{7:4}__1+
{$} மலைக்கு(ந்) நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு அலைக்கும் கடல் அம் கரைமேல் மகோதை அணிஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
the father at añcaikkaḷam which has gardens full of beauty situated in makōtai which is on the shore on which the strong waves that are similar to one another and are as high as the mountain, seize the conches whose spirals turn to the right, dash, roar and drive them hither and thither!
[[மகோதை is the name of the city; añcaikkalam is the name of the temple there, சூத வகுள சரள நிரை துதையும் சோலை வளநகர்தான், கோதை அரசர் மகோதை எனக்குலவு பெயரும் உடைத்து உலகில் (periya pūrānam, Kaḻaṟiṟṟaṟivār purāṇam, 4).]]
தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே
what is the reason for wearing like a jewel a garland of skulls on the head?
சடைமேல் கங்கைவெள்ளம் தரித்தது என்னே
what is the reason for carrying the flood of Kaṅkai on the caṭai?
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே
what is the reason for tying the skin of a tiger which can kill?
அதன்மேல் கத (1) நாகம் நஞ்சு ஆர்த்தது என்னே
what is the reason for tying as a belt an angry cobra on that skin?
[[Variant reading: (1) நாகக்கச்சு]]

{7:4}__2+
{$} வன்திரை மடித்து ஓட்டந்து எற்றியிட வளர்சங்கம் அங்காந்து முத்தம் சொரிய
the maturing oysters which are dashed against by the strong waves running fast and curling, open their shells and pour out their pearls.
[[ஓட்டந்து-ஓட்டம் தந்து; ஊழி அந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்து இவ்உலகங்கள் அவைமூட (campantar, tiruvirapuram 6); உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன் ஓக்கவே ஓட்டந்தேன் (navukkaracar tiruvāimūr, 3,4)]]
அடித்து ஆர் கடல் அம்கரைமேல் மகோதை அணி ஆர்பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
the father at añcaikkaḷam surrounded by gardens full of beauty in the city of makōtai which is on the shore of the sea which dashes on the earth and roars!
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தைப் பூண்டது என்னே
what is the reason for adorning as an ornament a cobra catching hold of it and causing it to dance?
பிறங்கும் சடைமேல் பிறை சூடிற்று என்னே
what is the reason for wearing a crescent on the glittering caṭai?
பொடித்தான் கொண்டு மெய்ம்முற்றும் பூசிற்று என்னே
what is the reason for smearing the sacred ash on the whole body? (பொடித்தான்: the underlined letter is augmentation for rhyme).
புகர்ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே
what is the reason for riding on a beautiful bull desiring it?(புதர் brightness (புகர beauty)
[[புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம் (cilappatikāram, 9-10); புகர்-அழகு (Do. atiyārkkunallār)]]

{7:4}__3+
{$} சந்தித் தடமால் வரைபோல் திரைகள் தணியாது இடனும் கடல் அம்கரைமேல் அணி ஆர்பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
the father in añcaikkalam having gardens full of beauty on the shore of the sea where the waves similar to very big mountains in which bamboos grow, strike against the shore without being reduced in its force!
சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக் கனியே
you who are as sweet as the ripe fruit of emblic myrobalam to those who think of you and wake up from sleep!
சிறியார் பெரியார் மனத் தேறலுற்றால்
if small people are clear in their minds, about your greatness they will also become great (மனந் தேறலுற்றால் has become மனத்தேறலுற்றால்; the soft consonant being changed into a hard one).
முந்தித்தொழுவார் இறவார் பிறவார்
those who worship you desiring priority, will not die and will not be born again.
முனிகள் முனியே
you who are superior to all sages!
அமரர்க்கு அமரா
the immortal god superior to all so-called immortals!
அந்தித்தலைச் செக்கர்வானே ஒத்தி (ஆல்)
you have a beautiful form like the red sky in the evening to captivate the minds of devotees!
[[PP_(நெல்லிக்கனி):
நெல்லிக்கனியைத் தேனைப்பாலை நிறை இன்னமுதை அமுதின் சுவையை
(tiruvācakam, puṇarccip pattu, 4)]]
[[In the first lineமனத்தேற்லுற்றால் can be split into மனத்து ஏறல் உற்றால்; the meaning is if you settle in their minds.]]

{7:4}__4+
{$} மழைக்கு(ந்) நிகர் ஒப்பன் வன்திரைகள் வலிந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு அழைக்கும் கடல் அம்கரைமேல் மகோதை அணி ஆர்பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
the fathe at añcaikaḷam which has gardens full of beauty in makōtai on the sea-shore, where the strong waves which are like the clouds seize, dash against and made a loud noise taking conches whose spirals turn to the right!
இழைக்கும் எழுத்துக்கு உயிரே ஒத்தி(ஆல்)
you are like the vowel to the letters that are written, as you actuate and influence the movements of all living beings.
(1) இலையே ஒத்தி (ஆல்); உளையே ஒத்தி (ஆல்)
you appear to be non-existing; at the same time you are like an existing things.
குழைக்கும் பயிருக்கு ஓர் புயலே ஒத்தி(ஆல்); அடியார் தமக்கு ஓர் குடியே ஒத்தி(ஆல்)
you are like the cloud that cause the crops to sprout; you are like a noble lineage equal to the devotees as you are very near them.
[[variant readings: (1) இணையே; உனையே]]

{7:4}__5+
{$} நெதியம் பல செய்த கலச்செலவின் ஆடும் கடல்அம்கரைமேல் மகோதை அணிஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
the father at añcaikkaḷam which has gardens full of beauty in the city of makōtai on the sea-shore which is fit for bathing and which has many ships which have amassed wealth voyaging in the sea!
வீடின் பயன்என்
what is the benefit of salvation?
பிறப்பின் பயன் என்
what is the benefit of birth?
(without creating either of the two, salvation and birth what is the benefit of creating both which are quite opposite to each other?)
மதயானை நிற்க விடை ஏறுவது என்
what is the reason for riding on a bull when there is an elephant of must;
[[PP: பிடிமத வாரணம் பேணும் துரகம் நிற்கப்பெரிய, இடிகுரல் வெள்ளெருது ஏறுமிது என்னைகொல்
(nāvukkaracar, nākaikkāroṇam (2) 1)]]
[[PP: மல்தேரும் பரிமாவும் மதகளிறும் இவை ஒழியப் பெற்று ஏறும் பெருமானார்
(campantar, peruvēlūr, 10)]]
[[PP: கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே, இடபம் உகந்து ஏறிய வாறு
(tiruvācakam, tiruccāḻal, 15)]]
the vehicle of an elephant of Civaṉ is called ayirāvaṇam; it has one thousand tusk on each side;
[[PP: அயிராவணம் ஏறாது ஆனேறு ஏறி
(nāvukkaracar, tiruvarūr, 13-1)]]
[[PP: நிரைநிரை ஆயிரம் வகுத்தமாயிரு, மருப்பின் வெண்ணிறச் செங்கண் வேழமும்
(Kōyil naṉmaṇi mālai, 4-13-15)]]
கூடும் மலைமங்கை ஒருத்தியுடன் சடைமேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே
what is the reason for wearing on your caṭai a lady Kaṅklaiyaḷ, in adition to the lady who is the daughter of the mountain who is united with you?
பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என்
what is the gift you give to the poets who sing your praises?

{7:4}__6+
{$} உரவத்தொடும் கங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து ஏற்றி முழங்கி வலம்புரிகொண்டு அரவக்கடல் அம்கரைமேல் மகோதை அணிஆர் பொழில் அஞ்சைக் களத்து அப்பனே
the father at añcaikkalam which has gardens full of beauty in the city of makōtai on the shore of the noisy sea which brings with force conches and oysters containing perals inside dashing on the shore roaring and bringing conches spiralling to the right.
இரவத்து இடுகாட்டு எரிஆடிற்று என்னே
what is the reason for dancing in fire at night in the cremation-ground?
இறந்தார்தலையில் பலி (1) கொண்டல் என்னே
what is the reason for receiving alms in the skull of those who died?
[[கொண்டல்: a rare word;
வெண்தலையில் பலிகொண்டல் விரும்பினை (campantar, tiruvaḻ Udiputtur 10); உணங்கல் தலையில் பலிகொண்டல் என்னே (cuntarar, ariciṟkakaipputtūr, 5); தான் காவல் கொண்டல் தகும் (puṟapporuḷ veṇpāmālai 79)]]
பரவித் தொழுவார் பெறு பண்டம் என்னே
what is the thing that those who praise and worship you will joined hands get?
பரமா
god who is superior to all
பரமேட்டி
god who is in an exalted place above all
பணித்தருளாய்
you order
[[Variant reading: (1) கோடல்]]

{7:4}__7+
{$} நோக்கும் நெதியம்பல எத்தனையும் கலத்தில் புகப்பெய்துகொண்டு ஏற நுந்தி
propelling and filling as many enjoyable things as are found in the ships.
ஆர்க்கும் கடல் அம்கரைமேல் .... அப்பனே
the father at añcaikkaḷam having gardens full of beauty in the city of mahōtai on the shore of the sea which is roaring!
ஆக்கும் அழிவும் (ம்) ஐய நீ என்பன் நான்
I would certainly say that you are the cause for the creation and destruction of all things.
சொல்லுவார் சொற்பொருள் (அவை) நீ என்பன் நான்
I would certainly say that you are the words and their meaning, which people say as the cause for those things.
நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன்
I would say certainly that you are the tongue, the ear and eyes which are the sensory organs. (நாக்கு is a later usage; நா is the earlier word)
[[நாக்கு occurs in nāṉmaṇikkatikai; நாக்கின் அறிப இனியவை(75); நாக்கு அல்லது இல்லை நனி பேணுமாறே (vaḷaiyāpati (puṟattiraṭṭu, 130). The mentioned three include those two which are not mentioned;மூக்கு, மெய்]]
நலனே
all good things!
இனி உனை நான் நன்கு உணர்ந்தேன்
now I understood you well.

{7:4}__8+
{$} விளங்கும் குழைக்காது உடை (ய) வேதியனே
the brahmin who wears a shining men's ear-ring in the ear!
கடல்அம் கரைமேல் மகோதை அணிஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
the father in añcaikkaḷam having gardens full of beauty in the city of makōtai on the sea-shore!
இலங்கைக்கு இறை ஆயவனைத் தலை பத்தொடு தோள் பல இற்று விழக் கனுத்தாய்
you grew angry so that the ten heads and twenty shoulders of the King of ilankai were crushed and fell
நஞ்சு அமுதுஉண்டு கண்டம் கனுத்தாய்
your neck became black by consuming the poison that rose in the ocean as if you consumed nectar.
கடுகப் பிரமன்தலை ஐந்திலும் ஒன்று அறுத்தாய்
you cut off one of the five heads of Piramaṉ, quickly.
மனைவாழ்க்கையை வெறுத்தேன்
I detested the house-holder's life in my mind.
விட்டு ஒழிந்தேன்
I completely renounced it physically also.

{7:4}__9+
{$} வடிக்கின்றனபோல் சில வன்திரைகள் வலித்து எற்றி வலம்புரிகொண்டு அடிக்கும் கடல் அம் கரைமேல் மகோதை அணிஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
the father at añcaikkaḷam, which has gardens full of beauty in the city of makōtai on the shore of the sea which beats bringing conches whose spirals turn to the right, with a few of its strong waves as if filtering, pushing them dashing and roaring!
எம்பிரான்
our Lord!
பிரமற்கும் பிரான்
Lord of Piramaṉ also!
மற்றை மாற்கும் பிரான்
Lord of the other Māl also!
(1) பிடிக்குக் களிறே ஒத்து (ஆல்)
you are the male elephant to the female elephants (you are the unseen companion to all living beings, accompaying them)
நொடிக்கும் அளவில் புரம்மூன்று எரியச் சிலை தொட்டவனே
Civaṉ who made use of the bow to burn the three cities in an instant instant as the time measure of the snap of the thumb and middle finger!
உனை நான் மறவேன்
knowing all these things I will not forget you.
[[Variant reading: (1) பிடிக்கும்]]

{7:4}__10+
{$} எம்தம் அடிகள்(ள்), இமையோர் பெருமான், எனக்கு என்று அளிக்கும் மணிமிடற்றன், அம்தண் கடல் அம்கரைமேல் மகோதை அணிஆர்பொழில் அஞ்சைக்களத்து அப்பனை
about the father at añcaikkaḷam which has gardens full of beauty in makōtai on the sea-shore, who has a blue neck, who always grants his grace to me, the Lord of the celestials who do not wink, and our god.
மந்த(ம்) முழவும் குழலும் இயம்பும் வளர்நாவலர்கோன் நம்பி ஊரன் சொன்ன சந்தம் மிகு தண்தமிழ் மாலைகள் கொண்டு அடிவீழவல்லார்
those who are able to fall and prostrate at the feet of Civaṉ with the help of the cool garlands of tamiḻ which excel in rhythmic movement composed by ārūraṉ, nampi, the chief of the inhabitants of flourishing nāvalūr where the Muḻavu, and flute, are played in a low pitch.
தடுமாற்று இலர் (ஏ)
will have no confusion in mind.