- Patikam: {6:45}
- Talam: Tiru Oṟṟiyūr
- Paṇ:
- Title: Tirut Tāṇṭakam
- Translation: V.M.Subramanya Ayyar
- Location: IFP (Indology Library)
- Catalogue Number: TA SAIVA 368
- Date: 1984
- Volume Number: 14
- Pages: 48-54
- Text entering: 98/12/28 (Ramya)
- Further editing: 2002/01/15 (SAS & jlc)
- {6:45}__1+
{$}
- வண்டு ஓங்கு செங்கமலம்
கழுநீர் மல்கும் (1) மத மத்தம் சேர் சடைமேல் மதியம் சூடி
- wearing on the caṭai
which contains red lotus from which bees
fly high, purple indian water-lily, fertile
datura flowers, a crescent.
- திண் தோள்கள் ஆயிரமும்
வீசி நின்று திசை சேர நடம் ஆடி
- dancing to reach the
directions swinging all the strong thousand
shoulders.
- [[PP: ஆயிரம் பொன்வரை போலும்
ஆயிரம் தோள் உடையானும்
(Nāvukkaracar, Tiruvārūr (1) 8)]]
- சிவலோகனார்
- God who is in
Civalōkam
- ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார்
- the god who has a
bright colour and who is attached to Oṟṟiyūr.
- உலகுக்கு ஓர் உறுதி வேண்டி நஞ்சு உண்டார்
- consumed the poison
with the intention of doing good to the world
- கண்டேன் நான் கனவகத்தில்
- I saw him in my dream.
- கண்டேற்கு
- from me who saw him thus.
- என் தன் கடும் பிணியும்
சுடும் தொழிலும் கை விட்டவே
- my severe disease of
love towards him and the consequent burning
act of that disease, left me.
- [[Variant reading:
(1) மத மத்தஞ் செஞ்சடை]]
- {6:45}__2+
{$}
- ஆகத்து ஓர் பாம்பு அசைத்து
- tying on the chest a
cobra as garland.
- வெள்ளேறு ஏறி
- riding on a white
bull.
- அணி கங்கை செஞ்சடைமேல்
1. ஆர்க்கச் சூடி
- wearing on the red caṭai
beautifying Kaṅkai to make a big sound.
- பாகத்து ஓர் பொன் உடையார்
- Civaṉ has on a half a lady.
- ஆணும் ஆவர்
- is also male.
- பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி
- our supreme yōki who
wanders riding on a bull.
- காமத்து ஆல் ஐங்கணையான்
தன்னை வீழக் கனலா எரி விழித்த கண் மூன்றினார்
- has the third eye which
opened to issue fire being angry so that the
cupid who has five arrows which rejoice in
kindling love
- [[கண் மூன்றினார்
should be construed as
மூன்றாம் கண்ணினர்]]
- ஓமத்தால் நான் மறைகள்
ஓதல் ஓவா ஒளிதிகழும் ஒற்றியூர் உறைகின்றாரே
- the god who dwells in
oṟṟiyūr where the chanting of the four vētams do
not cease along with maintaining the
sacrifical fires.
- [[Variant reading:
1. அரங்கச்சூடி]]
- {6:45}__3+
{$}
- 1. வெள்ளத்தைச்
சடைமேலே விரும்பி வைத்தீர்
- you placed the flood
of the Kaṅkai on the caṭai, desiring it.
- வெண் மதியம் பாம்பும் உடனே வைத்தீர்
- you placed the white
crescent and the cobra together.
- கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர்
- you placed in the mind
the emotion of love which is secret.
- கண்டார்க்குப் பொல்லாது கண்டீர்
- it is an evil thing
for people who know that.
- எல்லே
- in the daytime.
- கொள்ளத்தான் இசைபாடிப் புலியும் கொள்ளீர்
- you do not receive even
the alms singing music to receive it.
- கோள் அரவும் குளிர் மதியும் கொடியும் காட்டி
- showing me the killing
cobra, cool crescent and a flag.
- உள்ளத்தை நீர் கொண்டீர்
- you took away my mind.
- ஓதல் ஓவா ஒளிதிகழும் ஒற்றியூர் உடைய கோவே
- the King who has oṟṟiyūr
which is shining with brilliance where the
chanting of the vētams does not cease.
- [[Variant reading:
1. வெள்ளத்தைத்
தடஞ்சடை வெள்ளத்தடஞ்சடை]]
- {6:45}__4+
{$}
- நரை ஆர்ந்த விடை ஏறி
- riding on a spotless
white bull.
- நீறு பூசி
- smearing himself with
sacred ash.
- நாகம் அரைக்குக் கச்சு ஆர்த்து
- fastening as a belt
in the waist a cobra.
- தலை கை ஏந்தி
- holding a skull in
the hand.
- உரையா வந்து இல்புகுந்து பலிதான் வேண்ட
- when he wanted alms
entering into the house coming there without
talking (silently)
- எம் அடிகள்! உம் ஊர்தான் ஏதோ? என்ன
- when I asked him my Lord!
which is your place?
- வேற்கண் நல்லாய்! விரையாது கேட்டியேல்
- good lady who has eyes
like the vēḷ! if you listen to me without hurry!
- விடும் கலங்கள் நெடுங்கடலுள்
நின்று தோன்றும் திரைமோதக் கரை ஏறிச் சங்கம் ஊரும் திருவொற்றியூர்
- he replied, `it is
tiruvoṟṟiyūr where the conches crawl on the
shore when the waves dash against them, and
the ships that are put out to the extensive
sea appear tall!'
- தீய ஆறே
- it was the result of
my evil act.
- [[The lady misunderstood oṟṟiyūr as the
place mortgaged to somebody with the right of
possession where could I meet him definitely?]]
- {6:45}__5+
{$}
- மத்தமா களியானை உரிவை போர்த்து
- covering himself with
the skin of a rutting and frenzied big elephant.
- வான் அகத்தார் தான் அகத்தார் ஆகி நின்று
- Civaṉ who should be
in civalokam, himself coming into my house.
- பித்தர் தாம் போல்
அங்கு ஓர் பெருமை பேசி
- talking about his
superiority like a mad man.
- பேதையரை அச்சுறுத்தி
- frightening ladies.
- பெயரக் கண்டு
- seeing him return.
- பத்தர்கள் தாம் பலர் உடனே கூடிப்
பாடிப் பயின்றிருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன
- when I questioned him which
is the place where the many devotees gather together
and live for a long time? you tell me
- ஒத்து அமைந்து உத்தரநாள் தீர்த்தம்
ஆக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே
- he replies `It is oṟṟiyūr
of shining brilliance where the idol is immersed
in a river or tank at the close of a festival
on the stār, uttaram, which is appropriate to
that shrine, what is this' (Is there no place
which he can claim for himself as of right?)
- {6:45}__6+
{$}
- கடிய விடை ஏறி
- riding on bull
of quick gait.
- காள கண்டர்
- Civaṉ who has a
black neck.
- கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி
- holding in each hand
a stag and a battle-axe.
- இடிய பலி கொள்ளார் போவார் அல்லர்
- will not receive alms
made of rice flour which is the main ingredient,
will not go from there.
- எல்லாம் தான் இவ்வடிகள் யார் என்பாரே
- all people doubted,
who is this god?
- வடிவுடைய மங்கையுந் தாமும்
எல்லாம் வருவாரை எதீர்கண்டோம்
- we met Civaṉ who was
coming himself along with the lady of excellent
beauty (வடிவுடை மங்கை
is the name of the
goddess in this shrine).
- மயிலாப் புள்ளே செடிபடு வெண்தலை
ஒன்று ஏந்தி வந்து
- coming into mayilappu
holding a white skull which has stench of flesh.
- திருவொற்றியூர் புக்கார்
- entered into tiruvoṟṟiyūr.
- தீயவாறே
- It was the result of my
evil act.
- {6:45}__7+
{$}
- வானவர்கள் எல்லாம் வல்லாராய்க்
கூடி
- all the celestials who are
capable joining together.
- வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார்
- will pay homage by
prostrating; will sing songs of benediction and
stand coming from their abode of heaven.
- எல்லே
- even in the daytime.
- எம் பெருமானைக் காணோம் என்ன
- will say `we could not
see our Lord'
- எவ்வாற்றால் எவ்வகையாற் காண
மாட்டார் (ஆதலின்)
- are not capable of seeing
him by any means and in any form (therefore)
- நல்லார்கள் நான் மறையோர் கூடி நேடி
- the good brahmin who
are well-versed in the four vetam joining
together and searching for him.
- அடிகேள் நாம் இருக்கும் ஊர் பணியீர் என்ன
- when they requested him
`God! declare the place where you stay'
- [[cf. நாம்
is used in the sense of second
person pronoun, you நாம் அரையாமத்து
என்னோ வைகி நயந்ததுவே (Kovaiyar, 164);
- நாம் என்னும் முன்னிலை உளப்பாட்டுத்
தன்மை உயர்வு தோன்ற முன்னிலைக்கண் வந்தது
(Do. perāciriyar);
- நங்கை இவர் என் நெறாநடல்
நடந்தவரோ நாம் என்ன?
(Kamparāmāyaṇam, cūrppaṇakaippaṭalam 119)]]
- ஒல்லை தான் திரை
ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றார்
- he replies our place
in oṟṟiyūr where the waves of the sea surge
on the shore and return quickly'.
- {6:45}__8+
{$}
- ஏடீ!
- my friend!
- நிலைப்பாடே நான் கண்டது கேளாய்
- you hear the place
where I saw Civaṉ dwelling permanently.
- நெருநல் நற்பகல் இங்கு ஓர் அடிகள் வந்து
- one god came here
yesterday in broad daylight.
- [[PP: நெருநலை; நெருநலையாய் இன்று ஆகி
நாளை ஆகி
(nāvukkaracar, {6-94_(1)}, niṉṟa tiruttāṇṭakam, 1)]]
- கலைப்பாடும் கண்மலரும்
கலக்க நோக்கி
- looked at me to make
the greatness of my dress and eyes which are
beautiful like flowers, to lose self-control.
- கலந்து பலியிடுவேன் எங்கும் காணேன்
- I went to place alms
mixing many things, I could not see him any where.
- சலப்பாடே
- this is definitely a decepact.
- இனி ஒரு நாள் காண்பேன் ஆகில்
- If I am likely to see
him one day hereafter.
- தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம்
வலைப்பாடே படத் தழுவிப் போகல் ஒட்டேன்
- I would not allow him to
go away from me, by embracing him to produce
the nature of the iron in the smithy, so that
my breasts would be concealed in his chest.
- ஒற்றியூர் உறைந்து இங்கு திரிவானையே
- the one who is wandering
here being the resident of oṟṟiyūṟ.
- {6:45}__9+
{$}
- மண் அல்லை
- you are not the
earth.
- விண் அல்லை
- you are not the sky.
- வலயம் அல்லை
- you are not the sun,
and the moon which are circular.
- மலையல்லை
- You are not the
mountains.
- கடல் அல்லை; வாயு அல்லை
- you are not the ocean,
you are not the air.
- எண் அல்லை; எழுத்து அல்லை
- you are not mathematics;
you are not grammer.
- எரியும் அல்லை
- you are not the fire.
- இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை
- you are not the night;
the day and all things.
- பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை
- you are not female; not
male; not hermaphrodite.
- பிறிது அல்லை-ஆனாயும் பெரியாய் நீ
- you who are great are
not other things also.
- நல்லார்க்கு உள் நல்லை
- you are beneficial at
heart to those who are good people.
- தீயை அல்லை
- you are not bad.
- உணர்வரிய ஒற்றியூர் உடைய கோவே
- the King who has oṟṟiyūr
as his place who is incomprehensible
- {6:45}__10+
{$}
- மரு உற்ற மலர்க் குழலி
மடவாள் அஞ்ச
- young lady who had
tresses of hair into which fragrant flowers
were tucked, to fear.
- மலை துளங்க
- the mountain to quake.
- திசை நடுங்க
- the people of the four
quarters to tremble with fear.
- செறுத்து நோக்கி
- looking at the mountain
with anger.
- செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள
- the strength of the cruel
arakkaṉ who came to fight, to perish
- திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி
- fixing one toe of the
holy foot to make him roar.
- உரு ஒற்றி
- looking attentively at
the form.
- அங்கு இருவர் ஓடிக் காண
- to see it both Māl and
Piramaṉ running, at the place.
- ஓங்கின அவ் ஒள் அழலார் இங்கே வந்து
- the god who rose as a
bright column of fire came here.
- திருவொற்றியூர் நம் ஊர் என்று போனார்
- and went away saying
`tiruvoṟṟiyūr is our place'.
- செறி வளைகள் ஒன்று ஒன்றாச் சென்ற
வாறே (கொடிது)
- it is a very cruel act
that the tight fitting bangles slipped off one
after another ( am I became lean)