{6:21}__1+
{$}
ஆக்கூரில் தான் தோன்றி அப்பனார்
the father who is self-existing in Ākkūr
முடித்தாமரை அணிந்த மூர்த்தி (போலும்)
has a body which has adorned its head with the lotus flower
மூவுலகும் தாம் ஆகி நின்றார் (போலும்)
has himself pervaded the three worlds.
கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் (போலும்)
has eyes that can be compared to the fragrant lotus.
கல்லலகு பாணி பயின்றார் (போலும்)
practised dancing to the measurement of time of the instrument Kallalaku
கொடித்தாமரைக்காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் (போலும்)
is the youth who felt happy with the menial services rendered by the devotees who search for the abundance of the lotus flower which is a water creeper
[[God accepts the service of the devotees not minding the value of the thing offered, but the love with which it is given.]]
அடித்தாமரை மலர் மேல் வைத்தார் (போலும்)
placed the lotus of his feet on the heart which is like the lotus bud.
[[All the போலும் in this verse and the following verses are expletives]]

{6:21}__2+
{$}
ஆக்கூரில் தான் தோன்றி அப்பனார்
see 1st verse
ஓதிற்று ஒரு நூலும் இல்லை (போலும்)
there is no work that Civaṉ learnt in the ordinary way, taught by a teacher ( He learnt everything without being taught)
உணரப்பாடதது ஒன்று இல்லை (போலும்)
there is nothing which has not been understood by him (He understands everything without anybody's help).
காதில் குழை இலங்கப் பெய்தார் (போலும்)
wore in his ear a men's ear-ring to shine brilliantly.
கவலைப் பிறப்பு இடும்பை காப்பார் (போலும்)
will save us from the suffering of birth which has cares and anxieties
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் (போலும்)
revealed along with the vētams the six aṅkams.
விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார்(போலும்)
has a neck that is black being surrounded by the poison.
ஆதிக்கு அளவு ஆகி நின்றார் போலும்
he is the measure of all things (Civaṉ is the origin of all other things, but he has no origin for himself).

{6:21}__3+
{$}
ஆக்கூரில் தான் தோன்றி அப்பனார்
see 1st verse.
மை ஆர் மலர்க் கண்ணாள் பாகர் (போலும்)
has as his half a lady whose eyes are like the blue nelumbo flowers
[[மை ஆர் may also mean eye coated with collyrium; then மலர் will mean lotus]]
மணி நீல கண்டம் உடையார் (போலும்)
has a blue neck resembling the sapphire
நெய் ஆர் தரி சூலம் கையார் (போலும்)
holds in his hand a trident which is well greased
[[நெய் ஆர் is a generic epithet]]
நீறு ஏறு தோள் எட்டு உடையார் (போலும்)
has eight shoulders smeared heavily with sacred ash.
வை ஆர் மழுவாள் படையார் (போலும்)
has the weapon of a battle axe which is very sharp
வளர் ஞாயிறு அன்ன ஒளியார் (போலும்)
has the brilliance of the rising sun.
ஐவாய் அரவம் ஒன்று ஆர்த்தார் (போலும்)
tied a cobra of five heads.

{6:21}__4+
{$}
ஆக்கூரில் தான் தோன்றி அப்பனார்
see 1st verse.
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் (போலும்)
is capable of wielding the white battle-axe whose sharp end is shining.
வஞ்சக் கருங்கடல் நஞ்சு உண்டார் (போலும்)
consumed the deceitful poison that rose in the black sea
[[வஞ்சம் qualifies நஞ்சு its deceit consists in being cool to the touch; and taking away the life if one swallows it.]]
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் (போலும்)
wears on his chest on which the holy ash is shining, a sacred thread of three strands
பூங்கங்கை தோய்ந்த சடையார் (போலும்)
has a caṭai soaked in the beautiful Kaṅkai.
கடி விளங்கு கொன்றை அம் தாரார் (போலும்)
wears a garland of koṉṟai whose fragrance is prominent.
கட்டங்கம் ஏந்திய கையார் (போலும்)
holds in his hand a weapon by name Kaṭṭankam.
[[கடங்கம் என்பது மழு; இது கட்டங்கமென நின்றது (Kōvaiyār, 242, pērāciriyar)]]
அடி விளங்கு செம் பொற் கழலார் (போலும்)
wears Kaḻal made of fine gold, which is prominent in the feet.

{6:21}__5+
{$}
ஆக்கூரில் தான் தோன்றி அப்பனார்
see 1st verse.
ஏகாசம் ஆம்புலித்தோல் பாம்பு தாழ இடு வெண்தலை கலனா நாளும் ஏந்தி
daily holding a white skull that has been thrown away, when the cobra hangs low from the tiger's skin which is the upper garment
[[ஏகாசம் upper garment;]]
[[PP: ஏகாசம் இட்ட இருடிகள்
(tiruvācakam tiruvuntiyār, 20)]]
மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை புனல் ஆர் சடை முடிமேல் புனைந்தார் (போலும்)
adorned on the caṭai coiled into a crown on which there is plenty of water, a garland of white flowers which completely destroyed the brilliance of the cloud.
[[மேகாசம் = மேக + ஆசம்; ஆசம் is a corruption of ācam, which is itself a corruption of the sanskrit word `hācam'; the smile of the cloud is its lightning; it is compared to the colour of the caṭai]]
மாகாசம் ஆகிய வெண்ணீரும் தீயும், மதியும், மதி பிறந்த விண்ணும், மண்ணும், ஆகாசம் என்ற இவையும் ஆனார் (போலும்)
is all these things i.e. the white water which is born in the sky, fire, moon, the sky where the moon rises, the earth and the space.
[[மாகாசம் the vast sky; in காசம் the first letter is elided;
காசம்: ஆகுபெயர், விசும்பிற்றுளிவீழின் அல்லால் (Kaiṟaḷ, 16);
விசும்பு: ஆகுபெயர் (do. parimēlaḻakar);
வறிது நிலை இய காயமும் (puṟam, 20-4, 30-4)]]

{6:21}__6+
{$}
ஆக்கூரில் தான் தோன்றி அப்பனார்
see 1st verse.
மாது ஊரும் வாள் நெடுங்கண் செவ்வாய் மென்றோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் (போலும்)
embraced the daughter of the mountain who has soft shoulders, red lips, and long eyes like sword which express affection!, in his chest.
மூதூர் முதுதிரைகள் ஆனார் (போலும்)
became the old places and old seas
[[திரை (wave);
ஆகுபெயர்; it stands for sea]]
முதலும் இறுதியும் இல்லார் (போலும்)
has no beginning and end (has no birth and death)
தீது 1. ஊர நல்வினையாய் நின்றார் (போலும்)
stood as virtuous actions to overpower and conquer sins.
திசை எட்டும் தாமே ஆம் செல்வர் (போலும்)
is the god who is himself the eight directions.
ஆதிரை நாளா அமர்ந்தார் (போலும்)
he desired as his favourite star, Ātirai.
[[மன்னிய நாள் மீன் மதிகனலி என்றிவற்றை, முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும், ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயர்வு மால், ஊர்திரை நீர் வேலி உலகு (muttoḷḷāyiram)]]
[[Variant reading: 1. ஊரா]]

{6:21}__7+
{$}
ஆக்கூரில் தான் தோன்றி அப்பனார்
see 1st verse.
மால் யானை மத்தகத்தைக் கீண்டார் (போலும்)
tore the head of a big elephant.
மான் தோல் உடையா மகிழ்ந்தார் (போலும்)
dressed himself with joy in a deer's skin.
கோலானைக் கோ அழலால் காய்ந்தார் (போலும்)
destroyed with the fire that issued from the frontal eye, (Kāmaṉ) who had (five) arrows (of flowers)
குழவிப் பிறை சடைமேல் வைத்தார் (போலும்)
placed a very young crescent on his caṭai.
காலனைக் காலால் கடந்தார் (போலும்)
conquered Kālaṉ with a kick of his leg.
கயிலாயம் தம் இடமாக் கொண்டார் (போலும்)
had as his abode Kayilāyam
ஆல் ஆன் ஐந்து ஆடல் உகப்பார் (போலும்)
will enjoy being bathed profusely in the five products of the cow.

{6:21}__8+
{$}
ஆக்கூரில் தான் தோன்றி அப்பனார்
see 1st verse
கண் ஆர்ந்த நெற்றி உடையார் (போலும்)
has a forehead in which there is an eye.
காமனையும் கண் அழலால் காய்ந்தார் (போலும்)
burnt by the fire issuing from the frontal eye even Kamaṉ (who was victorious with other persons.)
உண்ணா அரு நஞ்சம் உண்டார் (போலும்)
consumed the rare poison which others could not consume.
ஊழித்தீ அன்ன ஒளியார் (போலும்)
has a brilliance that is like the submarine fire
[[ஊழித்தீ a submarine fire in the shape of a mare's head, believed to consume the world at the end of a yukam; takkayākapparani, 67, old commentary.]]
எண்ணாயிரம் கோடி பேரார் (போலும்)
has names running to eight thousand crores; the idea is that he has countless names;
[[பேரெணாயிரகோடி தேவர் பிதற்றி நின்று (cuntarar, tiruppāṇṭikkoṭumuṭi, 9)]]
ஏறு ஏறிச் செல்லும் இறைவர் (போலும்)
is the god who goes everywhere riding on a bull.
அண்ணாவும் ஆரூரும் மேயார் (போலும்)
dwells in aṇṇamalai and ārūr.

{6:21}__9+
{$}
ஆக்கூரில் தான் தோன்றி அப்பனார்
see 1st verse.
கடி ஆர் தளிர் கலந்த கொன்றை மாலை, கதிர் போது, தாது அணிந்த கண்ணி (போலும்)
has a garland of koṉṟai flowers which have fresh tender leaves, shining buds, and a chaplet made beautiful by pollen.
நெடியான் சதுர் முகனும் நேட நின்ற நீல நற்கண்டத்து இறைவயார் (போலும்)
is the god with a blue neck, who was searched by the tall Māl, and Piramaṉ of four faces.
படியேல்
if we try to describe his body.
அழல் வண்ணம்
it has the colour of fire.
செம்பொன் மேனி
is like the superior gold.
மணி வண்ணம் தம் வண்ணம் ஆவார் (போலும்)
his colour is like the colour of the ruby.
[[வருவார் விடை மேல் மாதோடும் மாணிக்கத்தின் மலை போல (cuntarar, tirukkaṭavur mayāṉam, 1)]]
அடியார் புகலிடம் (அது) ஆனார் (போலும்)
is the place of refuge for his devotees.

{6:21}__10+
{$}
ஆக்கூரில் தான் தோன்றி அப்பனார்
see 1st verse.
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்தவர்கள் தாம் தேடிக் காணார் நாணும் புரையான் எனப்படுவார் தாமே (போலும்)
is himself praised as the superior god who is the cause for feeling shame, when Māl who is lying on the ocean and Piramaṉ who is seated in a red lotus who can ponder well, searched for him and could not find him.
போர் ஏறு தாம் ஏறிச் செல்வார் (போலும்)
will go riding on a bull capable of fighting.
காலத்தீ அன்ன கனலார்
being angry like the submarine fire that destroys the world.
கரையா வரை வில்லே, நாகம் நாணா, வரையார் மதில் எய்த வண்ணர் (போலும்)
is the god who has the nature of shooting an arrow on the forts of the enemies, with the aid of a stiff mountain bending it into a bow and fixing in it a serpent as a bow string.