- Patikam: {7:71}
- Talam: tiru maṟaikkāṭu
- Paṇ: kāntāram
- Title:
- Translation: V.M.Subramanya Ayyar
- Location: IFP (Indology Library)
- Catalogue Number: TA SAIVA 368
- Date: 1983
- Volume Number: 10
- Pages: 188-192
- Text entering: 98/03/20 (Vaidehi)
- Further editing: 2002/04/22 (SAS & jlc)
- {7:71}__1+
{$}
- யாழைப் பழித்தன்ன மொழி
மங்கை ஒரு பங்கன், பேழைச் சடை முடிமேல் பிறை வைத்தான் இடம் பேணில்
- if one desires to
worship the shrine of Civaṉ
who has on one half a lady whose words ridicule
the music produced in yāḻ,
and who placed a crescent in his caṭai coiled into a crown
which is like a chest;
- [[PP_(பேழைச்சடை):
பேழைச்சடையர்
(cuntarar, tirukkaṭavūrmayāṉam, 9);
பேதைவார்சடை
(campantar, tirukkēticcaram, 6)]]
- தாழைப் பொழிலூடே சென்று பூழைத்தலை நுழைந்து,
வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே
- it is definitely Maṟaikkāṭu
where the small monkeys creep through a narrow small door
getting through the garden of fragrant screw-pine
and enjoy eating plantain fruits.
- {7:71}__2+
{$}
- சிகரத்திடை இளவெண்பிறை வைத்தான்
இடம் தெரியில்
- if one wants to know the
shrine of Civaṉ who placed on his head a young
white crescent.
- முகரத்திடை முத்தின் (ன்)
ஒளி பவளத்திரள் (1) ஓதம் தகரத்திடை தாழைத்திரள் ஞாழல்திரள்
நீழல் மகரத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே
- it is definitely
maṟaikkāṭu where the waves which have
collections of coral in which are
concealed the pearls which are produced
in the oysters, bring along with them makaran
and shark dash against the shore in the
shade of the groves of feted cassia and
fragrant screw-pine that grow amidst the
fragrant wax-flower dog-bane trees.
- [[Variant reading:
(1) ஓதத்தகரத்திடை]]
- {7:71}__3+
{$}
- அங்கங்களும் மறைநான்குடன் விரித்தான்
இடம் அறிந்தோம்
- we knew the place
of Civaṉ who expounded the four vētams along
with the six aṅkams.
- தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்வீழ் மணல் படப்பை
- in the enclosed sandy
gardens where the matura fruits of the
cocoanut trees and the tall palmyra trees
fall down.
- சங்கங்களும் இலங்கு இப்பியும்
வலம்புரிகளும் இடறி
- throwing on the shore
ordinary conches, shining oysters and valampuri
(conches spiralling clockwise)
- வங்கங்களும் உயர்கூம்பொடு வணங்கும்
மறைக்காடு (ஏ)
- even the inanimate things
like the ships pay homage coming to the shore
with their masts.
- [[தெங்கம் : தெங்கு+அம்]]
- {7:71}__4+
{$}
- நரை விரவிய
மயிர்தன்னொடு பஞ்சவடி மார்பன்
- Civaṉ wears on his chest a
sacred thread called pancavaṭi made with grey hairs
of tēvar who die.
- [[பணிமேலிட்ட பாசுபதர் பஞ்சவடி
மார்பினர்
cuntarar, tirukkaṭavūr mayaṉam, 6]]
- உரை விரவிய உத்தமன் இடம்
உணரல்(ல்) உறு மனமே
- my mind which tries to
know the place of the supreme god who is famous!
- குரை விரவிய (1) குலைசேகரக் கொண்டல்
தலை விண்ட, வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடு (ஏ)
- it is maṟaikkāṭu where the
mango trees on the top of which clouds seem to
crawl, grow on the roaring shore, where the
waves which are in size like mountains dash on
the shore, break into pieces and descend down
- [[சேகரம்
mangotree;
- வெய்யோன் ... சேகரமாகி
நின்றான்
(Kantapurāṇam, curapatumaṉ vatarppaṭalam, 473);
- Waves are compared to mountains,
(cuntarar, tiruvaṇcaikkaḷam, 10)]]
- [[Variant reading:
(1) குலசேகரக்கொண்டல்]]
- {7:71}__5+
{$}
- மனமே
- my mind!
- தொழுது ஏத்தச் சங்கைப்பட
நினையாது எழு
- start without thoughts
of any doubt to worship with joined hands, and
praise Civaṉ.
- கங்கைச்சடை முடி
உடையவற்கு இடம் ஆவது
- the place of Civaṉ who
has a caṭai coiled into a crown in which
there is Kaṅkai.
- பரவை அங்கைக் கடல்
அருமாமணி உந்திக் கரைக்கு ஏற்ற வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும்
மறைக்காடே
- it is definitely
maṟaikkātu where the expansive ocean with its
hands of waves push rare and big precious
stones and pile them on the shore and strike
against it bringing along with them ships
and sharks.
- {7:71}__6+
{$}
- அடல் விடையினன்
- Civaṉ has a strong bull.
- (1) மழுவாளினன்
- has a weapon of a battle-axe
- [[வாள்
is used in the sense of a weapon.]]
- (1) நல் ஆர் அணி கொன்றைப்
படரும் சடைமுடி உடையவற்கு இடம் ஆவது
- the place which is the
residence of Civaṉ who has a spreading caṭai
coiled into a crown which wears koṉṟai flowers
and good and holy mountain ebony flowers.
- பரவைக் கடலிடை
இடைகழி அருகினில் கடிநாறு தண் கைதை மடலிடை இடை வெண்குருகு எழு
மணிநீர் மறைக்காடே
- is definitely maṟaikkāṭu
which has blue water where in frequent intervals
of the expansive ocean and by the side of the
backwaters, the white cranes rise and fly from
the inter spaces of the petals of the cool
fragrant screw-pines which spread their fragrance.
- [[Variant reading:
(1) மழுவாளினவராலணி கொன்றை]]
- {7:71}__7+
{$}
முளை வளர் இளமதி உடையவன்
- Civaṉ wears a tender and
waxing crescent which rose fresh in the sky.
- முன்செய்த வல்வினைகள்
களைகளைந்து எனை ஆனல் (ல்)உறு கண்டன்(ன்) இடம்
- the place of Civaṉ who
admitted me as his protege after weeding out
the irresistible acts done in previous
births, like removing out weeds.
- செந்நெல் வளை விளை வயல்
கயல் பாய்தரு குண வார் மணற் கடல்வாய் வளைவளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும்
மறைக்காடே
- it is definitely
maṟaikkāṭu where the carp fish jump in the
fields where the variety of superior paddy of
yellowish hue is bent due to the weight of the
corns and where the eastern sea (bay of bengal)
which has extensive sand brings the ordinary
spiralling conches with a superior variety
of conch by name calaṇcalam and strikes against
the shore.
- {7:71}__8+
{$}
- கங்கைச்சலம் புரி சடைமுடி
உடையவற்கு இடம் ஆவது
- the place of Civaṉ who
has a caṭai coiled into a crown and twisted, on
which the water of Kaṅkai stays.
- நலம் பெரியன சுரும்பு ஆர்ந்தன
கலம் பெரியன சாரும் கடற்கரை பொருது இழி பரவை
- the waves of the sea
where the big ships voyage carrying good
cargoes and fragrant things on which bees
swarm and stay, dash against the shore and recede.
- வலம்புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து
எற்றும் மறைக்காடே
- is definitely maṟaikkāṭu
where they bring along with them conch spiralling
clockwise and calaṇcalan.
- நம்கோன்இடம் அறிந்தோம்
- as we knew maṟaikkāṭu, we
knew the place of our King.
- {7:71}__9+
{$}
- குண்டுஆடியும் சமண்ஆடியும்
குற்றுடுக்கையர்தாமும் கண்டார் கண்ட காரணம்(ம்) அவை கருதாது கை தொழுமின்
- (People of this world!) people
who wear short dresses, being low and preaching
doctrine of amaṇ religion, though they have
realised some truths with their limited
knowledge, you do not mind them as great, but
worship with joined hands the shrine of.
- எண்தோளினன், முக்கண்ணினன்,
ஏழிசையினன், அறுகால் வண்டு ஆடு தண்பொழில் சூழ்ந்து எழு மணிநீர் மறைக்காடு (ஏ)
- Maṟaikkāṭu where blue sea-water
rises high, and which is surrounded by cool gardens
where the bees of six legs roam about
and which belongs to Civaṉ who has eight shoulders,
three eyes and who has the seven notes of music.
- [[Syntactical link:
(1) மறைக்காடே தொழுமின்]]
- {7:71}__10+
{$}
- வார் ஊர் வனமுலையாள் உமை மறைக்காட்டை
- on maṟaikkāṭu which is
the abode of Civaṉ who has as a half Umai, who
has beautiful breasts which rise above the bodice.
- பார் ஊர் பல புடை (1) சூழ்வளவயல்
நாவலர்வேந்தன் ஆரூரன தமிழ்மாலைகள் பாடும்(ம்) அடித்தொண்டர்
- the votaries who sing
the garlands of tamiḻ composed by ārūraṉ, who
is the chief of the place, nāvalūr which has
fertile fields and is surrounded by many place
in this world.
- நீர் ஊர்தரு நிலனோடு உயர்
புகழ் ஆகுவர் (தாம், ஏ)
- will attain fame which
will exist as long as world surrounded by ocean
lasts.
- [[Variant reading: (1)
சூழ்வனவயல்]]