[At moment "[2022-09-17 (16:43)]" Script "file:/C:/JLC/XML_tests/Two_Level_concordance/html_print_book_and_NDX.xslt" was applied to Base file "file:/C:/JLC/XML_tests/Two_Level_concordance/M-tagged_file.xml"]
[At moment "[2022-09-17 (16:43)]" Script "file:/C:/JLC/XML_tests/Two_Level_concordance/_towards_concordance_by_M-tagging_of_TEXT.xslt" was applied to Base file "file:/C:/JLC/XML_tests/Two_Level_concordance/akattiyar_tt_FOUR_Patikam_Ver_1d.xml"]
VERSE 2-85_(1) (4 lines)
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிக நல்ல வீணை தடவி, [2-85_(1)__1]
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்தஅதனால்--- [2-85_(1)__2]
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி, சனி, பாம்பு_இரண்டும், உடனே [2-85_(1)__3]
ஆசு அறும்; நல்ல_நல்ல; அவை நல்ல_நல்ல, அடியார்_அவர்க்கு மிகவே. [2-85_(1)__4]
VERSE 2-85_(2) (4 lines)
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க, எருது ஏறி, ஏழை_உடனே, [2-85_(2)__1]
பொன் பொதி மத்த_மாலை புனல் சூடி வந்து, என் உளமே புகுந்தஅதனால்--- [2-85_(2)__2]
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும், உடன்_ஆய நாள்கள்_அவை_தாம், [2-85_(2)__3]
அன்பொடு நல்ல_நல்ல; அவை நல்ல_நல்ல, அடியார்_அவர்க்கு மிகவே. [2-85_(2)__4]
VERSE 2-85_(3) (4 lines)
உரு வளர் பவள_மேனி ஒளி நீறு அணிந்து, உமையோடும், வெள்ளை விடை மேல், [2-85_(3)__1]
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்தஅதனால்--- [2-85_(3)__2]
திருமகள், கலை_அது ஊர்தி, செயமாது, பூமி, திசை தெய்வம் ஆன பலவும், [2-85_(3)__3]
அரு நெதி நல்ல_நல்ல; அவை நல்ல_நல்ல, அடியார்_அவர்க்கு மிகவே. [2-85_(3)__4]
VERSE 2-85_(4) (4 lines)
மதி நுதல் மங்கையோடு, வடபால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன், [2-85_(4)__1]
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்தஅதனால்--- [2-85_(4)__2]
கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர், கொடுநோய்கள் ஆன பலவும், [2-85_(4)__3]
அதி_குணம் நல்ல_நல்ல; அவை நல்ல_நல்ல, அடியார்_அவர்க்கு மிகவே. [2-85_(4)__4]
VERSE 2-85_(5) (4 lines)
நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள்தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன், [2-85_(5)__1]
துஞ்சு இருள்---வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து---என் உளமே புகுந்தஅதனால்--- [2-85_(5)__2]
வெஞ்சின அவுணரோடும், உரும்-இடியும், மின்னும், மிகைஆன பூதம்அவையும், [2-85_(5)__3]
அஞ்சிடும்; நல்ல_நல்ல; அவை நல்ல_நல்ல, அடியார்_அவர்க்கு மிகவே. [2-85_(5)__4]
VERSE 2-85_(6) (4 lines)
வாள்_வரி அதள்_அது ஆடை வரி கோவணத்தர் மடவாள்_தனோடும் உடன்_ஆய், [2-85_(6)__1]
நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என் உளமே புகுந்தஅதனால்--- [2-85_(6)__2]
கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல், கொடு நாகமோடு, கரடி, [2-85_(6)__3]
ஆள் அரி, நல்ல_நல்ல; அவை நல்ல_நல்ல, அடியார்_அவர்க்கு மிகவே. [2-85_(6)__4]
VERSE 2-85_(7) (4 lines)
செப்பு இள முலை நல் மங்கை ஒரு_பாகம்_ஆக விடை ஏறு செல்வன், அடைவு ஆர் [2-85_(7)__1]
ஒப்பு இள_மதியும் அப்பும் முடி_மேல் அணிந்து, என் உளமே புகுந்தஅதனால்--- [2-85_(7)__2]
வெப்பொடு, குளிரும், வாதம், மிகை_ஆன பித்தும், வினை_ஆன, வந்து நலியா; [2-85_(7)__3]
அப்படி நல்ல_நல்ல; அவை நல்ல_நல்ல, அடியார்_அவர்க்கு மிகவே. [2-85_(7)__4]
VERSE 2-85_(8) (4 lines)
வேள் பட விழி_செய்து, அன்று, விடை மேல் இருந்து, மடவாள்_தனோடும் உடன்_ஆய், [2-85_(8)__1]
வாள்_மதி வன்னி கொன்றை_மலர் சூடி வந்து, என் உளமே புகுந்தஅதனால்--- [2-85_(8)__2]
ஏழ்_கடல் சூழ் இலங்கை அரையன்_தனோடும் இடர் ஆன வந்து நலியா; [2-85_(8)__3]
ஆழ் கடல் நல்ல_நல்ல; அவை நல்ல_நல்ல, அடியார்_அவர்க்கு மிகவே. [2-85_(8)__4]
VERSE 2-85_(9) (4 lines)
பல_பல வேடம் ஆகும் பரன், நாரி_பாகன், பசு ஏறும் எங்கள் பரமன், [2-85_(9)__1]
சலமகளோடு எருக்கு முடி_மேல் அணிந்து, என் உளமே புகுந்தஅதனால்--- [2-85_(9)__2]
மலர்_மிசையோனும் மாலும் மறையோடு தேவர் வரு காலம்_ஆன_பலவும், [2-85_(9)__3]
அலை_கடல், மேரு, நல்ல; அவை நல்ல_நல்ல, அடியார்_அவர்க்கு மிகவே. [2-85_(9)__4]
VERSE 2-85_(10) (4 lines)
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு குணம்ஆய வேட விகிர்தன், [2-85_(10)__1]
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்தஅதனால்--- [2-85_(10)__2]
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திரு_நீறு செம்மை திடமே; [2-85_(10)__3]
அத்தகு நல்ல_நல்ல; அவை நல்ல_நல்ல, அடியார்_அவர்க்கு மிகவே. [2-85_(10)__4]
VERSE 2-85_(11) (4 lines)
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி, வளர் செம்_பொன் எங்கும் நிகழ, [2-85_(11)__1]
நான்முகன் ஆதி_ஆய பிரமாபுரத்து மறை_ஞான ஞானமுனிவன், [2-85_(11)__2]
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை_செய் [2-85_(11)__3]
ஆன சொல்_மாலை ஓதும் அடியார்கள், வானில் அரசு ஆள்வர்; ஆணை நமதே. [2-85_(11)__4]
VERSE 4-80_(1) (4 lines)
பாளை உடைக் கமுகு ஓங்கி, பலமாடம் நெருங்கி, எங்கும் [4-80_(1)__1]
வாளை உடைப் புனல் வந்து எறி, வாழ் வயல்-தில்லைதன்னுள், [4-80_(1)__2]
ஆள உடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் [4-80_(1)__3]
பீளை உடைக் கண்களால் பின்னைப் பேய்த்தொண்டர் காண்பது என்னே? [4-80_(1)__4]
VERSE 4-80_(2) (4 lines)
பொரு விடை ஒன்று உடைப் புண்ணியமூர்த்தி, புலிஅதளன், [4-80_(2)__1]
உரு உடை அம் மலைமங்கை மணாளன், உலகுக்கு எல்லாம் [4-80_(2)__2]
திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன், [4-80_(2)__3]
திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே? [4-80_(2)__4]
VERSE 4-80_(3) (4 lines)
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் [4-80_(3)__1]
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான், [4-80_(3)__2]
பொடிக் கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லைச் சிற்றம்பலவன், [4-80_(3)__3]
உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே? [4-80_(3)__4]
VERSE 4-80_(4) (4 lines)
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய [4-80_(4)__1]
அச்சம் ஒழிந்தேன்; அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற [4-80_(4)__2]
பிச்சன், பிறப்பு_இலி, பேர் நந்தி, உந்தியின்மேல் அசைத்த [4-80_(4)__3]
கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே? [4-80_(4)__4]
VERSE 4-80_(5) (4 lines)
செய்ஞ் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன், [4-80_(5)__1]
மைஞ் ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க [4-80_(5)__2]
நெய்ஞ் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீலமணிமிடற்றான், [4-80_(5)__3]
கைஞ் ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே? [4-80_(5)__4]
VERSE 4-80_(6) (4 lines)
ஊனத்தை நீக்கி உலகு அறிய(வ்) என்னை ஆட்கொண்டவன், [4-80_(6)__1]
தேன் ஒத்து எனக்கு இனியான், தில்லைச் சிற்றம்பலவன், எம் கோன், [4-80_(6)__2]
வானத்தவர் உய்ய வன்நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் [4-80_(6)__3]
ஏனத்து_எயிறு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே? [4-80_(6)__4]
VERSE 4-80_(7) (4 lines)
தெரித்த கணையால்-திரி புரம்மூன்றும் செந்தீயில் மூழ்க [4-80_(7)__1]
எரித்த இறைவன், இமையவர்கோமான், இணைஅடிகள் [4-80_(7)__2]
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன், [4-80_(7)__3]
சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே? [4-80_(7)__4]
VERSE 4-80_(8) (4 lines)
சுற்றும் அமரர், சுரபதி, நின் திருப்பாதம்அல்லால் [4-80_(8)__1]
பற்று ஒன்று இலோம் என்று அழைப்பப் பரவையுள் நஞ்சை உண்டான், [4-80_(8)__2]
செற்று அங்கு அநங்கனைத் தீவிழித்தான், தில்லை அம்பலவன், [4-80_(8)__3]
நெற்றியில் கண் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே? [4-80_(8)__4]
VERSE 4-80_(9) (4 lines)
சித்தத்து எழுந்த செழுங் கமலத்து அன்ன சேவடிகள் [4-80_(9)__1]
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன், [4-80_(9)__2]
முத்தும் வயிரமும் மாணிக்கம்தன்னுள் விளங்கிய தூ [4-80_(9)__3]
மத்தமலர் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே? [4-80_(9)__4]
VERSE 4-80_(10) (4 lines)
தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை [4-80_(10)__1]
வரைக்கைகளால் எடுத்து ஆர்ப்ப, மலைமகள்கோன் சிரித்து, [4-80_(10)__2]
அரக்கன் மணி முடிபத்தும்---அணி தில்லை அம்பலவன்--- [4-80_(10)__3]
நெருக்கி மிதித்த விரல் கண்ட கண்கொண்டு காண்பது என்னே? [4-80_(10)__4]
VERSE 7-53_(1) (4 lines)
மரு ஆர் கொன்றை மதி சூடி, மாணிக்கத்தின்_மலை போல [7-53_(1)__1]
வருவார், விடை_மேல் மாதொடு மகிழ்ந்து பூத_ப்_படை சூழ; [7-53_(1)__2]
திருமால், பிரமன், இந்திரற்கும், தேவர், நாகர், தானவர்க்கும், [7-53_(1)__3]
பெருமான்---கடவூர்மயானத்துப் பெரிய_பெருமான்_அடிகளே. [7-53_(1)__4]
VERSE 7-53_(2) (4 lines)
விண்ணோர்_தலைவர்; வெண்_புரி_நூல் மார்பர்; வேத_கீதத்தர்; [7-53_(2)__1]
கண் ஆர் நுதலர்; நகு_தலையர்; காலகாலர்; கடவூரர்; [7-53_(2)__2]
எண்ணார் புரம்_மூன்று எரி_செய்த இறைவர்; உமை ஓர் ஒரு_பாகம், [7-53_(2)__3]
பெண்_ஆண் ஆவர்---மயானத்துப் பெரிய_பெருமான் அடிகளே. [7-53_(2)__4]
VERSE 7-53_(3) (4 lines)
காயும் புலியின் அதள்_உடையர்; கண்டர்; எண்_தோள் கடவூரர்; [7-53_(3)__1]
தாயும் தந்தை, பல்_உயிர்க்கும், தாமே ஆன தலைவனார்; [7-53_(3)__2]
பாயும் விடை_ஒன்று_அது ஏறிப் பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி--- [7-53_(3)__3]
பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய_பெருமான்_அடிகளே. [7-53_(3)__4]
VERSE 7-53_(4) (4 lines)
நறை சேர் மலர் ஐங்கணையானை நானத்தீயால் பொடிசெய்த [7-53_(4)__1]
இறையார் ஆவர்; எல்லார்க்கும் இல்லை என்னாது அருள்செய்வார்; [7-53_(4)__2]
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர்ப் [7-53_(4)__3]
பிறை ஆர் சடையார்---மயானத்துப் பெரிய_பெருமான்_அடிகளே. [7-53_(4)__4]
VERSE 7-53_(5) (4 lines)
கொத்து ஆர் கொன்றை மதி சூடி, கோள் நாகங்கள் பூண்ஆக, [7-53_(5)__1]
மத்தயானை உரி போர்த்து, மருப்பும் ஆமைத் தாலியார்; [7-53_(5)__2]
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆடப் பலி கொள்ளும் [7-53_(5)__3]
பித்தர்---கடவூர்மயானத்துப் பெரியபெருமான்அடிகளே. [7-53_(5)__4]
VERSE 7-53_(6) (4 lines)
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து, சுடலைப் பொடி அணிந்து, [7-53_(6)__1]
பணி மேல் இட்ட பாசுபதர்; பஞ்சவடி மார்பினர்; கடவூர்த் [7-53_(6)__2]
திணிவு ஆர் குழையார்; புரம்மூன்றும் தீவாய்ப் படுத்த சேவகனார்; [7-53_(6)__3]
பிணி வார்சடையார்---மயானத்துப் பெரியபெருமான் அடிகளே. [7-53_(6)__4]
VERSE 7-53_(7) (4 lines)
கார் ஆர் கடலின்நஞ்சு உண்ட கண்டர்; கடவூர் உறை வாணர்; [7-53_(7)__1]
தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார்; [7-53_(7)__2]
ஊர்தான் ஆவது, உலகுஏழும் உடையார்க்கு ஒற்றியூர், ஆரூர்; [7-53_(7)__3]
பேர்ஆயிரவர்--மயானத்துப் பெரியபெருமான்அடிகளே. [7-53_(7)__4]
VERSE 7-53_(8) (4 lines)
வாடா_முலையாள்_தன்னோடும் மகிழ்ந்து, கானில் வேடுவனாய்க் [7-53_(8)__1]
கோடு ஆர் கேழல் பின் சென்று, குறுகி, விசயன் தவம் அழித்து, [7-53_(8)__2]
நாடா வண்ணம் செருச் செய்து, ஆவநாழி நிலை அருள்செய் [7-53_(8)__3]
பீடு ஆர் சடையார்---மயானத்துப் பெரியபெருமான்அடிகளே. [7-53_(8)__4]
VERSE 7-53_(9) (4 lines)
வேழம் உரிப்பர்; மழுவாளர்; வேள்வி அழிப்பர்; சிரம் அறுப்பர்; [7-53_(9)__1]
ஆழி அளிப்பர்,அரிதனக்கு; ஆன்_அஞ்சு உகப்பர்; அறம் உரைப்பர்; [7-53_(9)__2]
ஏழைத்தலைவர்; கடவூரில் இறைவர்; சிறுமான்மறிக் கையர்; [7-53_(9)__3]
பேழைச்_சடையர்---மயானத்துப் பெரிய_பெருமான்_அடிகளே. [7-53_(9)__4]
VERSE 7-53_(10) (4 lines)
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்து, [7-53_(10)__1]
பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான்அடிகள் சீர் [7-53_(10)__2]
நாடி, நாவல் ஆரூரன்_நம்பி சொன்ன நல்-தமிழ்கள் [7-53_(10)__3]
பாடும் அடியார், கேட்பார்_மேல், பாவம்_ஆன பறையுமே. [7-53_(10)__4]
VERSE 6-18_(1) (4 lines)
வடி ஏறு திரிசூலம் தோன்றும்_தோன்றும்; ___ வளர்_சடை_மேல் இள_மதியம் தோன்றும்_தோன்றும்; [6-18_(1)__1]
கடி ஏறு கமழ்_கொன்றை_க்_கண்ணி தோன்றும்; ___ காதில் வெண்_குழை_தோடு கலந்து தோன்றும்; [6-18_(1)__2]
இடி ஏறு களிற்று உரிவை_ப்_போர்வை தோன்றும்; ___ எழில் திகழும் திரு_முடியும் இலங்கித்
தோன்றும்; [6-18_(1)__3]
பொடி ஏறு திரு_மேனி பொலிந்து தோன்றும்--- ___ பொழில் திகழும் பூவணத்து எம்
புனிதனார்க்கே. [6-18_(1)__4]
VERSE 6-18_(2) (4 lines)
ஆண்_ஆகிப் பெண்_ஆய வடிவு தோன்றும்; ___ அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆகி_த் தோன்றும்; [6-18_(2)__1]
ஊண்_ஆகி ஊர் திரிவான் ஆகி_த் தோன்றும்; ___ ஒற்றை வெண்_பிறை தோன்றும்; பற்றார்_தம்_மேல் [6-18_(2)__2]
சேண் நாக வரை_வில்லால் எரித்தல் தோன்றும்; ___ செத்தவர்_தம் எலும்பினால் செறிய_ச் செய்த [6-18_(2)__3]
பூண் நாணும் அரை_நாணும் பொலிந்து தோன்றும்--- ___ பொழில் திகழும் பூவணத்து எம்
புனிதனார்க்கே. [6-18_(2)__4]
VERSE 6-18_(3) (4 lines)
கல்லாலின்_நீழலில் கலந்து தோன்றும் ___ கவின் மறையோர்_நால்வர்க்கும் நெறிகள் அன்று [6-18_(3)__1]
சொல்_ஆகச் சொல்லியவா தோன்றும்_தோன்றும்; ___ சூழ் அரவும், மான்_மறியும்,
தோன்றும்_தோன்றும்; [6-18_(3)__2]
அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும்; ___ ஐ_வகையால் நினைவார்_பால் அமர்ந்து
தோன்றும்; [6-18_(3)__3]
பொல்லாத புலால் எலும்பு பூண்_ஆய்_த் தோன்றும்--- ___ பொழில் திகழும் பூவணத்து எம்
புனிதனார்க்கே. [6-18_(3)__4]
VERSE 6-18_(4) (4 lines)
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும்; ___ பன்னிரண்டு_கண் உடைய பிள்ளை தோன்றும்; [6-18_(4)__1]
நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும்; ___ நால் மறையின் ஒலி தோன்றும்; நயனம் தோன்றும்; [6-18_(4)__2]
உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும்; ___ ஊரல் வெண்_சிர_மாலை உலாவி_த் தோன்றும்; [6-18_(4)__3]
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்--- ___ பொழில் திகழும் பூவணத்து எம்
புனிதனார்க்கே. [6-18_(4)__4]
VERSE 6-18_(5) (4 lines)
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும்; ___ மாசு இலாப் புன்சடைமேல் மதியம்
தோன்றும்; [6-18_(5)__1]
இயல்புஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும்; ___ இருங்கடல்நஞ்சு உண்டு இருண்ட கண்டம்
தோன்றும்; [6-18_(5)__2]
கயல் பாயக் கடுங் கலுழிக் கங்கைநங்கை ___ ஆயிரம்ஆம் முகத்தினொடு வானில்-தோன்றும் [6-18_(5)__3]
புயல் பாயச் சடை விரித்தபொற்புத் தோன்றும்--- ___ பொழில் திகழும் பூவணத்து எம்
புனிதனார்க்கே. [6-18_(5)__4]
VERSE 6-18_(6) (4 lines)
பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட ___ பலிமலரும், நறும்புகையும், பரந்து தோன்றும்; [6-18_(6)__1]
சீர் ஆழித் தாமரையின்மலர்கள் அன்ன ___ திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும்; [6-18_(6)__2]
ஓர் ஆழித் தேர் உடைய இலங்கை வேந்தன் ___ உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து,
அன்று, [6-18_(6)__3]
போர் ஆழி முன் ஈந்த பொற்புத் தோன்றும்--- ___ பொழில் திகழும் பூவணத்து எம்
புனிதனார்க்கே. [6-18_(6)__4]
VERSE 6-18_(7) (4 lines)
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும்; ___ சதுர்முகனைத் தலை அரிந்த தன்மை
தோன்றும்; [6-18_(7)__1]
மின் அனைய நுண்இடையாள் பாகம் தோன்றும்; ___ வேழத்தின்_உரி விரும்பிப் போர்த்தல்
தோன்றும்; [6-18_(7)__2]
துன்னிய செஞ்சடைமேல் ஓர் புனலும் பாம்பும் ___ தூய மா மதிஉடனே வைத்தல் தோன்றும்; [6-18_(7)__3]
பொன் அனைய திருமேனி பொலிந்து தோன்றும்--- ___ பொழில் திகழும் பூவணத்து எம்
புனிதனார்க்கே. [6-18_(7)__4]
VERSE 6-18_(8) (4 lines)
செறி கழலும் திருவடியும் தோன்றும்தோன்றும்; ___ திரிபுரத்தை எரிசெய்த சிலையும்
தோன்றும்; [6-18_(8)__1]
நெறிஅதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும்; ___ நெற்றிமேல் கண் தோன்றும்; பெற்றம்
தோன்றும்; [6-18_(8)__2]
மறுபிறவி அறுத்துஅருளும் வகையும் தோன்றும்; ___ மலைமகளும் சலமகளும் மலிந்து
தோன்றும்; [6-18_(8)__3]
பொறிஅரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்--- ___ பொழில் திகழும் பூவணத்து எம்
புனிதனார்க்கே. [6-18_(8)__4]
VERSE 6-18_(9) (4 lines)
அரும்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும்; ___ அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும்
கேழல்- [6-18_(9)__1]
மருப்பு ஓட்டு மணிவயிரக்கோவை தோன்றும்; ___ மணம் மலிந்த நடம் தோன்றும்; மணி ஆர்
வைகைத் [6-18_(9)__2]
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும்; ___ செக்கர்வான் ஒளி மிக்குத் திகழ்ந்த
சோதிப் [6-18_(9)__3]
பொருட்டு ஓட்டி நின்ற திண்புயமும் தோன்றும்--- ___ பொழில் திகழும் பூவணத்து எம்
புனிதனார்க்கே. [6-18_(9)__4]
VERSE 6-18_(10) (4 lines)
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி, அன்று, ___ தன் முடிமேல் அலர்மாலை அளித்தல்
தோன்றும்; [6-18_(10)__1]
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி, அன்று, ___ பலபிறவி அறுத்துஅருளும் பரிசு
தோன்றும்; [6-18_(10)__2]
கோங்கு அணைந்த கூவிளமும் மதமத்த(ம்)மும் ___ குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம்
தோன்றும்; [6-18_(10)__3]
பூங்கணை வேள் உரு அழித்த பொற்புத் தோன்றும்--- ___ பொழில் திகழும் பூவணத்து எம்
புனிதனார்க்கே. [6-18_(10)__4]
VERSE 6-18_(11) (4 lines)
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே ___ அவ் உருஆய் நிற்கின்ற அருளும் தோன்றும்; [6-18_(11)__1]
வார் உருவப் பூண் முலை நல் மங்கைதன்னை ___ மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும்
தோன்றும்; [6-18_(11)__2]
நீர்உருவக் கடல் இலங்கை அரக்கர்கோனை ___ நெறுநெறுஎன அடர்த்திட்ட நிலையும் தோன்றும்; [6-18_(11)__3]
போர் உருவக் கூற்று உதைத்த பொற்புத் தோன்றும்--- ___ பொழில் திகழும் பூவணத்து எம்
புனிதனார்க்கே. [6-18_(11)__4]