{6:27}__1+
{$}
பொய்ம் மாயப் பெருங்கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள்
the virtuous acts which are wandering in the sea which has many transient, and vanishing kinds of things!
தீவினைகள்
sins!
நீங்கள் திருவே
are you really wealth?
[[you won't do me any good]]
நீங்கள் இமாயப் பெருங்கடலை அரித்துத்தின்பீர்க்கு இல்லையே கிடந்தது தான்
there is nothing lying for you who gnaw this body which is not permanent and is like the ocean.
[[தான் expletive.]]
யானேல்
speaking about myself.
வானோர் தம்மானை
the chief of the tēvar in heaven.
தலை மகனை
the Lord.
தண் நல் ஆரூர்த்தடங்கடலை
the big ocean in cool and good Ārūr.
தொடர்ந்தோரை அடங்கச் செய்யும் எம்மான் தன் அடித்தொடர்வான் உழிதர்கின்றேன்
I am wandering to follow the feet of my Lord who absorbs into himself those who follow him, to merge with him in bliss.
இடைஇலேன்
I have no time to argue with you,
[[இடை - சமயம்;]]
[[PP: உடையோர் போல இடையின்று குறுகி
(puṟam, 54-2);]]
[[PP: மெல்லியில், தளர் இடை அறியும் தன்மையள் கொல்லோ
(Maṇimēkalai 4-97-98)]]
கெடுவீர்காள்
you who are fit to perish!
இடறேன்மின் (ன், ஏ)
do not be an impediment.

{6:27}__2+
{$}
ஐம் பெருமா பூதங்காள்
the great five elements!
ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர்
you would not desire what the other among you desires.
ஈண்டு
here.
இவ்வவனி எல்லாம் உம்பரமே
all this world is in your power
உம் வசமே ஆக்கவல்லீர்க்கு இல்லையே நுகர்போகம்
to you who can subordinate everything under your charge there is no enjoyment of pleasure.
யானேல்
speaking for myself.
உம்பரும் ஆய், ஊழியும் ஆய், உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்தம் ஆம் வள்ளல்
the god of unbounded liberality who is in the centre of ārūr, who is himself the heaven, acons, and the seven worlds.
வானோர் தம் பெருமான் ஆய் நின்ற அரனைக் காண்பேன்
I shall always obtain vision of araṉ who is the Lord of the tēvar in heaven.
தடைப்படுவேனாக் கருதித் தருக்கேன்மின் (ன், ஏ)
Do not be proud that I could be hindered in my effort.
[[Variant reading: 1. இல்லையேல் நுகர் போகம்]]

{6:27}__3+
{$}
சில் உருவில் குறியிருத்தி நித்தல் பற்றிச் செழுங்கண்ணால் நோக்குமிது ஊக்கம் அன்று
it is not greatness of mind to look at things with the physical eyes daily with attachment, fixing our aim at some forms which may be destroyed.
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்ச பூதப்பளகீர்
guilty persons of the five elements which have transformed your form into many ways.
[[பளகீர் is addressed as உயர்திணை due to contempt]]
பாரேல் எல்லாம் உம் வசம் அன்றே
if it is the earth everything is under your command.
சொல் உருவில் சுடர் மூன்றாய்
being the three lights; ie., the sun, moon and the fire which have a form, and which are one of the rudimentary elements of the five senses.
உருவம் மூன்றாய்
being the forms Ayaṉ, ari and araṉ.
தூநயனம் மூன்றாகி
having three pure eyes.
ஆரூர் ஆண்ட நல் உருவின் சிவன் அடியே அடைவேன்
I shall approach the feet of Civaṉ who has a good form and who ruled in ārūr.
நும்மால் நமைப்புண்ணேன்
I would not subject myself to the troubles you inflict on me.
கமைத்து நீர் நடமின் (கள், ஏ)
you put up with my not being amenable to you, and go away from me.
[[கமைத்து a adverbial participle formed from க்ஷமை meaning patience.]]

{6:27}__4+
{$}
உன் உருவில்
in the body which is thought with attachment.
சுவை, ஒளி, ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது 1. குறிப்பாகும்
you who are the five senses, and their sensations which are taste, sight, touch, hearing and smell.
நுங்கள் மன் உருவத்து இயற்கைகளால் வைப்பீர்க்கு
to you who subjugate the mind by the natures of the permanent forms which create confusion.
ஐயோ! வையகமே போதாதே
alas! this world will not be sufficient.
யானேல்
If I speak about myself.
வானோர் 2. பொன் உருவை
the form made of gold belonging to the celestials.
தென் ஆரூர் மன்னுகுன்றை
the hillock that is permanent in ārūr in the south.
புவிக்கு எழில் ஆம் சிவக் கொழுந்தை
the tender twig of civam who is a beauty to the world.
புகுந்து என் சிந்தை தன் உருவைத் தந்தவனை
who fixed his form having entered into my mind.
எந்தை தன்னைத் தலைப்படுவேன்
I shall be in communion with my father.
துலைப்படுப்பான் தருக்கேன்மின் (ன், ஏ)
do not be arrogant in sending me away from him.
[[Variant reading: 1. குறிப்பாக வறைவீர் 2. பொன்னுருவத்]]

{6:27}__5+
{$}
துப்பினை முன் பற்று அறாவிறலே
the victory that is the cause for not giving up the attachment towards objects of enjoyment!
சோர்வுபடு சூட்சியமே
the deceit that is found out in the long run. (சூட்சி-சூழ்ச்சி)!
சுகமே
pleasures!
நீங்கள் 1. ஒப்பனையைப் பாவித்து இவ் உலகம் எல்லாம் உழறுமிது குறை முடிப்பீர்க்கு அரிதே
is it difficult of achievement of actions which you have in mind and wandering for it throughout this world, spreading the aritifical beauty?
என்றன் வைப்பினை
my treasure
பொன் மதில் ஆரூர் மணியை
the gem in ārūr which has a beautiful fortified wall.
வைகல் மணாளனை
the bride groom in vaikal māṭakkōyil.
எம்பெருமானை
our Lord
வானோர் தங்கள் அப்பனை
the father of the celestials.
2. செப்பட அடைவேன்
I shall approach correctly.
[[செப்பட செவ்விதாக; செப்படமுன்கையாப்ப (cīvakacintāmaṇi, 2665)]]
நும்மால்யானும் ஆட்டுணேன்
I too wont be tossed by you.
ஓட்டந்து ஈங்கு அலையேன் மின் (ன், எ)
Do not inflict on me suffferings, running towards me.
[[ஓட்டந்து: மடித்து ஓட்டந்து (cuntarar, tiruvañcaikkaḷam, 2)]]
[[Variant reading: 1. ஒப்பிணையை 2. செப்படைவடைவேன் செப்பிட வடைவேன்]]

{6:27}__6+
{$}
பொங்கு மதம் (ஏ)
increasing frenzy!
மானமே
self-respect carried to a fault as not to respect elders!
ஆர்வச் செற்றக்குரோதமே உலோபமே பொறையே
desires! hatred, anger, miserliness, patience! (and delusion of mind)!
நீங்கள் உங்கள் பெருமாநிலத்தின் எல்லை எல்லாம் 1. உழறுமிது குறைமுடிப்பீர்க்கு அரிதே
is it difficult for you who can finish business that has to be done, to wander to the end of your wide world?
யானேல்
speaking about myself.
அம் கமலத்து அயனொடுமால் ஆகி
being Ayaṉ who is in the beautiful lotus and Māl.
மற்றும் அதற்கு அப்பால் ஒன்றாகி
in addition to that being the one supreme being who is above all others.
அறிய ஒண்ணாச் செங்கனகக்குன்றை
God who is like the hill of pure gold who cannot be known mearly by knowledge of books.
சிவனை
who is called Civaṉ.
ஆரூர்ச் செல்வனைச் சேர்வேன்
I shall join the Lord in ārūr.
நும்மால் செலுத்துண்ணேன் (ஏ)
I shall not be driven by you.
[[Variant reading: 1. உழறுமது]]

{6:27}__7+
{$}
இடரே, பாவமே என மிக்க 1. துக்க வேட்கை(யே), வெறுப்பே என்று 2. அனைவீரும்
all of you who are, affliction sins excessive suffering, likes and dislikes!
உலகை ஒடிக்குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி ஙங்கள் குறி நின்றது அமையாதே
to you who run and harass people is it not enough that the worlds tremble with fear and stand according to your aim?
யானேல்
I for myself.
வானோர் அடையார் தம் புரம் மூன்றும் எரி செய்தானை
Civaṉ who burnt the three cities of the enemies of the celestial beings.
அமரர்கள் தம் பெருமானை
the Lord of the immortals.
அரனை
who has the name of araṉ.
ஆரூர் உடையானைக் கடுகச் சென்று அடைவேன்
I shall reach quickly the Lord who has ārūr as his abode.
நும்மால் ஆட்டுண்ணேன்
I shall not be tossed by you.
ஓட்டந்து ஈங்கு அலையேன் மின் (ன், ஏ)
Do not cause me suffering by running towards this place.
[[Variant reading: 1. துட்கவேட்கை 2. அணைவீரிவ்வுலகை, அனைவீரிவ்வுலகை]]

{6:27}__8+
{$}
விரைந்து ஆளும் நல்குரவே
poverty which gains mastery over people quickly!
செல்வு
wealth!
[[PP_X_(செல்வு - செல்வம்):
செல்வையாயின் செல்வை ஆகுவை
(Puṟam, 70, 16)]]
[[PP: செல்வாயசெல்வம் தருவாய்நீயே; செல்வாய்த் திருவானாய் நீயே
(Nāvukkaracar, tiruvaiyāṟu tāṇṭakam (2) 8, neyttāṉam, tāṇṭakam, 3)]]
பொல்லாவெகுட்சியே
wicked wrath!
மகிழ்ச்சியே
pleasure!
வெறுப்பே
displeasure!
நீங்கள் 1. நிரைந்து ஓடி மாநிலத்தை அரித்துத் தின்பீர்க்கு 2. இல்லையே நுகர் போகம்
are there not objects of enjoyment to you who eat away by gnawing the wide world by running combining together?
யானேல்
I for myself.
வானோர் கரைந்து ஓடவரும் நஞ்சை அமுது செய்தகற்பகத்தை
Civaṉ who is like the divine Kaṟpakam tree and who consumed the poison which rose to make the tēvar run weeping.
தற்பரத்தை
the supreme being above life.
திருவாரூரில் பரஞ்சோதி தனைக்காண்பேன்
I shall obtain vision of the supreme divine light in tiruvārūr.
நும் பண்பில் படேன்
I shall not become a victim of your nature.
பரிந்து ஓடி ஒட்டந்து
running very fast.
2. பகட்டேன் மின் (ன், ஏ)
Do not allure me.
[[Variant reading: 1. நிரந்து 2. இல்லையே நுகர்போகம் 3. பகட்டன் மின்னே]]

{6:27}__9+
{$}
மூள்வாய் தொழிற் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள்
the five sense organs who enter upon your business with earnestness and deceit, and make noise.
[[முகரிகாள் can be taken as the corruption of முகடிகாள் and translated as the goddesses of misfortune; an abusive term.]]
முழுதும் இவ்வுலகை ஓடி நாள் வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடத்துகின்றீர்க்கு அமையாதே
is this world not enough for you who run throughout this day and exercise your sovereign power daily?
[[நாள் வாயும் = நாள் தோறும் (daily);
நாள் வாயும் நல் அறம் செய்வார்க்கு (paḻamoḻi; 6)]]
யானேல்
I for myself.
வானோர் நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற நெடுந்தூணை
the tall pillar that supports the top of the extensive heaven of the celestial beings.
பாதாளக் கருவை
the embryo of the lower world.
ஆரூர் ஆள்வானைக் கடுகச் சென்று அடைவேன்
I shall reach god who reigns in ārūr, going quickly to him.
நும்மால் ஆட்டுணேன்
I would not tossed by you
ஓட்டந்து ஈங்கு அலையேன் மின் (ன், ஏ)
do not inflict on me sufferings, hurrying towards me.
[[Variant reading: 1. நாள்வாயின்]]

{6:27}__10+
{$}
சுருக்கமொடு பெருக்கம் நிலை 1. நித்தல் பற்றித்துப்பறையென்று அனைவீர் (உம்)
all of you who are shortage, abundance, daily state of opportune moment and poverty.
இவ்வுலகை ஓடிச் செருக்கி மிகை செலுத்தி உம் செய்கை வைகல் (உம்) செய்கின்றீர்க்கு அமையாதே
will it not be enough for you who do daily what you are capable of committing excesses being proud and running throughout the world.
யானேல்
speaking about myself.
மிக்க தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன் தன் பாடல் கேட்டு
pressing down the feet to make the body of the arakkaṉ who lifted the mountain out of haughtness, to become enfeebled and then hearing his music.
இரக்கம் எழுந்தருளிய எம் பெருமான் பாதத்து இடை இலேன்
I am without intermission at the feet of our Lord who condescended to take compassion on him.
கெடுவீர்காள்! இடறேன் மின் (ன், ஏ)
O you who will meet with ruin! do not be an impediment on my path.
[[variant readings : 1. நிற்றல் 2. துப்பா வொன்றனைவீர்;
This decade was composed in pukalūr by nāvukkaracar when Civaṉ put to test his devotion in many ways; as ārūr is mentioned in every verse it is included in the decade on ārūr.]]