[[This shrine is now known as Cākkōṭṭai, near Kumpakōṇam.]]


{7:16}__1+
{$} குரும்பை முலை மலர்க்குழலிகொண்டதவம் கண்டு
knowing the penance undertaken by Umai who had breasts like immature cocoanuts, and tresses of hair adorned with flowers.
குறிப்பினொடும் சென்று
going to that place of penance with the intention of marrying her.
அவள் தன் குணத்தினை நன்கு அறிந்து
understanding her nature well after testing her.
விரும்பும் வரம் கொடுத்து
granting the boons she desired.
அவளை வேட்டருளிச்செய்த விண்ணவர்கோன்
the chief of the celestials who married her.
கண்ணுதலோன் மேவிய ஊர்வினவில்
if one asks about the place where Civaṉ with a frontal eye, dwells.
அரும்பு அருகேசுரும்பு அருவ
as the kind of bee, curupu, gently afflict the mature buds.
[[ஐவர் என்னுள்புகுந்து ஒழியாது அருவித்தின்றிட, ஊன்பொதிநரம்புதோல்குரம்பையுள்புக்கு அருவிநோய்செய்து (periya tirumoḻi, 7-7-1, 9-7-6)]]
அறுபதம் பண்பாட
the beetle with six legs sings melody-types.
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில் சூழ்அயலின்
by the side of the gardens that lend beauty where lovely peacocks dance using them as the stage.
கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்கமலங்கள் முகம் மலரும் கலய நல்லூர்காண்
is Kalayanallūr where lotus blossoms like faces in the fields where the blue nelumbo by the side of sugar-canes close their petals as if they are in sleep (காண் expletive in all the verses).

{7:16}__2+
{$} செருமேவுசலந்தரனைப்பிளந்தசுடர் ஆழிசெங்கண் மலர்பங்கயமாச் சிறந்தானுக்கு அருளி
granting the brilliant discus which cut calantaraṉ into two who desired battle, to Māl who laid his red eye which is like lotus, at the feet of Civaṉ.
இருள் மேவும் அந்தகன்மேல் திரிசூலம்பாய்ச்சி
thrusting the trident of three blades into the body of antakācuraṉ who was like darkness.
இந்திரனைத்தோள்முரித்த இறையவன் ஊர்வினவில்
if one asks about the place of the Lord who broke off the shoulders of intiraṉ
பெருமேதை மறை ஒலியும்
the sound of vētams which grants supreme intelligence.
பேரிமுழவுஒலியும்
the sound of pēri and muḻavu.
பிள்ளை இனம் துள்ளிவிளையாட்டு ஒலியும் பெருக
and the sound of groups of children who jump and play, are increasing
கருமேதிபுனல்மண்ட
as the black buffalo dives into the water.
கயல்மண்ட
the Kayal fish fall on the lotus in a group.
கமலம் களிவண்டின் கணம் இரியும் கலய நல்லூர் காண்
is Kalayanallūr where the swarm of intoxicated bees scatter in all directions from the lotus flowers.

{7:16}__3+
{$} இண்டைமலர்கொண்டு
with a circlet of flowers and loose flowers.
மணல் இலிங்கம் அது இயற்றி
improvising an iliṅkam from the sand of the river maṇṇi.
இனத்து ஆவின்பால் ஆட்ட
bathing with milk got from the herd of cows.
இடறிய தாதையைத்தாள் துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த
the tēvar to worship and praise the feet of caṇṭi who cut into two the feet of his father who kicked the milk-pots.
தொடர்ந்து அவனைப் பணிகொண்ட விடங்கனது ஊர்வினவில்
if one asks about the place of the beautiful god who admitted caṇṭi into his grace.
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும்
in the halls public tower-gates, mansions and open terraces intended for enjoying moonlight
மறைஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி
the sound of chanting vetams, and the bustle of festivals filling the streets.
கண்டவர்கள் மனம் கவரும் புண்டரிகப் பொய்கைக் காரிகையார் குடைந்து ஆடும் கலய நல்லூர் காண்
is Kalayanallūr where beautiful ladies bathe diving into the natural ponds where lotus flowers captivate the minds of people who look at them.

{7:16}__4+
{$} மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் (1) மகிழ்ந்தவள் கண்புதைத்தலுமே
as soon as the daughter of the mountain playing with Civaṉ close out of joy the eyes in the face by her hands wearing bangles.
வல்லிருளாய் எல்லா உலகுடன் தான்மூட
when impervious darkness enveloped all the worlds.
இருள் ஓடும்வகை நெற்றிஒற்றைக்கண் படைத்துஉகந்த உத்தமன் ஊர்வினவில்
if one asks the about the place of the supreme god who became eminent by creating a frontal eye in order to cause the darkness of flee away.
அலைஅடைந்த புனல்பெருகி
swollen with floods having waves
யானை மருப்பு இடறி
stumbling upon the tusk of elephants.
அகிலொடு சந்து உந்திவரும் அரிசிலின் தென்கரைமேல்
on the southern bank of the river, aricil which pushes eagle wood with sandalwood.
கலை அடைந்து கலிகடி அந்தணர் ஓமப்புகையால்
by the smoke issuing from the sacrifices performed by brahmins who drove away poverty by being well-versed in arts.
கணமுகில் போன்ற அணிகிளரும் கலயநல்லூர் காண்
is Kalayanallūr where the mass of smoke shoot up like the beauty of a collection of clouds (போன்றணி=போன்ற அணி)
[[Variant reading: (1) மகிழ்ந்தவன்]]

{7:16}__5+
{$} நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா அமரர் நிறைந்து குறைந்து இரப்ப நினைந்தருளி
thinking of their sufferings in his mind when the immortals beginning from Māl who is in a standing posture and Piramaṉ who is seated in a lotus, petitioned reduced in their greatness to redness their grievance, filling his presence to its utmost capacity
[[Māl has standing, sitting and reclining postures.]]
அவர்க்காய்
for their sake.
வெற்பு ஆர்வில், அரவு நாண், எரி அம்பால்
with a bow of a mountain containing the serpent as the bow-string and the fire as the arrow.
விரவார் புரம் மூன்றும் எரிவித்தவிகிர்தன் ஊர் வினவில்
if one asks about the place of Civaṉ who is different from the world, and had all the three cities of the enemies burnt.
சொற்பால, பொருட்பால சுருதி ஒருநான்கும் தோத்திரமும் பல சொல்லி
saying prayers and the four vētams containing different kinds of words and different kinds of meanings.
துதித்து
praising god.
இறைதன் திறத்தே கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர்கலைபயில் அந்தணர்வாழும் கலயநல்லூர்காண்
it is Kalayanallur where brahmins who study arts which contain good matter live and where people who read books on god and listen to talks on him are full everywhere.

{7:16}__6+
{$} பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்வி
in the sacrifice performed by takkaṉ who knew little about the greatness of Civaṉ.
பெருந்தேவர் சிரம் தோள் பல்கரம்கண்பீடுஅழியச்செற்று
having punished the eminent tēvar to lose the greatness of their head, shoulders, hands and eyes.
[[The god of sacrifice lost his head; intiraṉ, his shoulders; the sun, his teeth, the god of fire, his hands, the sun by name pakaṉ his eyes.]]
(1) மதிக்கலை சிதையத்திருவிரலால் தேய்வித்து
and causing the phases of the moon to be reduced and destroyed by the holy toe.
அருள்பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர்வினவில்
if one asks about the place where Civaṉ of increasing grace, dwells.
தெற்று கொடிமுல்லையொடு மல்லிகை செண்பகமும் திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்தென் கரைமேல்
on the shouthern bank of the river, aricil which brings floods whose waves dash and carry away the flowers of the intertwining creeper of arabian jasmine, jasmine and champak trees.
கற்றினம்
the herd of calves.
கரும்பின் முளைகறிகற்க
to learn to nibble the shoot of the sugar-cane.
கறவை கமழ்கழுநீர்கவர் கழனிக்கலய நல்லூர்காண்
is Kalayanallūr where in the fields the cows graze with avidity the fragrant purple indian lily flowers.
[[Variant reading: (1) மதிகலை]]

{7:16}__7+
{$} இலங்கையர்கோன் சிரம்பத்தோடு இருபது திண்தோளும் இற்று அலற ஒற்றைவிரல் வெற்பதன்மேல்ஊன்றி
fixing firmly a single toe on the mountain to make Irāvaṇaṉ, the King of the people of ilaṅkai to roar as his ten heads and twenty shoulders were crushed.
நிலம், கிளர், நீர், நெருப்பொடு, காற்று, ஆகாசமாகி
being the earth, rising water, fire, air, and the space.
நிற்பனவும் நடப்பனவும் ஆம் நின்மலன் ஊர் வினவில்
if one asks about the place of immaculate Civaṉ who is himself the immovable and movable things.
பலங்கள்பலதிரை உந்தி
pushing many fruits by its waves.
பருமணிபொன்கொழித்து
sifting big precious stones and gold.
பாதிரிசந்து அகிலினொடு கேதகையும் (1) பருங்கி
tearing off yellow-coloured trumpet flower trees, sandal wood, eagle wood and fragrant screw-pine trees.
[[பருங்கி:பல்பல இருங்கனி, பருங்கி மிக உண்டவை நெருங்கி இனமாய்க், கல் அதிர நின்று கருமந்தி விளையாடு காளத்திமலையே (campantar, tirukkālatti, tiruvirākam, 3.)]]
கலங்குபுனல் அலம்பி வரும் அரிசிலின் தென்கரைமேல் கயல் உகளும் வயல்புடை சூழ்கலயநல்லூர் காண்
is Kalayanallūr surrounded by fields where carps frisk and which is on the southern bank of the river, sricil in which turbid water flows with a great noise.
[[Variant reading: (1) பருகி]]

{7:16}__8+
{$} மால் அயனும் காண்பு அரிய மால்எரியாய் நிமிர்ந்தோன்
Civaṉ who rose high as a big column of fire which could not be seen by Māl and Ayaṉ.
வன்னி மதிசென்னிமிசை வைத்தவன்
placed leaves of indian mesquit and the crescent on his head.
மொய்த்து எழுந்த வேலைவிடம் உண்ட மணிகண்டன்
the god with a blue neck who consumed the poison which rose in the ocean spreading its head everywhere.
விடைஊரும்விமலன்
Civaṉ who rides on a bull.
உமையவளோடும் மேவிய ஊர்வினவில்
if one asks about the place of Civaṉ who is united with Umayavaḷ.
சோலைமலிகுயில்கூவ
when the cuckoos which are in large numbers sing in the gardens.
கோலம் மயில் ஆல
the beautiful peacocks dance.
சுரும்பொடு வண்டுஇசைமுரல
bees along with curumpu (a Superior variety of bee) hum like music.
பசுங்கிளிசொல் துதிக்க
and the green parrots praise god as they heard men praising him.
காலையிலும் மாலையிலும் கடவுள் அடிபணிந்து
falling at the feet of god both in the morning and evening.
கசிந்தமனத்தவர் பயிலும்கலயநல்லூர்; காண்
is Kalayanallūr where devotees of tender hearts live in large numbers.

{7:16}__9+
{$} பொரும்பலம் அதுஉடை அசுரன் தாரகனைப்பொருது
fighting with tārakaṉ, the acuraṉ, who was strong enough to give battle.
பொன்று வித்த (1) பொருளினை முன் படைத்து உகந்த புனிதன்
the pure Civaṉ who became eminent begetting the son who caused him to die.
கரும்புவிலின் மலர்வாளிக் காமன் உடல்வேவக் கனல்விழித்த கண்ணுதலோன் கருதும் ஊர்வினவில்
if one asks about the place of Civaṉ who opened the frontal eye to issue fire to burn the body of Kāmaṉ who has a bow of sugar-cane and arrows of flowers, which Civaṉ desires warmly.
இரும்புனல் வெண்திரை பெருகிஏலம் இலவங்கம் இருகரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென்கரைமேல்
on the southern bank of the river, aricil, which causes to wander back and forth, eroding both the banks, by its swollen floods and increasing white waves, cardamon and cloves.
[[Variant reading: (1) பொன்னினை]]
கரும்பு(ன்)னை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவளக்கவின் காட்டும் கடிபொழில் சூழ்கலயநல்லூர் காண்
is Kalayanallūr surrounded by fragrant gardens where the black mast-wood trees put forth buds like white pearls, blossom like gold and exhibit the beauty of gold.

{7:16}__10+
{$} தண்கமலப்பொய்கை புடைசூழ்ந்து அழகுஆர் தலத்தில்
in the proper and beautiful place surrounded by natural ponds having cool lotus flowers.
தடங்கொள் பெருங்கோயில்தனில் தக்கவகையாலே, வண்கமலத்து அயன் முன்னாள் வழிபாடுசெய்ய மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில்
if one asks about the place where the supreme god who dwelt being pleased with the worship done in the past by Ayaṉ in the fertile lotus, according to rules, in the big temple with the an extensive area.
வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின் விரைமலரும்விரவு புனல் அரிசிலின் தென்கரைமேல்
on the southern bank of the river, aricil which has water in which the fragrant flowers, east indian kino tree and common caung mix with white yak-tails and blue feathers of the peacock.
கண் கமுகின் பூம்பாளை மதுவாசம் கலந்த கமழ்தென்றல் புகுந்து உலவும் கலயநல்லூர்காண்
is Kalayanallūr where the fragrant balmy breeze of the south mixed with the smell of the honey found in the beautiful spathe of the areca-palm with joints, enters into the streets and moves here and there.

{7:16}__11+
{$} தண்புனலும் வெண்மதியும் தாங்கிய செஞ்சடையன்
Civaṉ who bears on his red caṭai cool water and a white crescent.
தாமரையோன் தலைகலனாக் காமரம் முன்பாடி
singing the melody musical mode, cīkāmaram, having the skull of Piramaṉ sitting in the lotus, as the bowl.
உண்பலிகொண்டு உழல் பரமன்உறையும் ஊர்
the place where the supreme god who wanders receiving alms for eating.
நிறைநீர் ஒழுகுபுனல் அரிசிலின் தென்கலயநல்லூர் அதனை
on Kalayanallūr which is on the southern bank of the river, aricil where plenty of water flows.
நண்பு உடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
the son of cataiyaṉ of good qualities who is friendly towards all and icaiñāṉi
[[Cataiyaṉ is the father's name; icaiñāṉi is the mother's name]]
நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந்து உரைசெய்பண்பயிலும் பத்தும் இவை (1) பத்திசெய்து பாடவல்லவர்கள்
those who are capable of singing all the ten verses which can be set to music, with piety, and composed by the chief of the people of nāvalūr and who has the name of ārūraṉ, with love.
அல்லலொடு பாவம் இலர் (தாம், ஏ)
will not have suffering and sins.
[[Variant reading: (1) பத்திசெய்துநித்தம் பாடவல்லார்]]