- Patikam: {6:58}
- Talam: Tiru Valampuram
- Paṇ:
- Title: Tāṇṭakam
- Translation: V.M.Subramanya Ayyar
- Location: IFP (Indology Library)
- Catalogue Number: TA SAIVA 368
- Date: 1980
- Volume Number: 7
- Pages: 62-67
- Text entering: 1999/01/04 (Ramya)
- Further editing: 2002/07/01 (SAS & jlc)
[[This decade has been composed as the words
of a lady who fell in love with Civaṉ
when he came in procession in the streets
and followed him but could not go near him
and was in anguish]]
- {6:58}__1+
{$}
- மண் அளந்த ((மணி)) வண்ணரும் (தாம்)
மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று
- standing surrounded
by the celestials in heaven, the brahmin
(Piramaṉ) and Māl who has the colour of
sapphire and who measured the earth.
- கண் மலிந்த திரு நெற்றி உடையார்
- Civaṉ has a forehead
in which there is an expanding eye.
- ஒற்றைக் கத நாகம்
கை உடையார்; காணீர் அன்றே
- has a single angry
cobra in his hand; you please look at it.
- பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம்
- ladies whose words
are as sweet as melody-types like myself
and others
- பணிந்து இறைஞ்சி
- paying obeisance falling
at his feet and lying prostrate.
- தம்முடைய பின்பின் செல்ல
- followed his
wherever he went.
- மண் மலிந்த வயல்
புடைசூழ் மாடவீதி வலம்புரமே புக்கு அங்கு மன்னினாரே
- he stayed there
permanently entering into Valampuram itself
which has main round the temple, and which
is surrounded on all sides by fields which
have fertile soil.
- {6:58}__2+
{$}
- சிலை நவின்றது ஒரு கணையால்
புரம் மூன்று எய்த தீவண்ணர்
- Civaṉ who has the colour
of fire and who shot a single arrow fixed in the
bow, on the three cities
- [[ஒருங்கு அட மூ எயில் ஒற்றைக்
கணைகொள் சிற்றம் பலவன்
(Kōvaiyār, 55)]]
- சிறந்து இமையோர் இறைஞ்சி ஏத்த
- the celestials who
do not wink praise and pay obeisance to
him, appearing in their distinct forms.
- கொலை நவின்ற களியானை
உரிவை போர்த்து
- covering himself
with a skin of a rutting elephant trained
in killing
- கூத்தாடித்திரிதரும் அக்கூத்தர்
- that dancer who
wanders dancing.
- கலை நவின்ற மறையவர்கள் காணக் காண
- the brahmins who have
studied the arts were witnessing him many times
- கடுவிடைமேல் பாரிடங்கள் சூழ
- to be surrounded by the
pūtams, riding on a bull of quik gait.
- காதல் மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம்
- all the three including
himself, Kaṅkai and loving daughter of the
mountain.
- வலம்புரமே புக்கு அங்கே மன்னினார்
- stayed forever there in
valampuram itself entering into it.
- {6:58}__3+
{$}
- தீக் கூரும் திருமேனி ஒருபால்
- one half of the body
will shine like the fire.
- மற்றை அரி உருவம் ஒரு
பாலும் திகழந்த செல்வர்
- Civaṉ who has on the
other half the form of ari (Māl) which is
shining.
- [[This form is called caṅkaranārāyanar]]
- ஆக்கூரில் தான் தோன்றிப் புகுவார் போல
- pretending to enter into
the temple in ākkūr called self-existing shrine
- அப்பால் எங்கும் நோக்கார் ஒருவிடத்தும்
- would not look at any
other place after that
- [[ஓரிடத்தும்
has become
ஒருவிடத்தும்]]
- நூலும் தோலும் துதைந்து
இலங்கும் திருமேனி வெண்ணீறு ஆடி
- smearing his holy
form in which the sacred thread and
deer's skin are close to each other, and
shine
- வாக்கால்
மறை விரித்து 1. மாயம் பேசி
- expounding the vetam
by his speech and talking deceitful words.
- வலம்புரமே புக்கு அங்கே மன்னினார்
- stayed for ever in
valampuram itself entering into it.
- [[Variant reading: 1. வாயம்;
- But the reading
மாயம்
is found in verses No. 4,5,6, and 7;
- வாயம்
may be a scribal error]]
- {6:58}__4+
{$}
- மூவாத மூக்கப்பாம்பு அரையில்
சாத்தி
- wearing in the waist a
furious cobra that does not become old
- [[PP: மூக்கப் பாம்பைக்
கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர்
(cuntarar tirupparaṅkuṉṟam 2)]]
- மூவர் உரு ஆய முதல்வர்
- Civaṉ the first
cause, who assumes the forms of Piramaṉ, Māl
and urttiraṉ
- கோவாத எரி கணையைச்
சிலை மேல் கோத்த குழகனார்
- the youth who fixed
the burning arrow which was never fixed before
- குளிர் கொன்றை சூடி இங்கே
இந்நாள் போவாரைக்கண்டு அடியேன் பின்பின் செல்ல
- when I, his slave,
followed many times Civaṉ who went here today
having adorned himself with cool koṉṟai flowers
- புறக்கணித்து
- neglecting me
- தம்முடைய பூதம் சூழ
- to be surrounded by
his pūtams
- வாவா என உரைத்து மாயம் பேசி
- telling me follow me;
follow me and speaking deceitful words
- வலம்புரமே புக்கு அங்கே மன்னினார்
- entering into valampuram
itself stayed for ever there
- {6:58}__5+
{$}
- அனல் ஒரு கை (அது) ஏந்தி
- holding fire in one hand
- அதளினோடே ஐந்தலைய
மாநாகம் அரையில் சாத்தி
- putting on in the waist
a great cobra of five hoods with a skin.
- புனல் பொதிந்த சடைக்
கற்றைப் பொன் போல் பேனிப் புனிதனார்
- the spotless Civaṉ who
has a body glittering like gold, and a collection
of caṭai which holds within it water
- புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த
- to be worshipped by
the immortals with desire.
- சினவிடையை மேல் கொண்டு
- riding on an angry bull
- திருவாரூரும் சிரபுரமும் இடை
மருதும் சேர்வார் போல
- as if he was going
to tiruvārūr, cirapuram and iṭaimarutu
- மனம் உருக வளைகழல மாயம் பேசி
- speaking deceitful
words to make my heart melt and my bangles
to slip off as a result of it.
- வலம்புரமே புக்கு அங்கே மன்னினார்
- entering into
valampuram itself and stayed for ever there
- {6:58}__6+
{$}
- கறுத்தது ஒரு கண்டத்தர்
- Civaṉ has a neck which
is black in colour.
- காலன் வீழக் காலினால் காய்ந்து உகந்த காபாலியார்
- the Kāpāli who was
pleased to kill with the leg to cause the
Kālaṉ to fall on the ground.
- முறித்தது ஒரு தோல் உடுத்து
- wearing a skin which
was folded
- முண்டம் சாத்தி
- putting on a garland of skulls
- முற்றம் தோறும் முனி கணங்கள் புடை சூழ
- when the groups of
sages were surrounding him on all sides, in
every courtyard
- தெறித்தது ஒரு வீணையராய்ச் செல்வார்தம்
வாய்ச் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ
- the smile of the god who
was going with a vīṇai shooting it with the
finger and the thumb, reached me and fascinated
my mind.
- மறித்து ஒருகால் நோக்காதே
- without again looking
at me once.
- மாயம் பேசி
- speaking deceitful words
- வலம்புரமே புக்கு
- entering into valampuram itself
- அங்கே மன்னினார்
- stayed for ever there
- {6:58}__7+
{$}
பட்டு உடுத்து
- wearing a silk in the waist
- பவளம் போல் மேனி எல்லாம்
பசுஞ்சாந்தம் கொண்டு அணிந்து
- having adorned the whole
of his body which is red like coral, with cool
sandal-paste
- [[PP_EXT_(பசுமை - குளிர்ச்சி):
பசு நிலா விரிந்த பல்கதிர் மதியின்
(Akam, 57, 11)]]
- [[PP_EXT: பசு நிலா-குளிர்ந்த நிலா
(Akam, 57, old gloss)]]
- பாதம் நோவ இட்டு எடுத்து
நடம் ஆடி
- dancing fixing the legs
and raising them to ache.
- இங்கே வந்தார்க்கு எவ்வூரீர்
எம் பெருமான் என்றேன்
- I questioned Civaṉ who
came here, our Lord! which is your place?
- ஆவி விட்டிடுமாறு (அது) செய்து
- making my life to go
out of my body.
- விரைந்து நோக்கி
- looking hurriedly
- வேறு ஓர் பதி புகப் போவார் போல்
- like one who was going
to enter into a different place.
- வட்டணைகள் பட நடந்து, மாயம் பேசி
- walking, moving left
and right and speaking deceitful words
- வலம்புரமே புக்கு அங்கே மன்னினார்
- entering into valampuram
itself stayed for ever-there.
- {6:58}__8+
{$}
- பல்லார் பயில் பழனம் பாசூர் என்று
- telling me paḻaṉam where
many people gather and pācūr
- பழனம் பழமை சொல்லி நின்றார்
- Civaṉ stood telling me
about the antiquity of paḻaṉam
- நல்லார் நனி பள்ளி இன்று வைகி
- staying today in
naṉipalli where there are good people
- நாளைப் போய் நள்ளாறு சேர்தும் என்றார்
- said `we would reach
naḷḷāṟu tomorrow'
- சொல்லார் ஒரு இடமா
- he would not tell me
the particular place where he would be
- தோள்கை வீசி
- swinging the shoulders
and the hands.
- சுந்தரராய்
- having a beautiful form
- வெந்த நீறு ஆடி எங்கும்
- smearing all over his
body with well-burnt holy ash.
- மல் ஆர் வயல் புடை சூழ்
மாடவீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினார்
- entering into
valampuram itself which has main streets
and surrounded on all sides by fertile
fields, stayed for ever there
- [[மல் - மல்லல்;
Poetical licence which consists
in the shortening of a word by elision of one
or more letters in the end;
- மல்லல் வளனே
(tolkāppiyam, uṟi-iyal, 7)]]
- {6:58}__9+
{$}
- பொங்கு ஆடு அரவு ஒன்று
கையில் கொண்டு
- holding in the
hand an angry and dancing cobra.
- போர் வெண் மழு ஏந்திப் போகா நிற்பர்
- Civaṉ is going holding
a white battle-axe used in war
- தங்கார் ஒரு இடத்தும்
- will not stay in any
one place.
- தம்மேல் ஆர்வம் தவிர்த்தருளார்
- he is not gracious
enough to remove the love which makes me
hankering after him.
- தத்துவத்தே நின்றேன் என்பர்
- he will say I stand by truth.
- இவர் செய்கை ஒன்று ஒன்று ஒவ்வா; எங்கே
- his actions do not agree
with one another; what is their real nature'
(it is actions of mad people, which cannot be
classified in any way)
- என் கண்ணின் நின்று அகலா வேடம் காட்டி
- showing me the form which
does not vanish from my eyes.
- மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே
புக்கு அங்கே மன்னினார்
- stayed for ever entering
into valampuram itself which has main streets on
whose storeys clouds and moon seem to crawl, there
- [[மங்குல்மதி
the moon that dispels
darkness,
- மங்குல் ஞாயிற்று அணி வனப்பு
(paripātal, 13-1);
- மங்குல் ஞாயிறு இருளைக் கெடுக்கும்
ஞாயிறு (do. parimēlaḻakar)]]
- {6:58}__10+
{$}
- செங்கண் மால்
சிலை பிடித்து
- Māl with red eyes
holding a bow in his hand.
- சேனையோடும் சென்று சேது பந்தனம்
செய்து
- constructing a bride
having gone with the army.
- புக்கும்
- entering into ilaṅkai
- பொங்கு போர் பல செய்து
- having fought many
angry battle
- புகலால் வென்ற
- having become victorious to
save people who sought refuge in him.
- [[வென்ற
is used in the passive sense
வெல்லப்பட்ட;
- செங்கண்மால் வென்ற அரக்கன்
- is the syntactical link]]
- போர் அரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ
- the tall crowns of the
arakkaṉ who always wages war, to fall having
become powder
- அங்கு ஒருதன் திருவிரலால் இறையே ஊன்றி அடர்த்து
- pressing down slightly
with his single toe to Kayilai and crushing him.
- அவற்கே அருள் புரிந்த அடிகள்
- Civaṉ granted his grace
to the arakkaṉ himself
- இந்நாள் வங்க மலி கடல் புடை
சூழ் மாடவீதி வலம் புரமே புக்கு அங்கே மன்னினார்
- stayed for ever
entering into valampuram itself which has
main streets surrounded by sea on which
ships sail, in that shrine itself today.