தட்டும் கான்யாறு முணர்த்தலானும், இவை வேறு பொருள் குறித்த ஒரு சொல்.

திரிசொல்லது திரிவாவது உறுப்புத் திரிதலும் முழுவதுந் திரிதலு மென இருவகைத்து. கிள்ளை, மஞ்ஞை என்பன உறுப்புத் திரிந்தன. விலங்கல், விண்டு என்பன முழுவதுந் திரிந்தன. முழுவதுந் திரிந்தனவற்றைக் கட்டிய வழக்கென்பாரு முளர். அவை கட்டிய சொல்லாமாயிற் செய்யுள் வழக்காமாறில்லை; அதனான் அவையுந் திரிவெனல் வேண்டுமென்பது.

அஃதேல், பலசொல் ஒருபொருட் குரியவாதலும் ஒருசொல் பல பொருட்குரித்தாதலும், உரிச்சொன் முதலாகிய இயற்சொற்குமுண்மை யான் அது திரிசொற் கிலக்கணமாமா றென்னையெனின்:- அது திரிசொற் கிலக்கண முணர்த்தியவாறன்று; அதனது பாகுபாடுணர்த்தியவாறு. திரிபுடைமையே திரிசொற்கிலக்கணமாதல் ‘சொல்லின் முடிவினப் பொருண் முடித்தல்’ என்பதனாற் பெற வைத்தார். கிள்ளை மஞ்ஞை யென்பன ஒருசொல் ஒரு பொருட்குரித்தாகிய திரிசொல்லாதலின் இருபாற் றென்றல் நிரம்பாதெனின், அற்றன்று. ஆசிரியர் இருபாற்றென்ப திரிசொற் கிளவி எனத் தொகை கொடுத்தாராகலின், கிள்ளை மஞ்ஞை யென்பன வற்றோடு ஒரு பொருட் கிளவியாய் வரும் திரிசொலுளவாக லொன்றோ, இவை பிறபொருள் படுதலொன்றோ, இரண்டனு ளொன்று திட்ப முடைத்தாதல் வேண்டும். என்னை? ஆசிரியர் பிற கூறாமையினென்பது.

திரித்துக்கொண்டது இயற்கைச்சொல்லான் இன்பம் பெறச் செய் யுளீட்டலாகாமையானன்றே? அதனாற் றிரி சொல்லெனவே, செய்யுட் குரித்தாதலும் பெறப்படும்.

(3)

TC400c

(இ-ள்.) செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு நிலத்துந் தாங் குறித்த பொருள் விளக்குந் திசைச்சொல் என்றவாறு. என்றது, அவ்வந் நிலத்துத் தாங் குறித்த பொருள் விளக்குவதல்லது அவ்வியற் சொற்போல எந்நிலத்துந் தம்பொருள் விளக்கா வென்றவாறாம்.

பன்னிருநிலமாவன பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவடதலைநாடு எனச் செந்தமிழ்நாட்டுத் தென்கீழ்பான் முதலாக வடகீழ்பாலிறுதியாக எண்ணிக்கொள்க.

தென்பாண்டிநாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்றமென் றும், தம்மாமி யென்பதனைத் தந்துவை யென்றும் வழங்குப. பிறவுமன்ன.

‘தங்குறிப்பின’ வென்று தனிமொழி தம்பொருளுணர்த்து மாற் றுக்குச் சொல்லினார். இருமொழி தொடருமிடத்துத் தள்ளை வந்தாள் என வேண்டியவாறு வரப்பெறு மென்றாரல்ல ரென்பது.

(4)

TC401c

(இ-ள்.) வடசொற் கிளவியாவது வடசொற்கே உரியவெனப் படுஞ் சிறப்பெழுத்தினீங்கி இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தானியன்ற சொல்லாம் எ-று.

எனவே, பொதுவெழுத்தா னியன்ற வடசொல்லும் செய்யுட் செய்தற்குச் சொல்லா மென்றவாறாயிற்று.

அவை வாரி, மேரு, குங்குமம், மணி என்னுந்தொடக்கத்தன.

வடசொல்லாவது வடசொல்லோடொக்குந் தமிழ்ச்சொல்லென்றா ரால் உரையாசிரியரெனின், அற்றன்று. ஒக்குமென்று சொல்லப்படுவன ஒருபுடையா னொப்புமையும் வேற்றுமையுமுடைமையான் இரண்டாகல் வேண்டும். இவை எழுத்தானும் பொருளானும் வேறுபாடின்மையாகிய ஒரு சொல்லிலக்கண முடைமையான் இரண்டுசொல்லெனப்படா; அதனான் ஒத்தல் யாண்டையது, ஒரு சொல்லேயாமென்பது. ஒரு சொல் லாயினும் ஆரியமுந் தமிழுமாகிய இடவேற்றுமையான் வேறாயின வெனின், அவ்வாறாயின் வழக்குஞ் செய்யுளுமாகிய இடவேற்றுமையாற் சோறு கூழென்னுந் தொடக்கத்தனவும் இரண்டு சொல்லாவான் செல்லும்; அதனான் இடவேற்றுமையுடையவேனும் ஒரு சொல்லிலக்கணமுடை மையான் ஒருசொல்லேயாம். ஒரு சொல்லாயவழித் தமிழ்ச்சொல் வடபாடைக்கட் செல்லாமையானும், வடசொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும், இவை வட சொல்லாய் ஈண்டு வழங்கப்பட்டன வெனல் வேண்டும். அதனான் அது போலியுரை யென்க. அல்லதூஉம், அவை தமிழ்ச்சொல்லாயின் ‘வடவெழுத்தொரீஇ’ யென்றல் பொருந் தாமை யானும், வடசொல்லாதலறிக

(5)

TC402c

(இ-ள்.) பொதுவெழுத்தானியன்றனவே யன்றி, வடவெழுத்தா னியன்ற வடசொற் சிதைந்து வரினும், பொருத்த முடையன, செய்யுளிடத்து வரையார் எ-று.

(எ-டு.) ‘அரமிய வியலகத் தியம்பும்’ (அகம். 424) எனவும், ‘தசநான் கெய்திய பணைமரு ணோன்றாள்’ (நெடுநல். 115) எனவும் வரும்.

சிதைந்தன வரினுமெனப் பொதுப்படக் கூறியவதனான், ஆணை, வட்டம், நட்டம், கண்ணன் எனப் பாகதமாய்ச் சிதைந்து வருவனவுங் கொள்க.

இச் சூத்திரத்தானும் அவை தமிழ்ச்சொ லன்மையறிக

(6)

TC403c

(இ-ள்.) இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொல்லென்னு நான்கு சொல்லையுஞ் செய்யுளாகத் தொடுக்குங்கால், மெலியதனை வலிக்கவேண்டும்வழி வலித்தலும், வலியதனை மெலிக்க வேண்டும்வழி மெலித்தலும், குறைவதனை விரிக்கவேண்டும்வழி விரித்தலும், மிகுவ தனைத் தொகுக்கவேண்டும் வழித்தொகுத்தலும், குறியதனை நீட்ட வேண்டும் வழி நீட்டலும், நெடியதனைக் குறுக்க வேண்டும்வழிக் குறுக்கலுமாகிய அறுவகை விகாரமும், செய்யுளின்பம் பெறச் செய்வான் நாட்டுதலை வலியாகவுடைய எ-று.

(எ-டு.) ‘குறுக்கை யிரும்புலி’ (ஐங். 266) ‘முத்தை வரூஉங் காலந் தோன்றின்’ (எழுத். 194) என்பன வலிக்கும்வழி வலித்தல். ‘சுடுமண்பாவை’ ‘குன்றிய லுகரத் திறுதி’ (சொல். 9) என்பன மெலிக்கும்வழி மெலித்தல். ‘தண்ணந் துறைவன்’ (குறுந். 296) என்பது விரிக்கும்வழி விரித்தல். ‘மழவ ரோட்டிய’ (அகம். 1) என்பது தொகுக்கும்வழித் தொகுத்தல். ‘குன்றி கோபங் கொடிவிடுபவள மொண்செங்காந்த ளொக்கு நின்னிறம்’ என்புழிச் செவ்வெண்ணின் றொகைதொக்கு நிற்றலின் இதுவுமது. ‘வீடுமின்’ என்பது நீட்டும்வழி நீட்டல். ‘பாசிலை’ (புறம். 54) யென்பது காட்டுவாருமுளர். உண்டார்ந்தென்பது உண்டருந்தெனக் குறுகி நிற்றலிற் குறுக்கும்வழிக் குறுக்கல். ‘அழுந்துபடு விழுப்புண்’ (நற். 97) என்பதுமது. பிறவு மன்ன.

‘நாட்டல் வலிய’ வென்றது, இவ்வறுவகை விகாரமும் இன்னுழியா மென்று வரையறுக்கப்படா; செய்யுள் செய்யுஞ் சான்றோர் அணிபெற நாட்டலைத் தமக்கு வலியாகவுடைய வென்றவாறு. நாட்டல் - நிலைபெறச் செய்தல். (7)

நால்வகைப் பொருள்கோள்

TC404c

இனிச் செய்யுளிடத்து விகாரவகையான் மொழிகள் தம்முட் புணருமாறு கூறுகின்றார்.

(இ-ள்.) நிரனிறையும், சுண்ணமும், அடிமறியும், மொழி மாற்று மென நான்கென்று சொல்லுப, அந்நான்கு சொல்லுஞ் செய்யுளிடத்துத் தம்முட்புணரு முறையை எ-று.

நான்கு சொல்லு மென்பதூஉஞ் செய்யுளிடத்தென்பதூஉம் அதிகாரத்தாற் பெற்றாம்.

நிரனிறையுஞ் சுண்ணமும் மொழிமாற்றாத லொக்குமாயினும், நிரனிற்றலும் அளவடியெண்சீரைச் சுண்ணமாகத் துணித்தலுமாகிய வேறுபாடுடைமையான், அவற்றைப் பிரித்து அவ்வேறுபாட்டாற் பெயர் கொடுத்து, வேறிலக்கணமில்லாத மொழிமாற்றை மொழிமாற்றென்றார்.

இச் சூத்திரத்தான் மொழிபுணரியல் நான்கென வரையறுத்தவாறு. (8)

TC405c

(இ-ள்.) அந்நான்கனுள், நிரனிறையாவது வினையானும் பெயரானும் ஆராயத் தோன்றிச் சொல் வேறு நிற்பப் பொருள்வேறு நிற்றலாம் எ-று.

தொடர்மொழிப்பொருள் முடிக்குஞ் சொற்கண்ணதாகலான் முடிக்குஞ் சொல்லைப் பொருளென்றார்.

வினையினும் பெயரினு மென்றதனான், வினைச்சொல்லான் வருவதூஉம், பெயர்ச்சொல்லான் வருவதூஉம், அவ்விரு சொல்லான் வருவதூஉமென நிரனிறை மூன்றாம்.

(எ-டு.) ‘மாசு போகவுங் காய்பசி நீங்கவுங் - கடிபுனன் மூழ்கி யடிசில்கை தொட்டு’ என முடிவனவும் முடிப்பனவுமாகிய வினைச்சொல் வேறு வேறு நிற்றலின், வினை நிரனிறை யாயிற்று, அவை மாசுபோகப் புனன் மூழ்கி, பசி நீங்க அடிசில் கைதொட்டு என வியையும், ‘கொடி குவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி’ என முடிவனவும் முடிப்பனவு மாகிய பெயர்ச்சொல் வேறு வேறு நிற்றலின், பெயர் நிரனிறையாயிற்று. அவை நுசுப்புக் கொடி, உண்கண்குவளை, மேனிகொட்டை என வியையும்.

என முடிப்பனவாகிய வினையும் முடிவனவாகிய பெயரும் வேறு வேறு நிற்றலின், பொதுநிரனிறையாயிற்று. அவை கடல் உடலும், இருள் உடைந் தோடும், ஆம்பல் ஊழ்மலரும், பாம்பு பார்க்கும் என வியையும்.

‘நினையத் தோன்றி’ யென்றதனான், சொல்லும் பொருளும் வேறு வேறு நிற்குங்கால் நிரல்பட நில்லாது,

என மயங்கி வருதலுங் கொள்க

TC406c

(இ-ள்.) சுண்ணமாவது இயல்பாக அமைந்த ஈரடிக்கணுளவாகிய எண் சீரைத் துணித்து இயையும்வழி அறிந்து கூட்டி இயற்றப்படுவதாம் எ-று.

அளவடியல்லாதன விகாரவடியாகலிற், பட்டாங்கமைந்தில வாதலிற் பட்டாங்கமைந்த வீரடியெனவே, அளவடியாதல் பெறப்படும். ஈரடியெண்சீர் விகாரவடியானும் பெறப்படுதலின், அவற்றை நீக்குதற்குப் ‘பட்டாங் கமைந்த வீரடி’ யென்றார்; எனவே, சுண்ணம் அளவடி யிரண்டனு ளல்லது பிறாண்டு வாராதென்பது.

(எ-டு.)

என்புழி, ஆழ, மிதப்ப, நீத்து, நிலையென்பனவும், சுரை, அம்மி, யானைக்கு, முயற் கென்பனவும், நின்றுழி நிற்ப இயையாமையின், சுரை மிதப்ப, அம்மி யாழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து எனத் துணித்துக்கூட்ட, இயைந்த வாறு கண்டுகொள்க.

சுண்ணம்போலச் சிதராய்ப் பரந்து கிடத்தலிற் சுண்ணமென்றார். (10)

TC407c

(இ-ள்.) அடிமறிச்செய்யுளாவது, சீர் நின்றாங்கு நிற்ப, அடிகள் தத்தம் நிலையிற் றிரிந்து ஒன்ற னிலைக்களத்து ஒன்று சென்று நிற்கும் எ-று.

எனவே, எல்லாவடியும் யாண்டுஞ் செல்லுமென்பதாம்.

(எ-டு.)

என வரும். இதனுட் சீர் நின்றாங்கு நிற்பப் பொருள் சிதையாமல் எல்லா வடியுந் தடுமாறியவாறு கண்டுகொள்க.

பெரும்பான்மையும் நாலடிச்செய்யுட்க ணல்லது இப்பொருள் கோள் வாராதென்க.

‘நிரனிறைதானே’ ‘சுண்ணந்தானே’ ‘மொழிமாற்றியற்கை’ என்பன போல, ஈண்டும் ‘அடிமறிச்செய்தி’யென்பதனைக் குறளடியாக்கி, ‘அடி நிலை திரிந்து சீர்நிலை திரியாது, தடுமா றும்மே பொருடெரி மருங்கின்’ என்று சூத்திரமாக அறுப்பாரு முளர். (11)

TC408c

(இ-ள்.) பொருளாராயுங்கால், அடிமறிச் செய்யுட்கண் ஈற்றடியது இறுதிச்சீர் எருத்தடியிற் சென்று திரிதலும் வரையார் எ-று.

சீர்நிலை திரியாது தடுமாறுமென்றாராகலின் சீர்நிலை திரிதலும் ஒருவழிக் கண்டு எய்தியதிகந்துபடாமற் காத்தவாறு.

இலக்கியம் வந்தவழிக் கண்டுகொள்க.

எருத்துவயி னென்பதற்கு ஈற்றயற்சீர்வயி னென்று பொருளுரைத்து,

என்புழி அஞ்சுவல் யான் என இறுதிச்சீர் ஈற்றயற்சீர்வயிற் சென்று திரிந்ததென்று உதாரணங் காட்டினாரால் உரையாசிரியரெனின், யானஞ் சுவலென நின்றாங்கு நிற்பவும் பொருள் செல்லுமாகலின் இவ்வாறு திரிதல் பொருந்தாமையின், அவர்க்கது கருத்தன்றென்க.

எல்லாவடியும் யாண்டுஞ் செல்லுமாயினும், உரைப்போர் குறிப்பான் எருத்தென்றும் ஈற்றடியென்றுங் கூறினார்.

என உரைப்போர் குறிப்பான் முதலு மிடையு மீறுங்கோடல் பிறருங் கூறினாரென்பது. (12)

TC409c

(இ-ள்.) மொழிமாற்றினதியல்பு, பொருளெதி ரியையுமாறு சொன் னிலையை மாற்றி முன்னும் பின்னும் கொள்ளும் வழிக் கொளுவுதலாம் எ-று.

(எ-டு.)

என இதனுள், பாரி பறம்பின்மேற் றண்ணுமைதானாணுந் தோளாள் எனவும், நிறன் விறன்முள்ளூர் வேங்கைவீ எனவும், உள்ளூருள்ளதாகிய அலர் ஆரிய மன்னர் பறையி னெழுந்தியம்பும் எனவும், முன்னும் பின்னுங் கொள்வழி யறிந்து கொளுவப் பொருளெதிரியைந்தவாறு கண்டுகொள்க. மொழிமாற்று நின்று ஒன்றற்கொன்று செவ்வாகாமை கேட்டார் கூட்டி யுணரு மாற்றாற் கடாவல்வேண்டும். அல்லாக்கால், அவாய் நிலையுந் தகுதியு முடையவேனும் அண்மையாகிய காரணமின்மையாற் சொற்கள் தம்மு ளியையாவா மென்க. (13)

TC412c

TC413c

TC414c

TC415c

TC416c

TC417c

TC418c

TC

TC

TC

TC