{5:91}__1+
{$} என் ஆவியே
my soul.
ஏஇலானை
Civaṉ who has no superior master to him.
என் இச்சை (1) அகம்படிக் கோயிலானை
who dwells in the temple of my heart which is filled with love.
குணப்பெருங்குன்றினை
who is like a mountain having all good qualities (god having noble character)
வாய்இலானை
who has as his house the mouths of those who are praising him.
மனோன்மனியைப்பெற்ற தாயிலானைத்தழுவும்
will mix with Civaṉ who has no mother and be got maṉōṉmaṇi (Umai)
[[PP: இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன்
(tiruvācakam, tiruppoṟcuṇṇam, 13)]]
[[அரனுக்குத் தாயும் மகளும் நல்தாரமும் ஆவளே
(tirumantiram)]]
[[PP: தவளத்த நீறு அணியும் தடந்தோள் அண்ணல் தன் ஒரு பால் அவள் அத்தனாம் மகனாம் தில்லையான் (Kovaiyār, 112)]]
[[PP: கனகம் ஆர் கவின் செய்மன்றில், அனக நாடகற்கு எம் அன்னை, மனைவி, தாய், தந்தை, மகள்
(Kumarakuruparar, citamparacceyyuṭkōvai, 33).]]
[[Variant reading: (1) அகம்படிகோயிலானை]]

{5:91}__2+
{$} முன்னை ஞான முதல் தனிவித்தினை
the unequalled seed who is the cause for the wisdom to come into existence, before all other things.
பின்னை ஞானப்பிறங்கு சடையனை
who has a brilliant caṭai who is the embodiment of wisdom, after.
என்னை ஞானத்து இருள் அறுத்து ஆண்டவன் தன்னை
he admitted me as his protege by completely dispelling the darkness of ignorance which hides the wisdom.
ஞானத்தளையிட்டு வைப்பனே
I shall place him in my heart by binding him with the rope of wisdom.

{5:91}__3+
{$} சில ஞானிகள் ஞானத்தால் தொழுவார்
some people endowed with divine knowledge will worship Civaṉ following the path of spiritual wisdom.
நான் ஞானத்தால் உனைத்தொழுவேன் அலேன்
I have not the capability to worship you following the path of spiritual knowledge.
ஞானத்தாய்
Civaṉ who is the embodiment of divine knowledge!
ஞானத்தால் தொழுவார் தொழக்கண்டு
seeing your being worshipped by people who follow the path of divine knowledge.
உனைநானும் தொழுவனே
I too worship you.
[[Variant reading: (1) ஞானத்தாலுனை]]

{5:91}__4+
{$} புழுவுக்கும் குணம் நான்கு
the worm has four qualities.
[[உண்டியும் புணர்ப்பும் ஆகி (tattuvārāyar aṭaṅkai muṟaināṉmanimālai, 33-29-30)]]
(1) எனக்கும் அதே
I also have those four qualities
புழுவுக்கும் (2) இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை
the worm has not the evils that I have.
புழுவினும் கடையேன்
I am lower than even the worm
புனிதன்தமர் குழுவுக்குச் சென்று கூட எவ்விடத்தேன்
where am I to mix with approaching the group of devotees of Civaṉ who is pure?
[[variant readings: (1) எனக்குமஃதே (2) புழுவுக்கீங்கு]]

{5:91}__5+
{$} மனிதர்காள்
men!
மலையே வந்து விழினும் (1) நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்
Do not get perplexed even if the mountain comes down rolling and falls on you, from your steadfastness of devotion;
[[வெறுதிர் can be used in the affirmative sense only. I think the reading should be பெறாதிர்; but it can give a negative meaning implied by the modulation of voice]]
தலைவன் ஆகிய ஈசன் தமர்களைக் கொலைசெய்யானைதான் கொன்றிடுகிற்குமே
is the elephant which is capable of killing, kill the devotees of Civaṉ who is the master
[[This verse is born out of his personal experience when he was about to be trampled under the feet of an elephant]]
[[Variant reading: (1) நிலையில்நின்றீர்]]

{5:91}__6+
{$} கற்றுக் கொள்வன வாய் உள; நா உள
we have mouths and tongues which are of help to learn the names of Civaṉ.
இட்டுகொள்வன பூ உள நீர் உள
to bathe Civaṉ there is plenty of water; to adorn him there are flowers.
கற்றைச் செஞ்சடை யான் உளன் நாம் உளோம்
Civaṉ who has a collection of red caṭai is there to grant his grace; we are born here to receive his grace.
நமனால் முனிவுண்பது எற்றுக்கு (ஓ)
why should we incur the anger of Namaṉ (god of death)?

{5:91}__7+
{$} மனிதர்காள்
men of this world!
இங்கேவம்
please come here
[[வம்: verb on the imperative mood and plural
கதுமெனக் கரைந்து வம்மெனக் கூஉய் (porunaraṟṟuppaṭai, 101);
ஏனோரும் தம்மென (maturaikkāñci, 747)
என்புழித்தம்மென்பது தாரும் எனநின்றாற்போல வம்மென்பது வாரும் என்னும் பொருட்டாய் நின்றது (Do. nacciṉārkkiṉiyār)
ஒன்று சொல்லுவேன்
I shall tell you one thing which will benefit you.
கனிதந்தால் கனி உண்ணவும் வல்லிரே
if you are given a fruit you are able to eat it.
புனிதன், பொற்கழல் ஈசன் எனும் கனி, ஏசற்றவர்கட்கு சாலவும் இனிது
the fruit that is Civaṉ who wears a golden kaḻal and who is pure, is very sweet for those who long for it
[[PP: ஏசறா நினைந்திட்டு;
இடரேபெருக்கி ஏசற்று
(tiruvācakam, arutpattu, 10; pirārttaṉaipattu, 7)]]
[[PP: this word has another form as வேசறுதல்;
ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை விருதி கண்டாய்
(Do. nīttal viṇṇappam, 50)]]

{5:91}__8+
{$} என்னை ஏதும் அறிந்திலன்
I did not know the truth about myself.
எம்பிரான் தன்னை நானும் முன் ஏதும் அறிந்திலேன்
in the early days of my life I did not know even a little about our master.
என்னைத்தன் அடியான் என்று அறிதலும்
as soon as he recognised me as his protege.
தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே
I too recognised Civaṉ as my master?

VMS9.
This verse is lost.

VMS10 / {5:91}__PIFI9+
{$} தெள்ள
when Civaṉ made my mind clear.
தேறித்தெளிந்து
recognised myself and became clear
தித்திப்பது ஓர் உள்ளத்தேறல்
the sweet honey that is produced in the mind.
அமுதஒளிவெளி
the space that has the rays of nectar.
கள்ளத்தேன், கடியேன், கவலைக்கடல் வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்தது (ஏ)
how was that honey produced in me who is full of deceit, fit to be despised, and has an ocean full of water which is only cares and anxieties?