{7:49}__1+
{$} முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி மாநகர்வாய்
in the big city of Murukaṉ Pūṇṭi where vaṭukar whose bad body-odour spreads to a distance, live.
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரிவலாமை சொல்லி
the vaṭuka hunters who have cruel and bent bows, speaking unfriendly words.
திடுகுமொட்டு எனக் குத்தி
wounding frightening, and rebuking authoritatively travellers by saying tiṭuku and moṭṭu.
ஆறு அலைத்துக் கூறை கொள்ளும்இடம்
is the place where they plunder on the highway and rob travellers of their clothes.
இடுகு நுண்இடை மங்கைதன்னொடும் (1) எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரான் நீரே
For what purpose did you remain in this place with a young lady of small and minute waist? my Lord!
[[Variant reading: (1)எற்றுக்கு this reading will apply upto the 9th verse]]

{7:49}__2+
{$} வில்லைக் காட்டி வெருட்டிவேடுவர் விரவலாமை சொல்லி
the hunters showing the bow, frightening and speaking unfriendly words, to travellers.
கல்லினால் எறிந்திட்டும்
throwing stones at them.
மோதியும்
and dashing them against the earth.
கூறைகொள்ளும் இடம்
robbing them of their clothes.
முல்லைத்தாது மணம்கமழ் முருகன்பூண்டி மாநகர் வாய்
in the big city Murukaṉ Pūṇṭi where the fragrance of the pollen of the arabian jasmine spreads
எல்லைகாப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரான்நீரே
our Lord! if you know well that there is nothing to guard this city's boundaries, for what purpose did you remain here? my Lord!

{7:49}__3+
{$} எம்பிரானீரே
our Lord!
பசுக்களே கொன்று தின்று
eating the flesh of the animals killing them.
[[பசுக்கள் does not mean cows, but animals]]
பாவிகள் பாவம் ஒன்று அறியார்
those cruel people do not know even a little about sin
[[PP_X: பாவிகள்: cruel people
(Kuṟaḷ, 168)]]
(1) உசிர்க்கொலை பல நேர்ந்து நாள்தொறும் கூறை கொள்ளும் இடம்
the place where they rob the travellers of their clothes and killing many lives daily, daringly.
முசுக்கள் போல் பலவேடர் வாழ் முருகன் பூண்டி மாநகர் வாய்
in the big city of Murukaṉ pūṇṭi where many hunters who rob people of their belongings like monkeys live
[[நின்னது தா என நிலைதளர, மரம் பிறங்கிய நளிசிலம்பில், குரங்குஅன்னபுன் குறுங்கூளியர், பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ (puṟam, 136, 11.11-14)]]
இசுக்கு (2) அழியப் பயிக்கம் கொண்டு நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்
for what purpose did you remain here receiving alms, the reproach from that act to perish?
[[உசிர்-உயிர்; ச and ய are interchangeable.]]
[[PP: பசுமரம் சார்ந்தனை ஆதலின் மற்றுநின், உசிர்ப்பெருந்தோழன் உண்மையும் கூட்டமும் (peruṅkatai, 2-13-50-51);]]
[[பயிக்கம்: alms;]]
[[PP: பாழூரில் பயிக்கம்புக்கு எய்தவாறே (nāvukkaracar, tiruvārūr, 2,8)]]
[[Variant readings: (1)உயிர்க் (2) இழியப்]]

{7:49}__4+
{$} மோறைவேடுவர் கூடிவாழ் முருகன்பூண்டிமாநகர்வாய்
in the big city of Murukaṉ pūṇṭi where hunters noted for their savageness, live crowded.
பீறல் கூறை உடுத்து ஓர்பத்திரம் கட்டி வெட்டனராய்
speaking harsh words, inserting a small sword in the waist and wearing a torn cloth.
சூறைப்பங்கியராய்
getting a share of the things robbed on the highway
[[பங்கி: one who gets a share;]]
[[PP: பொங்கி நின்று எழுந்த கடல்நஞ்சினைப், பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய் (nāvukkaracar, tiruccōṟṟuttuṟai (3) 6).]]
நாள்தொறும் கூறைகொள்ளும் இடம்
which is the place where daily they rob the clothes of travellers.
ஏறுகால் இற்றது இல்லையாய்விடில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்
for what purpose did you remain here if the legs of your bull have not become fractured and are in proper condition?
எம்பெருமான்
my Lord!

{7:49}__5+
{$} சங்கரா
God who does good to his devotees!
சாமவேதம் ஓதி
chanting the cama vētam.
தயங்கு தோலை(1) உடுத்து
wearing a shining skin
மயங்கி ஊர் இடு பிச்சைகொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீரோ
Don't you know even a little about the way to eat receiving alms given by the inhabitants of the village who have lost their senses listening to your chanting?
முருகன் பூண்டிமாநகர்வாய்
in the big city of Murukaṉ pūṇṭi.
முயங்கு பூண்முலை மங்கையாளொடும்
with a lady wearing on her breasts ornaments and who embraces you.
இயங்கவும் மிடுக்கு (2) உடையராய்விடில்
if you have the strength to move at least from this place.
நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்
for what purpose did you remain here?
எம்பிரான்
my Lord!
[[variant readings: (1) உடுத்த (2) உடையிராய்விடில்]]

{7:49}__6+
{$} எம்பிரான்
our Lord!
விட்டிசைப்பன கொக்கரை கொடுகொட்டி தத்தளகம் கொட்டிப் பாடும் இத் துந்துமியொடு குடமுழா நீர் மகிழ்வீர்
you rejoice in hearing the music produced in the large hemispherical loud-sounding drum, this tuntumi which is beaten and sound in produced, tattaḷakam, Koṭukoṭṭi and Kokkarai which produces sound with breaks.
பொட்டு அலர்ந்து மணம்கமழ் முருகன் பூண்டிமாநகர்வாய்
in the big city of Murukaṉ pūṇṭi where the buds blossom and spread their fragrance.
இட்டபிச்சைகொண்டு (1) உண்பதாகின்
if you eat the alms that is given to you and received by you.
நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்
for what purpose did you remain here?
[[Variant reading: (1) உண்பதாயின்]]

{7:49}__7+
{$} எம்பிரான்
our Lord!
வேதம் ஓதி
chanting the vetams.
வெண்ணீறு பூசி
smearing white sacred ash.
வெண்கோவணம்தற்று
wearing a white men's loin-cloth.
அயலே ஓதம் மேவிய ஒற்றியூரையும் (1) உத்தரம் நீர் மகிழ்வீர்
you desire Oṟṟiyur which has waves by its side on account of the annual festival in uttaram
[[உத்தரநாள்விழா: ஒத்தமைந்த உத்தரநாள் தீர்த்தமாக ஒளி திகழும் ஒற்றியூர் (nāvukkaracar, oṟṟiyūr (5) 5; the festival in uttaram in paṅkuṉi was celebrated in Tiruvārūr also; nāvukkaracar, tiruvārūr (9)2.)]]
மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன் பூண்டி மாநகர்வாய்
in the big city of Murukaṉ Pūṇṭi where the hunters dash against travellers and rob them of their clothes.
ஏது காரணம்
for what reason
ஏது காவல்கொண்டு
and for protecting which thing
நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்
for what purpose did you remain here?
[[Variant reading: (1) உத்திநீர்]]

{7:49}__8+
{$} எம்பிரான்
our Lord!
பட அரவ நுண் ஏர்இடை பணைத்தோள் வரிநெடுங்கண் மடவரல் உமைநங்கைதன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்
you rejoiced in having as a half, Umai, a lady of distinction who is unsophisticated and has long eyes with streaks, shoulders like bamboos and a waist as minute as the cobra with a hood;
[[PP: மின்னும் பணியும் புரை மருங்குல் பெருந்தோளி (Kōvaiyār, 5)]]
முடவர்அல்லீர்
you are not a lame person.
இடர்இலீர்
you have no difficulty in going away from this place.
முருகன் பூண்டி மாநகர்வாய் இடவம் ஏறியும் போவது ஆகில்
if you can ride on the bull in the big city of Murukaṉ Pūṇṭi and leave this place.
நீர் எத்துக்கு இங்கு இருந்தீர்
for what purpose did you remain here?

{7:49}__9+
{$} எம்பிரான்
our Lord!
சாந்தமாக வெண்ணீறு பூசி
smearing the sacred white ash as sandal paste.
வெண்பல் தலை(1)கலனா
holding as a begging bowl a skull which has white teeth.
வேய்ந்த வெண்பிறைக் கண்ணிதன்னை ஓர்பாகம் வைத்து உகந்தீர்
you rejoiced in placing on one side the chaplet of white crescent which you wore on your head.
மோந்தையோடு முழங்குஅணா முருகன் பூண்டிமாநகர்வாய்
in the big city of Murukaṉ pūṇṭi where the sound of montai (a kind of drum with one face) and the roar of the hunters never cease
[[மொந்தை has become மோந்தை; the lengthening of the vowel for the sake of rhyme, one of the six poetical licenses.]]
ஏந்து பூண்முலை மங்கைதன்னொடும் நீர் எத்துக்கு இருந்தீர்
for what purpose did you remain here with a lady who wears superior ornaments on her breasts?
[[Variant reading: (1) கலனாக]]

{7:49}__10+
{$} முந்திவானவர்தாம் தொழும் முருகன் பூண்டிமாநகர்வாய்
in the big city of murukaṉpūṇṭi which the celestials worship taking precedence over others.
பந்து அணை விரல் பாவைதன்னை ஓர்பாகம் வைத்தவனை
about Civaṉ who placed on one half a beautiful lady who holds in her fingers a ball to play with.
சிந்தையின் (1) சிவதொண்டன் ஊரன் (2) உரைத்தன பத்தும் கொண்டு
with the help of the ten verses which were composed by Nampi Ārūraṉ who is a votary of Civaṉ by his devotion.
எம்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் (தாம்) இலர்(ஏ)
those who praise our god will not have the slightest suffering.
[[variant readings: (1) சிறுதொண்டன் (2) உரைத்த]]