[[The name of this shrine is now known as Kāṉāmṭṭampuliyūr]]


{7:40}__1+
{$}
முள்வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து
the buds of the fragrant screw-pine were put forth by those trees and blossomed having petals, which have on their edges thorns.
விரை நாறு முருகுவிரிபொழில் சூழ்
surrounded by gardens which have abundant honey and spread their fragrance.
கள்வாய கருங்குவளை கண் வளரும் கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு
Having seen in Kāṉāṭṭumuḷḷūr where in the fields the blue nelumbo flowers from which honey flows, seem to be like sleeping eyes.
வள்வாய் மதி மிளிரும் வளர் சடையினானை
Civaṉ who has a growing caṭai on which the crescent with sharp ends is shining.
மறையவனை, வாய் மொழியை, வானவர்தம் கோனை
who is the Vētam, other words spoken by the mouth, the king of the immortals.
புள்வாயைக் கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை
who is himself ((Māl)) who tore the beak of a bird (a crane), swallowed the worlds and spat them out.
பொன் நிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தினானை
who is also the four-faced Piramaṉ who is golden in colour and wears a sacred thread of three strands.
தொழுதேன்
I worshipped with joined hands.
[[மதி: this word is generally used in the sense of moon of full size, but it is here used in the sense of a crescent]]

{7:40}__2+
{$}
திருமேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திருத்தக்க அந்தணர்கள் ஓதுநகர் எங்கும்
in all places where there are mansions of the sacred brahmins who maintain the three fires and mansions of those who possess wealth which is desired even by the goddess of wealth.
கருமேதி செந்தாமரை மேயும் கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு
Having seen in Kāṉāṭṭumuḷḷūr which has fields where the black buffaloes graze the red lotus flowers growing there.
ஒரு மேகமுகில் ஆகி
Being the cloud which is of very great help to the world.
ஒத்த உலகம் தான் ஆய்
and being the worlds that are equal among themselves.
ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய்
Being the living beings that crawl, and stand, and the aeons that are the cause of their origin and end.
பொருமேவு கடல் ஆகி
Being himself the sea which always dashes against the shore.
பூதங்கள் ஐந்தாய்ப் புனைந்தவனை
being the five elements and the creator of those five.
புண்ணியனை
who is the embodiment of all virtues.
புரிசடையினானை
and who has twisted caṭai.
தொழுதேன்
I worshipped with joined hands.
[[மேகமுகில்: two words having the same meaning: (tautology for greater effect and emphasis);
ஒத்துலகம்=ஒத்த+உலகம். நகர் here means mansion;
செல்வத்தார் நகர், அந்தணர் ஓது நகர் is the syntactical link]]

{7:40}__3+
{$}
அன்னங்கள் அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணிமலர்கள் ஏறிவிளையாடும் அகன் துறையின் அருகே
By the side of the broad ghat where the swans play climbing upon the beautiful flowers of lotus which have buds that are above the surface of the water.
கரும்பு உயர்ந்து பெருஞ் செந்நெல் நெருங்கி விளைகழனிக் கானாட்டுமுள்ளூரில்
in Kāṉāṭṭumullūr which has fields in which sugar-canes growing to a great height and big paddy crops grow densely.
கண்டு
having view of
இரும்பு உயர்ந்த மூ இலைய சூலத்தினானை
Civaṉ who has an eminent trident of three blades made of iron.
இறையவனை
who stays in all things both animate and inanimate.
மறையவனை
who is the superior one among gods. (who gave out the vetam or who chants the vetam)
எண்குணத்தினானை
who has eight attributes.
[[PP_X: The eight attributes are : (1) Being self-dependant (2) Having a pure body (3) knowledge got without learning (4) omniscience (5) Being naturally free from all bondage (6) Having abundant grace (7) Power which knows no limits (8) happiness which knows no limits;
(Kuṟaḷ, (9) Parimēlaḻakar)]]
உயர்ந்த சுரும்பு கொன்றையொடு தூமதியம் சூடும் சடையானை
who adorns his caṭai with blemishless crescent along with koṉṟai flowers on which superior bees settle.
விடையானை
who has a bull.
சோதி எனும் சுடரை
the light that is self-luminous.
தொழுதேன்
his devotee, worshipped with joined hands.

{7:40}__4+
{$}
பாளைபடுபைங்கமுகின் சூழல்
within the grove of the green areca palm which puts forth big spathes.
காளைவண்டு
when the young and male bees.
இளந்தெங்கின் படுமதம் செய் கொழுந்தேறல் வாய் மடுத்துப் பருகிப்பாட
are singing having drunk with its mouth the rich today of the young cocoanut palm, which is highly intoxicating.
மயில் ஆலும் வளர் சோலைக் கானாட்டுமுள்ளூரில்
in kāṉāṭṭumuḷḷūr which has prospering gardens in which peacocks dance.
கண்டு
having view of
பூளை புனை கொன்றையொடு புரிசடையினானை
Civaṉ who wears on his twisted caṭai flowers of javanese wool plant and koṉṟai flowers.
புனல் ஆகி அனல் ஆகி
who is himself water and fire.
பூதங்கள் ஐந்தாய்
who is the five elements.
நாளை இன்று நெருநலாய் (1) ஆகாயம் ஆகி
who is the great cosmic space and the three divisions of time, namely future, present and paste.
(2) ஞாயிறு ஆய் மதியம் ஆய் நின்ற எம்பரனை
and our supreme god who is the sun and the moon.
தொழுதேன்
I, his devotee, worshipped him with joined hands.
[[Variant reading: (1) ஆகாசமாகி (2) நாயிறாய்]]

{7:40}__5+
{$}
இருக்குவாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து
as the brahmins who always chant the vētams perform sacrifices in all the places where there are living beings of seven kinds.
இரு (1) நிதியம் வழங்கு நகர் எங்கும்
on all sides of the mansions where people give them great wealth.
கருக்கு வாய்ப்பெண்ணையொடு தெங்கு மலிசோலைக் கானாட்டுமுள்ளூரில்
in Kāṉāṭṭumuḷḷūr where there are gardens of many cocoanut trees and palmyra trees which have jagged edges in the leaf stalk.
கண்டு
Having had view of.
செருக்கு வாய்ப் பைங்கண் வெள்ளரவு அரையினானை
Civaṉ who ties in his waist a white cobra of tender eyes and angry mouth.
தேவர்கள் சூளாமணியை
who is the jewel worn on the head by the tēvar.
செங்கண்விடையானை
who has a bull which has red eyes.
முருக்குவாய் மலர் ஒக்கும் திருமேனியானை
who has a holy body which is as red as the flowers of the indian coral tree.
முன்னிலையாய் முழுது உலகம் ஆயபெருமானை
who is the great god who is himself all the worlds and stands witness to everything.
தொழுதேன்
I, his devotee, worshipped him with joined hands.
[[Variant reading: (1) நெதியம்]]

{7:40}__6+
{$}
தையல் மிடவார்கள்
girls who are well dressed
[[தையல்-புனையப்படுதல்; (Kōvaiyar, 60, pērāciriyar);
Another meaning: தையல் மடலார் : young girls]]
உடை அவிழ, கோதை குழல் அவிழக் குடைந்து ஆட
bathe plumging into the water as their dress becomes loose, their garlands worn on the tresses of hair become loose.
குங்குமங்கள் உந்திவரும் கொள்ளிடத்தின் கரைமேல்
on the bank of Koḷḷiṭam which thrust forward the saffron that is worn on their foreheads.
கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனிக் கானாட்டு முள்ளூரில்
in Kāṉāṭṭumuḷḷūr, where the blue nelumbo flowers which are removed from the fields as weeds are gathered in bundles by the people belonging to the last caste.
விடை அரவக் கொடி ஏந்தும் விண்ணவர்தம் கோனை
the chief of the celestials who holds a banner on which the form of a bellowing bull is down.
அடியிணையும் திருமுடியும் காண அரிது ஆய சங்கரனை
one who has the name of cankaraṉ whose feet and holy head could not be seen,
வெள்ளத்து மாலவனும் வேதமுதலானும்
by Māl who sleeps on the ocean (of milk) and Piramaṉ who is the chief of the vētam.
தத்துவனை
who is the ultimate reality.
கண்டு
having a view of.
தொழுதேன்
I, his devotees worshipped with joined hands.

{7:40}__7+
{$}
குருமணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரைவாய்
in the waves which descend down with eddies and wash away brilliant precious stones, falling from a great height.
கோல்வளையார் குடைந்து ஆடும் கொள்ளிடத்தின் கரைமேல்
on the bank of Koḷḷiṭam where girls wearing rows of bangles dive and bathe in the water.
கருமணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனிக்கானாட்டு முள்ளூரில்
in Kāṉāṭṭumuḷḷūr where in the fields the blue nelumbo flowers blossom like sapphire.
கண்டு
Having a view of Civaṉ.
அருமணியை
who is like a rare gem.
முத்தினை
who is as valuable as a pearl.
ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள்தம் பெருமானை
who is the Lord of the immortals and who bathes in the five products of the cow.
அருமறையின்பொருளை
who is the meaning of the abstruse vētam
திருமணியை
who is like other precious stones.
தீங்கரும்பின் ஊறல் இருந்தேனை
who is a sweet as the sweet juice of big quantity that flows like a spring in the sweet sugar-cane.
தெரிவு அரிய மாமணியை
who is like the big gem whose property cannot be easily known.
திகழ்தரு செம்பொன்னை
the unalloyed gold of superior fineness.
தொழுதேன்
I, his devotee, worshipped with joined hands.

{7:40}__8+
{$}
தழை தழுவு தண் நிறத்த செந்நெல்அதன் அயலே
By the side of the crop of red paddy which is green in colour and is flourishing.
தடந்தரள மென் கரும்பின் தாழ்கிடங்கின் அருகே
and near the deep moats where soft sugar-canes which have pearls within them.
கழை தழுவித்தேன் தொடுக்கும்
the bees build honey-combs near those sugar-cane crop.
கழனி சூழ் பழனக்கானாட்டு முள்ளூரில்
in Kāṉāṭṭumuḷḷūr which has tanks surrounded by rice-fields.
கண்டு
having seen.
இழை தழுவு வெண்ணூலும் மேவு திருமார்பின் ஈசன்
the Lord on whose beautiful chest are the ornaments of cobras and along with them a sacred thread of three strands.
தன் எண் தோள்கள் வீசி எரியாட
in order to dance in the fire swinging his eight shoulders.
குழை தழுவு திருக்காதில் கோள் அரவம் அசைத்து
fixing a cruel cobra also in the ear where there is an ear-ring.
கோவணம் கொள் குழகனை
the youth who wears a men's loin-cloth.
குளிர் சடையினானை
and the god with a cool caṭai.
தொழுதேன்
I, his devotees, worshipped with joined hands.

{7:40}__9+
{$}
துணிவு இனிய தூயமொழித் தொண்டைவாய் நல்லார்
like the ladies who have red lips like the common creeper of the hedge and speak pure words which are sweet to hear even during protracted sulk in a love quarrel.
தூ நீலம் கண்வளரும் சூழ்கிடங்கின் அருகே
near the surrounding moat in which the pure blue nelumbo flowers seem to sleep.
கனிவு இனிய கதலிவனம் தழுவு பொழிற் சோலைக் கானாட்டு முள்ளூரில்
in Kāṉāṭṭumuḷḷūr where the big gardens contain within them plaintain gardens of sweet fruits.
கண்டு
having seen Civaṉ.
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை
who has a caṭai on which he wears a curved crescent emitting rays and pleasing to look at.
வண்டினங்கள் பாட
as the swarms of bees hum.
பனி உதிரும் சடையானை
who has a caṭai from which particles of water drop.
குண்டலம் சேர் காதவனை
who wears on his ears kuṇṭalam (a kind of mens' ear-ring).
பால் வெண்ணீற்றானை
who smears himself with holy ash as white as milk.
பல உருவும் தன் உருவே ஆய பெருமானை
the great god whose form is all forms.
தொழுதேன்
I his devotee, worshipped with joined hands.

{7:40}__10+
{$}
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப
as the crane which has fine feathers and other birds fly and make a sound.
துறைக் கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளிவிளையாட
the Keṇṭai fish in the ghat rolls and the carp jumps and plays.
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனிக் கானாட்டு முள்ளூரில்
in Kāṉāṭṭumuḷḷūr of fields where the bees in the blue nelumbo flower hums like many melodies.
கண்டு
having seen Civaṉ.
அம்பொன் மலைக்கோமான் தன் பாவை தேவியாக
when the beautiful daughter of the king of the golden mountain became his consort.
தனது உருவம் ஒருபாகம் சேர்த்துவித்தபெருமான்
who is the great one who had her fixed as one half of his body.
மேவிய வெந்நரகத்தில் அழுந்தாமை நமக்கு (1) மெய்ந்நெறியைத்தான் காட்டும் வேதமுதலானை
the chief god who has been decided as such by the vētams and who shows us the right path so that we may not sink in the cruel hells which is desired by sinners.
தொழுதேன்
I, his devotee, worshipped with joined hands.
[[Variant reading: (1) மெய்ஞ்ஞெறியைத்]]

{7:40}__11+
{$}
(1) கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரைமேல் கானாட்டுமுள்ளூரில்
in Kāṉāṭṭumuḷḷūr which is on the bank of Koḷḷiṭam which has abundant water on the banks.
கண்டு
having seen Civaṉ
திரையின் ஆர் கடல்சூழ் தென் இலங்கைக்கோனைச் செற்றவனை
who put down the pride of the King of Ilankai in the south, which is surrounded by the sea with waves.
கழல்தொழுது
and having worshipped his feet.
உரையின் ஆர் மதயானை நாவல் ஆரூரன்
ārūraṉ born in nāvalūr who has an elephant of musts and great fame.
உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார்
those are able to recite the famous Tamiḻ verses sung by him as of right by worshipping him.
வரையினார் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் (தலைவராய்த்) தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் (அவர்தாமே)
will live for a long time as the chief of kings who rule parts of the world having boundaries and after that, be the chief of the celestials in heaven.
[[Variant reading: (1) நுரையினார் கறை தழுவு, நுரையினார் கரை தழுவு]]