TC eccaviyal (எச்சவியல்)
[last modification on 2021/04/08 at 11:32]
TC397c
- இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று
- அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.
TC398c
- அவற்றுள்
- இயற்சொற் றாமே
- செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
- தம்பொருள் வழாமை யிசைக்குஞ் சொல்லே.
TC399c
- ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும்
- வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும்
- இருபாற் றென்ப திரிசொற் கிளவி.
TC400c
- செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
- தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.
TC401c
- வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
- எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.
TC402c
- சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்.
TC403c
- அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலை
- வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும்
- விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும்வழித் தொகுத்தலும்
- நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும்
- நாட்டல் வலிய என்மனார் புலவர்.
TC404c
- நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று
- அவைநான் கென்ப மொழிபுணர் இயல்பே.
TC405c
- அவற்றுள்
- நிரல்நிறை தானே
- வினையினும் பெயரினும் நினையத் தோன்றிச்
- சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல்.
TC